Home » Archive

Articles tagged with: Sujatha

சிந்தனைகள், நகைச்சுவை »

[4 Nov 2009 | 3 Comments | ]

நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும், ஆலோசிக்கும், படிக்கும் விஷயங்கள் எச்சகச்சம்…சாரி…எக்கச்சக்கம். ஆனால் அவை அனைத்தை பற்றியும் பக்கம் பக்கமாக எழுதுவது என்பது என்
போன்ற சின்ன(உருவத்திலும் வயதிலும் அல்ல) எழுத்தாளர்களுக்கு..சாரி..இதுக்காக நீங்க கையில் கிடைக்கிறத எல்லாம் எடுக்க வேண்டாம்..நான் மாத்திடுறேன்…என் போன்ற எழுத்தாளர் ஆக துடிக்கும் எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.
அதனால் இந்த முறை அவ்வப்போது மனதில் உதித்த கேள்விகள், எண்ணங்கள், சம்பவங்கள் என்று இந்த பதிவை ஒரு மாதிரியா ஒரு வழியா போட்டுரலாம்னு இருக்கேன். இனி ம.உ.கே மற்றும் ம.உ.எளின் பட்டியல்:
*********************************************************************************ஏழு மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா தொடரை என் மூன்று வயதை தொட முயன்று கொண்டிருக்கும் மகனுடன் பார்ப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் பார்க்கும் போது வந்த காட்சி மதுராபுரி அரசன்…இல்லை அரக்கன் கம்சன் வசுதேவர்-தேவகி (க்ருஷ்ணனின் உண்மையான பெற்றோர்) …