Articles tagged with: Shane Warne
ஐபிஎல்2, கிரிகெட் »
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சரி கொல்கத்தா நைட் ரைடைர்ஸுக்கும் சரி முந்தாநாள் அவங்க நாள் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு நேர் மாறாக அது டிவில்லியர்ஸ் மற்றும் யூசுப் பதானின் நாள் என்று கூட குறிப்பிடலாம்.
சனாகண்ணன் அவரது பதிவில் சொன்னது போல ஃப்ளிண்டாஃபை ஏழரைகோடிக்கு வாங்கியது மிகப்பெரிய முட்டாள்தனம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. கடைசியாக கிடைத்த தகவலின் படி அவருக்கு காலில் காயம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக ஊருக்கு கிளம்புவதாக படித்தேன். அது உண்மையாக இருந்தாலும், இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் இழப்பு இது என்று சொல்ல முடியாது. கடந்த மூன்று ஆட்டங்களிலும் அவர் பந்து வீசுவதையும் பேட்டிங் ஆடுவதையும் பார்த்தால் “கிளம்பு காத்து வரட்டும் “ என்று சொல்லும் அளவுக்கே உள்ளது. ஏதோ தென் ஆப்பிரிக்காவை சுற்றி பார்க்க …
