Home » Archive

Articles tagged with: Chennai

அனுபவம் »

[14 Jun 2009 | No Comment | 193 views]

கொஞ்சம் பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் வேலை நிமித்தமாக பிரயாணப்பட்டேன். அதற்காக பெரிதாக ஒன்றும் பிரயத்தனப்படவில்லை என்றாலும், இப்போதிருக்கும் நிலையில் ”போக முடியாது உன்னால ஆனத பார்த்துக்கோ” என்று கொக்கரிக்க முடியாது. சொல்லி பார்க்கலாம், போயேத்தீரணும் என்று சொன்னால் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
அப்படியொரு நிலைமையில்தான் என் இந்த மும்பைப் பயணம், வேலை நிமித்தமாக. இங்கு வந்து ஒப்படைத்திருக்கும் வேலையை பார்த்தவுடன் தான் தெரிகிறது அது வேலை நிமித்தமாக இல்லை பெண்டு எடுக்கும் நிமித்தமாக என்று.
இதற்கு முன்னமே சில பல பயணங்கள் இந்தியாவிற்குள்ளும் இந்தியாவிற்கு வெளியேயும் செய்திருந்ததால், முன் அனுபவம் காரணமாக என்னிடம் எந்த ஒரு பரபரப்பையும் இருக்கவில்லை. வழக்கமான பயணங்களைவிட இந்த பயணத்திற்கு முன் என் வீட்டுக் கடமைகள் (2 வயது மகனை முட்ய்திருத்தகம் அழைத்து சென்று முடிதிருத்தம் செய்தது, அதே இ.வ.ம …