Articles tagged with: Chennai
அனுபவம் »
ஒரு வழியாக டாக்ஸிகள் அணிவகுத்து நின்ற இடம் கண்ணுக்கு தெரிய…ஆனந்தம் அடைந்தேன். போய் கூப்பிட்டேன். ஒருத்தரும் வருகிறபாடில்லை. ”அடடா இன்னும் முடியலயா” என்று மனதுக்குள் புலம்பினேன்.
பதிலெல்லாம் முரட்டுத்தனமாகத்தான் வந்தது டாக்ஸி ஓட்டுனர்களிடமிருந்து. ஒருவர் மட்டும் அதே முரட்டுத்தனத்துடன் வரும் ஆனா வராது என்று ”என்னத்த” கண்ணைய்யா ரேஞ்சில் சம்மதித்தார். எனக்கு இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. அப்படியன்ன பெரிய…என்று படித்துவிட்டு புலம்புபவர்கள் ஒரு முறை மும்பையில் அனுபவித்தால் புரியும். இதற்கு முன்பு ஒரு முறை மஸ்கட் பயணத்தின் போது சுமார் 2 க்ளோமீட்ரு மட்ட மத்தியான மிடில் ஈஸ்ட் வெய்யிலில் நடந்த அனுபவம் இருக்கிறது. வருகிறேன்..(இந்தியில்தான்) ஆனால் பாந்தரா வரைதான் வருவேன் அதற்குமேல் வேறு வண்டி பிடித்து செல்லவேண்டும் என்று அக்ரிமெண்ட் மற்றும் மீட்டர் போட்டு ஏற்றிக்கொண்டார். அங்கிருந்து கிளம்பினால் போதுமென்ற மனநிலையில் இருந்ததால் “சரி” …
