Home » Archive

Articles tagged with: Airtel super singer

சினிமா இசை, தொ(ல்)லைக்காட்சி »

[20 Jan 2009 | 6 Comments | 110 views]

நான் என்னுடைய அடுத்த பதிப்பு வியாழக்கிழமை எழுதலாம் என்று இருந்தேன். ஆனால் நேற்று பார்த்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்னை உடனடியாக எழுதும்படி செய்துவிட்டது.
 வழக்கம் போல எத செய்தாலும் எப்படி பாடினாலும் குத்தம் கண்டு பிடிச்சே பொழப்ப நடத்தறது நம்ம உன்னிக்கும் சுஜதாவுக்கும் ஒண்ணும் புதுசு கெடையாது.
 உன்னி சார் கொஞ்ச நாள் கச்சேரில பிஸியா இருந்துட்டு இப்பதான் நிகழ்ச்சிக்கு ரிடர்ன் ஆகியிருக்காரு. இந்த ப்ரோக்ராம்ல ஒரு விஷயத்தை பாராட்டியே ஆகணும். வாராவாரம் எதாவது புதுசா பண்றாங்க.
 இந்த வாரம் “கவி வாரம்”. அதாவது க.தாசன், வாலி மற்றும் வை.முத்து பாடல்களை தேர்வு செய்து போட்டியாளர்கள் பாட வேண்டும்.
 போட்டியாளர்களில் ஒருவர் (ரவி) என்னுடன் பணி புரிபவர் என்று சொல்லி கொள்வதில் மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்கிறேன். நேற்று விஜய்நாராயணன் வித்தியாசமான மிக கருத்துள்ள பாடலை பாடினார். அது “அண்ணன் …