Home » Archive

Articles tagged with: Airtel super singer

அனுபவம், சினிமா இசை, தொ(ல்)லைக்காட்சி, பொது »

[12 Apr 2009 | 24 Comments | 707 views]

”வணக்கம் அண்ட் வெல்கம் டூ ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008, இது தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல்”. இந்த வாசகத்தை தெரியாத தமிழர்கள் மிகச் சிலரே. நீண்ட நாட்களாக நடந்து கொண்டிருக்கும் இந்த சிறந்த பாடகர் போட்டி இப்பொழுது கிட்டதட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இனி பார்க்க போகும் வாரங்கள் அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுக்களே. மாவு நைஸாக வரவில்லை என்று இதனிடயேயும் வைல்ட் கார்டு என்று ஒன்றை புகுத்தி இன்னும் அரைக்கலாம். அதை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
என்ன பேசினாலும் எழுதினாலும், நாம் திட்டிக் கொண்டே அதையும் பார்ப்பது உறுதி. ஸ்டார் விஜய் போலவே மற்ற தொலைக்காட்சிகளிலும் இது போன்ற போட்டிகள் நடைப்பெற்று கொண்டிருந்தாலும், தரம் ஸ்டாரிலேயே சிறந்ததாக இருக்கிறது. இதற்காக நிகழ்ச்சியின் இயக்குனரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
எப்போதாவது மற்ற சானல்களில் காமெடி க்ளிப்ஸ் போரடித்தால் சன் …