தொ(ல்)லைக்காட்சி, நகைச்சுவை »

[6 Dec 2009 | 23 Comments | 1,830 views]
ரகஸியாவின் ரகசியங்களும் சர்ஃப் எக்ஸல் கறையும்

ரகஸியா தன் அனைத்து ரகசியங்களையும் அந்த வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் ஊருக்கே வெட்டி வெட்டி காட்டியதை சன் தொலைக்காட்சி கொஞ்சமும் வெட்டாமல் காட்டிக் கொண்டிருந்தது. டிவியை பார்த்துக் கொண்டிருந்த என் 3 வயதும் நிரம்பாத மகன் ரொம்ப அக்கறையோடு…

Featured, சிந்தனைகள் »

[2 Dec 2009 | 14 Comments | 511 views]

அரசியல் தலைவர்கள் தொன்றுதொட்டு மக்களிடையே செல்வாக்கை பெறவேண்டும் என்று உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அது இப்போது தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்துவிட்டிருக்கிறது. மூன்றாம் தரமான யுக்தியை கையாண்டு தமது கட்சி/ படங்களுக்கு வியாபாரத்தை கூட்டவும் தம்மை தாமே பிரபலபடுத்திக் கொள்ளவும் பல அறிக்கைகள் விடுவது என்பது நாளேடுகளிலும், வலைதளங்களிலும் கண்கூடு.
இதில் இவர்கள் பல வருஷங்களாக தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் ஆத்திக கண்டனம்.  ஆத்திகம் வலுப்பெற்றிருக்கும் இந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நாத்திகம் பேசிக் கொண்டிருக்க முடியும்.
இப்படி இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கும் இந்தியாவின் பெயர் ”ஹிந்துஸ்தான்” என்று இருந்ததை பேசியோ அல்லது எழுதியோ அழித்துவிட முடியாது. இருந்தாலும் திருடனை பிடிக்கிறேன் என்று கிளம்பி முட்டி கை கால் முதற்கொண்டு அனைத்திலும் பாண்டேஜ் போட்டு கொள்ளும் வடிவேலு காமெடி காட்சி போல …

Featured, சிறுகதை »

[27 Nov 2009 | 8 Comments | 524 views]
பழைய ரெக்கார்ட்ஸ்

இன்றைக்கு என்றுமில்லாமல் மகிழ்ச்சியாக இருந்தேன். கூடவே ஒரு சின்ன பதட்டம். மதியம் வரச் சொல்லியிருக்கிறார்கள். யார் வரச்சொன்னார்கள்? உங்களுக்கு தெரியவேண்டியது அவசியம். கல்யாணத்திற்கு பெண் பார்க்க போகிறேன். இது முதல் அனுபவம் அல்ல. இதற்கு முன் இரண்டு பெண்களை பார்த்தேன். எனக்கு பிடிக்காதது எதுவுமே அவர்களிடத்தில் இல்லை. இருந்தும் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை போலும். ஒருவர் தனியாக பேசவேண்டும் என்றார். தேவையொன்றுமில்லை என்று நிராகரித்துவிட்டேன். அதனாலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாம். அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சார், இதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள். அவர்களுக்கும் ரசனை ஆசை எல்லாம் இருக்குமல்லவா. அதை மதிக்கிறேன். அதை விடுங்கள். இன்று ஒரு பெண் பார்க்கப் போகிறோம். நிச்சயம் நான் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், இது …

அனுபவம் »

[22 Nov 2009 | 16 Comments | 595 views]
சுமைதாங்கி

நர்ஸ் நான் உள்ள இருக்கலாமா?
நீங்க அவங்க ஹஸ்பண்டா? அப்படீன்னா இருக்கலாம்.
”அப்பாடா ஹஸ்(பெ)பண்டா இருந்ததற்கு தகுந்த சன்மானம் இங்கதான் கிடைச்சிருக்கு” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.
அங்கு என் மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. என் அம்மாவும் அவள் அம்மாவும் என்கூடவே உள்ளே வர முற்பட, நர்ஸ் தடுத்தார். வாயிற்கதவும் என் மனைவி படுத்திருந்த படுக்கையும் பக்கத்திலேயே இருந்ததால் என் மனைவு அதை கவனித்தாள்.
உள்ளே சென்றதும் ”வேணும்னா அம்மாவை இருக்கச் சொல்லுங்கோ. எங்கம்மா என்னையும் சேர்த்து பயமுறுத்திடுவா. நீங்க வேணும்னா போய் குளிச்சிட்டு எதாவது சாப்பிட்டு வாங்களேன்” என்ற போது சத்தியமாக நான் புல்லரித்துப் போனேன். அந்த வலியிலும் என்னைப் பற்றின அவளின் கவலைகள் என்னை நீரில் கலந்த சர்க்கரையை விட மிகவேகமாக கரைத்துவிட்டது. மனைவியாகப்பட்டவள் அடுத்த தாய் என்பது எவ்வளவு …

Featured, கற்றதும் பெற்றதும், பொது »

[13 Nov 2009 | 5 Comments | 651 views]
ஜிலேபி – வாழ்க்கை (சிறு)வரலாறு

பி.கு.: சர்க்கரை வியாதியஸ்தர்கள் இந்தப் பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது படித்த பிறகோ, ஒரு இன்சூலின் போட்டுக் கொள்ளும்படி தாழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அலுவலகத்தில் அன்று அதிகமான (அன்று மட்டும்தானா?) வேலையில்லாததால் என்னுடைய <a href=”http://www.manalkayiru.com/>”(ப)நடிக்கலாம் வாங்க”</a> கதையில் வந்த கதாநாயகனை போல் அல்லாமல், அன்று சீகிரமே வீடு வந்து சேர்ந்துவிட்டேன். இன்று என்ன எழுதலாம்/படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு வந்தபோது, பாக்கெட்டில் பொறியில் மாட்டிக்கொண்ட எலியை போல என் 4 மாசக் குழந்தை ஐஃபோன் கத்த ஐ! ஃபோனு என்று வண்டியை ஓரங்கட்டி எடுத்து பார்த்து, ப்ரியா என்று கத்த ஹலோவளாவினேன். காலையில் அலுவலகம் கிளம்பும் போது எனக்கும் அவளுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம்.
“வந்துண்டிருக்கீங்களா? ரொம்ப பசிக்கறது”
“ஹும்!, வரும்போது ஏதாவது வாங்கிண்டு வரேன். என்ன வாங்கட்டும்?”
“ஆனந்தபவன்லேர்ந்து சமோசா வாங்கிண்டு வறீங்களா?…இருக்குமா?”
“இருக்கும்…பார்க்கறேன்…சரி. இல்லைன்னா?”
”இல்லைன்னா……..நீங்களே வேற ஏதாவது நல்ல காரமா …