தலைப்பை பார்த்து நான் ஏதோ அந்த காலத்து மனுஷன், நடிகர் ஸஹஸ்ரநாமத்தை பற்றியோ அல்லது அவருடன் நான் பழகிய நாட்களைப் பற்றியோ எழுதப்போகிறேன் என்று தப்பாக நினைத்துக் கொள்ளவேண்டாம். நான் சொல்ல வரும் ஸஹஸ்ரநாமம் எம்.எஸ் பாடிய, பல பேரின் வீட்டில் மாலைவேளைகளிலும், சில பல வைணவ கோவில்களிலும் ஒலிக்குமே அதை பற்றித்தான்.