“அது சரி இப்ப எல்லாமே மாறிடுத்து. அந்த காலத்துல அவரோட அப்பா ஆத்துக்கு வந்து இரண்டு வார்த்தை பேசிட்டு கையில கொடுத்திட்டு போவார். இப்ப சாப்பாடுலேர்ந்து பால் பாக்கெட் அலர்ட் வரைக்கும் எல்லாமே ஆட்டோமேடிக் ஆயிடுத்து. யாருக்கு ஓட்டுன்னு டிசைட் பண்ணிட்டயா? ஐசிஐசில ஆன்லைன்ல செக் பண்ணு ஓட்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பா. யாரு அதிகமா குடுக்கறாளோ அவாளுக்குதான் போடணுமாம், எலக்ஷன் கமிஷன் நேத்து டிவில சொன்னா”
”ஜெய் ஸ்ரீராம்” என்று ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரைப் போல உச்சரித்தார். 5.1 ஸ்டிரியோவில் கூட கேட்கமுடியாத உன்னத குரல். நான் சாஷ்டாங்கமாக ரோடு, குப்பை ஏதும் பாராமல் காலில் விழுந்தேன். என்னைத் தொட்டு எழுப்பினார். மெய் சிலிர்த்தது. பிறந்ததின் பயனை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன். பேச்சு வரவில்லை எனக்கு. “தீர்க்காயுஷ்மான் பவ” என்று தெய்வீகக் குரலில் ஆசீர்வதித்தார்.