Home » Archive

Articles in the General Category

General, நகைச்சுவை, பொது »

[9 Apr 2009 | 10 Comments | 227 views]

போன வாரம் ஒரு நாள் என் நண்பனுக்கு அலைபேசினேன். நாங்க கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில என் அலைபேசியை தவறவிட்டுவிட்டேன். அதை பத்தி கேட்கலாம் என்று டயலினால், ஹலோ ட்யூன்ஸ் போட்டு வைத்திருந்தான். அது “போனால் போகட்டும் போடா” பாட்டு. அவனுக்கு பழைய தத்துவப்பாடல்கள் மீது இருக்கும் மோகம் தெரிந்திருந்தாலும், அந்த சமயத்தில் எனக்கு நக்கல் செய்யும் ஒன்றாகவே இருந்தது. தொலைஞ்சது நம்ம அலைபேசிதானே. இவனுக்கு என்ன போச்சு. அவனுக்காகவே ஒரு ஹலோ ட்யூன்ஸ் பிடிக்கணும். அவன் அத நினைச்சு ஆபிஸ் லீவு போட்டு அழணும். இதுதான் என் இப்போதைய வாழ்க்கையின் லட்சியம். ச்…ச்….சே….என்ன ஒரு உயரிய லட்சியம்…..போடா….வேறே ஏதாச்சும் வேலை இருந்தா பாரு என்று மனசாட்சி செவுளுள டபுள் ஸ்ட்ராங்க ஒரு அறை விட்டு சொன்னதால, தற்காலிகமா ஒத்தி வெச்சுட்டேன். கூடிய சீக்கிரம் மனசாட்சியிடம் பெர்மிசன் …