Articles in the General Category
General, அனுபவம், ஐபிஎல்2, கிரிகெட், பொது »
கண்ணா வாய்க்கன்றது ஒரு வட்டம் மாதிரி. அதுல கெலிக்கறவன் தோத்துப்போவான் தோத்தாங்கோலி கெலிப்பான். பிரியிதா? அதான் மாமு இந்த ஐபிஎல்ல நட்ந்துகினுகீது.
பின்ன போனதபா எம்மா டக்கரா ஆடி அந்த ராஜஸ்த்தான் பயலுங்க கப்பட்ச்சானுங்க (பிர்ச்சி படி நைனா).
ரெண்டாநாள் ஆட்டத்துல டெல்லி டேர் டெவில்ஸ்க்கும் புஞ்சாப் (இப்படிதான் சொல்லணும்னு எங்கண்ணன் போயிக்காட்டு சொல்லிச்சு) ராஜாக்களும் ஆடினாங்க.
ஆட்ட ஆரம்பத்தில பு.ரா. பசங்க போட்ட போடுல நம்ம டெ.டே அணி கதிகலங்கி போயிருச்சு. என்னா அடின்னு நம்ம வடிவேலு அண்ணன் சொல்றாப்புல சும்மா வெலுத்து வாங்கிடுச்சுங்க.
சேவாக்க அப்பப்ப ஒரு ஒரு சிக்ஸருக்கும் கேமிரால காமிக்கும் போது எனக்கென்னவோ இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே தீரணும்னு மனசுக்குள்ள புழுங்கினா மாதிரியே இருந்துச்சு. சேவாக் அடிக்க ஆரம்பிச்சா பு.ரா. அணி வாக்கிங் போகவேண்டியதுதானே.
ஆனாலும் தண்ணியில நேத்து பு.ரா அணிக்கு ஏதோ கண்டம் இருந்திருக்கும்னு …
