Articles in the ஐபிஎல்2 Category
ஐபிஎல்2, கிரிகெட் »
சில தினங்களுக்கு முன் சென்னையில் மெட்ரோ ரயில் ஒன்றை மர்ம மனிதன் ஒருவன் இயக்கி அதை தெய்வமே என்று நின்று கொண்டிருந்த சரக்கு (அந்த சரக்கு இல்லைங்க!) ரயில் மீது மோதியதை படித்திருப்பீர்க்ள்.
அது அழிவுக்கு இழுத்துச் சென்ற செய்தி. இதே போல இங்கே ஐபிஎல்லிலும் நடந்தது. ஆனால் இது ஆக்கப்பூர்வமாக அமைந்தது. கேட்பாரற்று தவறான (தோல்வியை நோக்கி) பாதையில் போய்க் கொண்டிருந்த சென்னை எக்ஸ்பிரஸ்ஸை சரியான பாதையில் கொண்டு சென்று வெற்றிக்கு வழிவகுத்தது.
அந்த ரயிலை இயக்கிய அந்த மர்ம மனிதன் யாரென்று கண்டுபிடிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. அவர் யார் என்பதும் எனக்கு தெரியாது. ஆனால் இந்த ரயிலை இயக்கியவர் ஜகாதி. இவர் கோவா மாநிலத்தை சேர்ந்தவர். ரயிலை (போலிங்) ஓட்டத் தெரிந்தவர்.
டாஸ் ஜெயித்து ஆட தீர்மானித்தது மட்டுமின்றி கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்றும் …
