Home » Archive

Articles in the இந்திய சினிமா Category

இந்திய சினிமா, சிந்தனைகள், நகைச்சுவை, பொது »

[16 Feb 2009 | 10 Comments | 230 views]

வேலண்டைனெஸ் டே பழக்கம் வருஷா வருஷம் அதிகமாகி வர்றதால நம்ம கோலிவுட்டும் இதை சரியா பயன்படுத்திக்க போறதா ஒரு தகவல் கிடைச்சுது. வழக்கம் போல நம்ம அணிலார் தான் நியூஸ் கொண்டு வந்தார்.
வேலண்டைன்ஸ் டே காரணமா ரோஜாப்பு ஏற்றுமதி அதிகரித்ததை கண்ட நம் திரைத்துறையினர் இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேலண்டைன்ஸ் டே அடிப்படையில பல கழுத்தறுப்புகள் (ஆமாங்க, படங்கள் தான்) தயாரிச்சு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப் போறதா எடுத்த முடிவுதான் இப்ப கோடம்பாக்கம் முழுவதையும் நாரடிச்சுக்கிட்டு இருக்கு. அவசர அவசரமா நடிகர்களும் பட டைட்டில கூட புக் பண்ணிட்டாங்களாம். ஒரு சில படங்களின் பெயர்கள் உங்களுக்காக சொல்றேன் இத வெளில சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கி என் கையை அணிலார் எச்ச கொய்யாவால் நிரப்பிட்டு போயிட்டார். நீங்களும் வெளில சொல்லாதீங்க ப்ளீஸ்:
விஜய், நயன்தாரா நடிக்க பிரபுதேவா …