Articles in the அரசியல் Category
அரசியல், நாட்டு நடப்பு, பொது »
முந்தையப் பதிவில் ஆளும் கட்சியையும் அதன் தோழமை கட்சியான திமுகாவையும் சில பல காரணங்களுக்காக திட்டித் தீர்த்ததன் விளைவோ என்னவோ எனக்கும் என் குடும்பத்தார் அனைவருக்கும் ஓட்டு இல்லை அன்று கைவிரித்து விட்டனர்.
வாக்காளர் அட்டை வைத்திருக்கிறேன். அது வோட்டுப் போடுவதை தவிர எல்லாவற்றிற்கும் ஆவணமாக பயன்படுகிறது. நான் புதிய வீட்டிற்கு குடியேறியதால் இந்த குழப்பம். ஒரு விதத்தில் தேர்தல் ஆணையத்தின் பிழை இது என்றாலும் அதில் ஒரு இந்திய பிரஜையாக எனக்கும் பங்கு உண்டு.
நான் வாக்காளர் அட்டையில் என் முகவரியை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு எங்கு செல்ல வேண்டும், யாரை பார்க்க வேண்டும்? இவை எதுவுமே நான் தெரிந்து கொள்ள முற்படவில்லை. இது என் தவறே. நல்ல கட்சி ஆட்சியமைக்க வேண்டும், நாம் விரும்பும் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கான எந்த …
