About Me

அடியேன் சென்னையிலிருந்துச் சிறுவன்
ஸ்ரீனிவாஸ ராமானுஜனின் புத்திரன்
கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவன்
செம்மொழியாம் தமிழில் இன்னும் பாமரன்
வருங்காலத்தைப் பற்றி யோசிப்பவன்
நிகழ் காலத்தை பற்றி வாழ்பவன்
வாழ்க்கையின் நிஜங்களை நேசிப்பவன்
நகைச்சுவை உணர்வு உள்ளவன்
பிறர் நகைப்பதற்கு வாழ்பவன் அல்லன்
பிறர் நகைச்சுவையை ரசிப்பவன்
எண்ணக் கனவுகளில் மிதப்பவன்
இசையில் என்னை மறப்பவன்
அவ்வப்போது அதில் குளிப்பவன்
இயற்கையகவே இயற்கையை அனுபவிப்பவன்
தோல்வியே வெற்றிக்கறிகுறி என்றுணர்ந்தவன்
இன்னல்களே இன்பத்தினாரம்பம் என்றறிந்தவன்
மிக எளிதில் அணுகக்கூடியவன்
மொத்ததில் பழகுவதற்கு தித்திப்பானவன்
அண்டத்தை காப்பவன் அந்த அனந்தன்
அவனுக்கு அடிமை இந்தச் சிறியன்
அவனை மட்டுமே அன்றாடம் தொழுபவன்
அவனின்றி அணுவுமசையாதென்பதை நம்புபவன்

எனக்கு பிடித்ததெல்லாம் மற்றவர்களின் சந்தோஷமும் அதை அவர்கள் பக்க்கத்தில் உட்கார்ந்து அவர்களுடன் பகிர்தலும். சில சமங்களில் சிலருக்கு சின்னதாய் ராமனுக்கு அணிலைப் போலே என்னால் முடிந்த அளவிற்கு உதவியிருக்கிறேன். எனக்கு மனிதர்களை படிக்க தெரிந்திருப்பதாய் என் நண்பன் ஒருவன் கூறிவான்.

ஒருவரின் சந்தோஷம் வெறும் வெற்றியைக் கொண்டாடபடும்ப்போது மட்டும் வெளிப்படுவதில்லை. அவன் சோகத்தை இன்னொருவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்போதும் சந்தோஷத்தை அடைகிறான். அந்த கோணத்தில் என்னால் பல நண்பர்களை சந்தோஷப்படுத்த முடிந்ததை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.

தோல்வி யாரைத் தொடவில்லை, அது அவ்வப்போது என்னை தொட்டிருக்கிறது. இருந்தும் என்னை எனக்கு காட்டியிருகிறது, என் வெற்றியை என்னை அது சந்தித்த நாளே ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. பல இரவுகள் நான் அழுதிருக்கிறேன் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமே என்றெண்ணி தோற்றுவிட்டோமே என்பதினால் அல்ல.

எனக்கு மிகவும் பிடித்தவை இசை, பாடுவது, எழுதுவது, படிப்பது, கிரிக்கெட், நண்பர்கள், என் உறவுகள், இயற்கை, புகைப்படங்கள் எடுப்பது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் பார்ப்பது.

இதற்கு மேலும் என்னைப் பற்றி தெரிய வேண்டுமானால், நான் வெகு தொலைவில் இல்லை ஒரு எ-மெயில் தூரமே உள்ளேன்.

14 Responses to About Me

 1. இது வரை இதுபோல் அறிமுகம் கண்டதில்லை.

  //ஒருவரின் சந்தோஷம் வெறும் வெற்றியைக் கொண்டாடபடும்ப்போது மட்டும் வெளிப்படுவதில்லை. அவன் சோகத்தை இன்னொருவரிடம் பகிர்ந்துக் கொள்ளும்போதும் சந்தோஷத்தை அடைகிறான். அந்த கோணத்தில் என்னால் பல நண்பர்களை சந்தோஷப்படுத்த முடிந்ததை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.//

  அற்புதம்.

 2. T.P.Anand says:

  Dear Sarathy,

  Your profile is very nicely narrated. I feel you could have also added a few lines about your family.

  Your mastery in Tamil is excellent. Keep it up.

  Regards,
  Anand T.P.

 3. ரொம்ப நன்றி ஆனந்த். உண்மையிலேயே நீங்கள் படித்து பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்பொழுது கொஞ்சம் பயம் வருகிறது. என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்ததை எழுதிகிறேன்.

  தவறுகளைக் கண்டால் உடனே சுட்டிக்காட்டி திருத்துங்கள்.

 4. //நான் வெகு தொலைவில் இல்லை ஒரு எ-மெயில் தூரமே உள்ளேன்.//

  அப்ப என் கைக்குள்ளதான் இருக்கீங்க..( எப்படியோ உங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டேன்.)

  • நான் எப்போவுமே உங்கள மாதிரி அன்பர்கள் கைக்குள்ள தான்..கைப்புள்ள இல்ல நவநீ…தப்பா படிக்காதிங்க…:-)

 5. ரவியோட போன் நம்பர் வேணும்…தருவீங்களா?

 6. லீமா says:

  இது அறிமுகமா?சுய சரிதமா?;)))))))

  • உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள் லீமா. வந்தமைக்கு நன்றி..மீண்டும் வருக..

 7. sekar says:

  very simple, stylish, interesting “about me”…
  i have already become ur fan…

 8. T.P.Anand says:

  Your prolonged silence for last 6 weeks does not go well with your profile??? Why are you staying away from your blog for such a long time??

  • Its not that I am keeping Silence Anna…

   I prefer to write only when I find the topic interesting to write and am convinced that I have given a good article to read for the readers.

   I will shortly come up with a blog

 9. T.P.Anand says:

  I have started writing regularly in my own blog “TP Talks”. Please visit my blog and if you find it interesting I request you to include it in your blogroll

 10. T.P.Anand says:

  Hi Sarathy,

  Why are you quiet for so long. It is almost one year since you wrote on your blog.

  Wake up.

  Regards,
  Anand T.P.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *