சுதந்திர இந்தியா

அரசியல்வாதிகள் தங்களின் தேவைக்கு மீறி பொதுப்பணத்தை சுதந்திரமாக கறுப்பாக மாற்ற வழிவகுப்பது.

தேர்தலுக்காக என்ன வாக்குறுதியும் கொடுக்கலாம் ஆனால் அதை நிறைவேற்றவேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்பது.

விவசாயம் மற்றும் விவசாயத்தை கங்கணம் கட்டிக்கொண்டு அழிக்க வழிவகுக்க உதவுவது.

பெண்களை கற்பழித்தாலும் சிறிய தண்டனையுடன் தப்பிக்கலாம். மீறி தண்டித்தால் மனித உரிமை வன்மையாக கண்டிப்பது.

தொழில்னுட்ப வளர்ச்சி எந்த அளவிற்கு போனாலும், இன்றும் வரதட்சனை என்ற உயரிய பாரம்பரியத்தை நிலைநாட்டச் செய்வது.

யார் என்ன சொன்னாலும், எவ்வளவு அறிவுறுத்தினாலும், சித்தாந்தம் பேசினாலும், ஜாதிப் பிரிவினையை நிலைநாட்டிக் கொண்டிருப்பது.

காவல்துறையும் ராணுவ வீரர்களும் கஷ்டப்பட்டு தீவிரவாதிகளிடம் போரிடுவதை நேரடியாக ஒளிபரப்பி தீவிரவாதிகளுக்கு ராணுவ திட்டத்தை வெட்டவெளிச்சமாக காட்டச் செய்வது.

எல்லா துறையிலும் அன்னிய முதலீட்டை உள்ளே புகுத்துவதோடு நில்லாமல்,அரசு சார் நிறுவனங்களையும் நஷ்டத்தில் தள்ளுவது.

லஞ்சத்தை ஒழிப்பதாக ஆண்டாண்டு காலமாய் அறிவிப்புவிடுத்து, அதை இன்னும் மேலோங்கச் செய்வது.

குப்பைகளை எங்கே வேண்டுமானாலும் கொட்ட அனுமதிப்பது.

நல்லவர்களை நாசூக்காக/ செல்லமாக உருப்படதாவன்/ள் என்று அழைக்க உதவுவது.

கலாச்சார சீரழிவுக்கு எந்த தங்குதடையின்றி பாதகம் விளைவிக்க உதவுவது.

நாட்டின் வளர்ச்சியை விட சொந்த வீடு/வீட்டுச்சொந்தகளின் வளர்ச்சியை பெரிதாக நினைக்க உதவுவது.

எங்கே வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் மறியல்/உண்ணாவிரதம் இருக்க பெரிதும் உதவுவது.

இப்படி இன்னும் பலவற்றை சொல்லலாம் நாம் சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாய்.

மேலே சொன்னவைத் தவிர இன்னும் சில விஷயங்களையும் ஆதாரமாய்ச் சொல்லலாம்..அவை:

கல்வித்துறையில் இன்னும் சிறந்து விளங்கிக் கொண்டிருப்பது.
மண்ணில் போக்ரானிலிருந்து விண்ணில் பாய்ச்சிய ஏவுகனை வர தொழில்னுட்பத்தில் தலைசிறந்து விளங்குவது.
மற்ற நாடுகளில் போர் போர் என்றும், எப்போது எங்கே குண்டு வெடிக்கும் என்றும் இருக்கையில் இங்கே நாம் பயம் இல்லாமல் இருப்பது.
காவல்துறையோ அல்லது சாதரண மனிதர்களோ கையில் துப்பாக்கியுடன் எப்போது யாரை சுடுவார்கள் என்ற பயமும் இல்லாதிருப்பது.
அமைதி இன்னும் நிலைநாட்டப்பட்டிருப்பது..
ஆறு பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பது.

முதலில் பல குறைபாடுகள் நிறையவே இருந்தாலும் தினசரி வாழ்க்கையில் வெட்டவெளிச்சமாக நடந்துகொண்டிருந்தாலும், மேற்சொன்ன ஒரு சில மிக நல்ல விஷயங்களே இருந்தாலும்., இந்தியா இந்தியாதான். என் இந்தியா, உன் இந்தியா, நம் இந்தியா.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?

இருந்தாலும் இது தேசப்பற்றினால் வரும் பேச்சு மட்டுமே. உள்மனது நாம் இன்னும் முழுசுதந்திரம் அடையவில்லை என்றே தோன்றுகிறது. முதலில் சொன்ன விஷய்ங்கள் எப்போது மாறும் என்று ஏங்குகிறது. உண்மையிலே நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோமா?

This entry was posted in அனுபவம், அரசியல், நாட்டு நடப்பு, பொது and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *