உதிரிப்பூக்கள்

ஹைக்கூ

பாலும் சோறும் ஊட்டிவளர்த்த நாயை விற்றேன்
காசுவாங்கியதும் கைமாறியதும் எந்நாய் குரைத்தது எனை பார்த்து ஏக்கத்துடன்
மழையின்றி வெய்யிலில் வாடிப் போன குளம்!

வருமானம்

மாதக் கடைசியில் சம்பளம் வருமாம்
கடன்களுக்காய் முக்கால் வாசி பங்காம்
எஞ்சி இருப்பதும் சேமிப்புக்கு வேண்டுமாம்
பின் எனக்கெனயிருப்பது வெறுமை மட்டுமா
இதுவும் ஒரு வித வறுமையா?

பீச்சுவாக்குல

கொஞ்சம் வலிமையாய் தடவிச் செல்லும் காற்று
காதலர்கள் கூடும் சங்கம் சின்னப்பையன் கையில் சுண்டல் தட்டு
விற்றுப் போகாத மல்லிகைப்பூ வண்டுகளுக்கு சத்துணவாக!

சுதந்திர இந்தியா

கொடி உண்டு குத்தூசியும் உண்டு
சட்டையில்லாமல் ஏழைச் சிறுவன்
சுதந்திரதினம்!

 

பூக்காரி
பூயிழந்த செடியும் விதவையோ
மறுபடியும் பூப்பதுதான் மறுமணமோ
பூவும் செழிக்கிறது
பூவைத்தவளும் மகிழ்கிறாள்
பூவிற்பவள் ஏன் தவிக்கிறாள்!

தலையுண்டு மனதுண்டு வைத்துக்கொள்ள
மணமுண்டு கைதாங்கிய பூவிற்கு
ஏற்றத்தாழ்வு மலருக்கு இல்லை
ஏற்றத்தான் பணமில்லை பூக்காரிக்கு!

ஜனனமும் மரணமும்

வந்த நேரம் தெரியாது
வந்த காரணமும் புரியாது
பிறந்துவிட்டய்!

காலம் ஓட ஓட
கால்கள் நீள நீள
வளர்ந்துவிட்டாய்!

வாழ்க்கை என்பது என்ன?
தேவை என்பது யாது?
புரிந்துவிட்டாய்!

நிலையானது இறை அருள்
அகலாதது கர்ம இருள்
அறிந்துவிட்டாய்!

பொருள் என்றும் சேரா
போனதும் திரும்பி வாரா
தெரிந்துவிட்டாய்!

உன்னை சுற்றிலும் இருள்
கிடைத்ததோ அவனின் அருள்
இறந்துவிட்டாய்!
Visit Canadian internet casino site mapleleafonlinecasino.com!

======================================================================================================

This entry was posted in Featured, Headline, கவிதைத் தொகுப்பு, சிந்தனைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

One Response to உதிரிப்பூக்கள்

  1. Sunder says:

    Excellent collections sarathy. Keep posting whenever time permits

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *