முகப்புத்தக அவியல்

வெகுநாட்கள் ஆகிறது ஒரு பதிவு செய்து.  ஏதாவது எழுதலாம் என்று நினைத்தால் விரல் முகப்புத்தகத்தையே தேடுகிறது. இது வரமா அல்லது சாபமா? இல்லை எனக்கு எண்ணங்கள் போதுமான அளவு உதிப்பதில்லையா? சோபேறித்தனம் என்பதே சரியான காரணம். சரி சும்மா இருப்பானேன் என்று சமீபகாலமாக  நான் முகபுத்தகத்தில் போட்ட சில நல்லவற்றை (நான் நல்லவைகளாக நினைத்த) இங்கே ஒரு பதிவாக போட்டு எனக்கு நானே ஊக்குவித்துக் கொள்ளலாம் என்றெண்ணினேன். உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்…

பின்குறிப்பு: நீங்க முகப்புத்தகத்திலேயே படித்துவிட்டிருந்தால் இதை புறக்கணிக்க உங்களுக்கு முழு தகுதியும் அதிகாரமும் இருக்கிறது..மற்றபடி வழக்கம் போல உங்கள் நட்புக்களோடு இதை பகிர்ந்து என்னை மேலும் எழுத ஊக்குவிக்கலாம்…

=================================================================================
கலைஞர் டிவியில் முந்தானை முடிச்சு படம் ஓடிக்கொண்டிருந்தது…

பாக்யராஜ் ஊர்வசியை தெருவில் அடிப்பதை ஊர்வசியின் அப்பா பார்த்துவிட்டு..வரதட்சணை காரணம் என்றெண்ணி பாக்யராஜை பார்க்க வருகிறார்..

பாக்யராஜ் திரும்ப போகச் சொல்கிறார். ரொம்ப சீரியஸாக போகும் இந்தக் காட்சியிலும் கூட…

ஊர்வசி: என் புருஷன் வேண்டாம்னு சொன்ன நகை எனக்கு எதுக்கு? புருஷன் கிழிச்ச கோட்ட தாண்டினா என்ன ஆகும்னு எனக்கு தெரியாது? எனக்கும் ராமாயணம் தெரியும்…

ஊர்வசியின் அப்பா: அது புருஷன் கிழிச்ச கோடில்ல…லஷ்மணன் போட்ட கோடு…

பாக்யராஜ்..பாக்யராஜ்தான்…
=================================================================================
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா?

கவிஞர்..இங்கே பார்வதியை செல்லமாக பாரு என்று அழைப்பதாகவும் அதே சமயம் பாரு (பார்) என்னை என்றும் அமைத்திருக்கிறார்…

ஆனால் எஸ்.பி.பியும் சித்ராவும், அதை பாரு (பார்) என்று மட்டுமே உச்சரிக்கிறார்கள்..முதல் ”பாரு”வில் உ சத்தம் அதிகமாகவும் இரண்டாவது ”பாரு”வில் குறைத்தும் பாடியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

பாடல்: அடி வான்மதி என் பார்வதி..படம் சிவா.
=================================================================================
ஆப்புக்கு காங்கிரஸ் ஆதரவு…

அவங்க சோனியாவா இல்ல சூணியாவா? கருப்பு கலர்ல டி-சர்ட் போடும்போது இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது..
=================================================================================
வழக்கமா அண்ணா நாமம் வாழ்கண்ணு தமிழ்நாட்டுல மட்டுந்தான் கேட்கும்..இப்பவெல்லாம் அது டெல்லியிலும் கேட்ட்குது…என்ன இந்தியில சொல்றாங்க..அவ்ளோதான்…
=================================================================================
காங்கிரஸின் 8 சீட்டும் ஆப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவு…

கெஜ்ரிவாலுக்கு இப்ப என்ன அஷ்டமத்துல சனியா…?
=================================================================================
கெஜ்ரிவால் லோக்ப்பால் ஒரு ஜோக்ப்பால்ணு சொல்லிட்டார்…ஆனா நம்ம ஊருல இருக்குற தனபாலுக்குத் தெரியுமா இது? இல்ல சொன்னாத்தான் புரியுமா? காங்கிரஸ் போட்ட நியூ பால்ல அண்ணாவோட லோக்ப்பால் போல்டு ஆயிடுச்சி..இப்ப கோபால், தனபால் எல்லாம் காங்கிரஸின்பால் இழுக்கப்பட்டு ஒரே ஓட்டு பால்தான் எலக்‌ஷன் போல்ல…
=================================================================================
அப்டேட் போட்டாரை ஒறுத்தல் அவர்மகிழ
லைக் செய்து விடல்
=================================================================================
நீயென்னும் மனம் வாழும் வீடு
அது வீடல்ல வெறும் எலும்புக்கூடு
எலும்புக்கூட்டை ஆட்சி செய்யும் மனம்
மனமதை சுத்தம்செய் அதுவே தியானம்
புரிந்தவர் சுத்தம் செய்ய தியானம் செய்வர்
புரியாதவர் நல்லதொரு வ்யாக்யூம்க்ளீனர் வாங்குவர்

This entry was posted in General, Headline, அனுபவம், அரசியல், இந்திய சினிமா, சிந்தனைகள், நகைச்சுவை. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *