மணல்கயிறு மிக்ஸர்

அது என்னமோ தெரியலீங்க

நானும் ரொம்ப நாளா என்னையும் என்னைப் போன்ற மற்ற தமிழ் அன்பர்களையும் கவனித்து வருகிறேன். நம்ம ஆளுங்களுக்கு இருந்தாலும் கொஞசம் மொழிப்பற்று அதிகம்தான். ஒரு இந்தி பேசுபவரோ அல்லது தமிழ் தவிர ஏனைய மொழிகள் பேசும் இந்தியர்களோ அனாவசியமாக கொஞ்ச நஞ்சமாக கற்ற தமிழில் நண்பர்களோடு உரையாடுவதில்லை. ஆனால் நம்ம ஆளுங்கள எடுத்திக்கிட்டீங்கன்னா “ஏமி”, போத்தாமா”, “வெல்தாணு”, “அச்சா”, ”டீக்கை” என்று (இதோடு நின்னாத்தானே…மற்ற பாஷையில் கற்ற சில பல வார்த்தைகளையும்) வார்த்தைகள வைத்துக் கொண்டு அவர்களோடு, முக்கியமாக இன்னும் இரண்டு அந்த மொழி தெரியாத நபர்கள் இருக்கும் போது பிட் போடுகிறார்கள்.

திட்டாதிங்க..நானும் கூட சைட்ல இந்த பிட்ட ஓட்டுறது உண்டு. மனசுல என்ன நினைச்சுபோம்:

”எப்படீ உங்க பாஷையிலேயும் பேசுவோமில்ல”

“எங்களுக்கும் இந்த பாஷை தெரியுமே” (ரெண்டு வார்த்தையை தெரிந்து கொண்டு இது ஓவர் தானே? நீங்களே உங்க மனசாட்சியை கேட்டு சொலுங்க…உங்க மனசாட்சி ஒரு வேளை இதச்சொல்லாம என்ன வெரட்டி வெரட்டி வெரைட்டியா அடிக்க சொல்லிச்சின்னா அத நீங்க வன்மையா கண்டிக்க உங்களுக்கு இந்த “மணல்கயிறு சாரதி” முழு உரிமை கொடுக்கறான்).

ப்ராகேட்ல இவ்வளவு பெரிசா எழுதறது நான் ஒருத்தந்தான்னு நினைக்கிறேன்.அட இது பரவாயில்லையேன்னு நினைச்சுக்கோங்க. சில ப்ளாக் படிக்க ஆரம்பிச்சா ரெண்டு நாள் தேவைப்படுது.இதுல என்ன ஒரு ஒத்துமைன்னா ரெண்டுலையும் உங்களுக்கு உபயோகமா ஒண்ணுமே கிடையாது. இருந்தாலும் இந்த பாழாப்போன பணத்துக்குப் பின்னாடி ஓட ஆரம்பிச்சிட்ட நம்மளுக்கு இதுதானே ஒரே (நிச்சயமாத் தெரியுமாடான்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது) வடிகால்.சரி விஷயத்துக்கு வரேன், வேறே என்ன நினைப்பு?

“பக்கதுல இருக்குறவன், மச்சான் உனக்கு இந்தி/தெலுங்கு தெரியுமாடா” அப்படின்னு கேட்பானே.அதுல நமக்கும் ஒரு பெருமை!!!

இதுல செம காமெடி என்னன்னா திரும்ப நம்ம நண்பர் அதே பாஷையில பேச ஆரம்பிக்க நாம சட்டுனு இங்கிலீஷுக்கு டைவ் அடிக்கறதுதான். இங்க ப்ராகேட்ல நானும் தானுங்கோண்ணு எழுதணும்னு நினைச்சேன்..நீங்க அட்ரஸ் தேடி கண்டு பிடிச்சு அடிக்கவே வந்துட்டீங்கன்னா?

என்னடா இப்படி சம்மந்தமே இல்லாம எழுதறானேன்னு நினைச்சுக்காதீங்க….எழுத ஒண்ணும்மில்லைங்க.

”அப்ப ஏண்டா நாயே எழுதறன்னு” நீங்க கவுண்டமணி டோன்ல கத்தறது கேட்குது. இருந்தாலும் ஆடின காலும் பாடின வாயும் நிக்காதுன்னு ஒரு பழையமொழி இருக்கு இல்லீங்களா.

“இப்ப நீ என்னதாண்டா சொல்ல வர”ன்னு கேட்டா நான் என்னத்தன்னு சொல்றது. இருங்க யோசிக்கணுமில்ல..ஆஆஆன்ன்…

எழுதி ரொம்ப நாளாச்சுங்க,அதனால சும்ம எழுதி பழக்கிக்கலான்னுதான். அதான் படிக்கவும், படிச்சுட்டு கிட்ட கிடைச்சா அடிக்கவும் நீங்க இருக்கீங்க இல்ல.

இதோ பாருங்க நம்பிக்கைதான் வாழ்க்கை. இதுவரை விஷயமே இல்லைன்னு மூடக்கூடாது. மேலே படிக்கலாம்,ஏதாவது இருக்குங்கற நம்பிக்கை உங்களுக்கு வேணும். நீங்க நம்பி படிப்பீங்கங்கற நம்பிக்கை எனக்கு வேணும். இதுல் இரண்டாவது எனக்கு நிறைய இருக்கு. மத்த ப்ளாக் படிக்கும்போது முதலாவதும் எனக்கு இருக்கு. என்னத்த செய்யறது உங்களுக்கு நான் எனக்கு நீங்க.

குடிப்பவர்களும் குடிக்காதவர்களும்

அது ஏங்க இந்த குடிக்காதவங்க குடிக்கற பார்டிக்கு வந்தா குடிச்சவங்கள தூண்டி விடறது, தெரியாம தடுக்கினாலும் “பார்த்து மச்சான்…ஓவர் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்”னு சொல்லி வெறுப்பேத்தறாங்க.இந்தக் கேள்வி ரொம்ப நாளா என் மனசுல இருக்கு. இன்னிக்கு கேட்டே ஆகணும்னு ஒரு முடிவோடத்தான் இருந்தேன்.கேட்டுட்டேன்.

கிராஃப்த்தார் – பழைய இந்திப்படம்

இன்று வேறு வழியே இல்லாம டிவியில வர ஒரே புரியற ஜீ அஃப்லாம் சேனலை பார்க்க நேர்ந்தது. அதில் இன்று கமல், ரஜினி மற்றும் அமிதாப் நடித்த கிராஃப்த்தார்(1985) படத்தை ஒளிபரப்பினார்கள். ரஜினி அமிதாப் மிகவும் அன்யோன்யமான நண்பர்கள். கடைசியில் (படக் கடைசிக்கு முந்தின கடைசிங்க) கமல் அமிதாப் சாரோட தம்பி என்பதெல்லாம் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதேயில்லை. ஆனால் சில விஷயங்கள் மட்டும் கவனிச்சேன்:

1. கமல் சிறையில் இருக்கிறார் ஆனால் திடீரென்று மௌத் ஆர்கன் வாசிக்கிறார். 1985ல் வந்த படம். இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கக் கூடாதுதான். இருந்தாலும் ஆளவந்தான் (என்ன அழிக்க வந்தான் என்று ஆர்ட் டைகர் செல்லமாக அழைக்கும்) 80களிலேயே யோசித்து வைத்த கதை என்று சொல்லும் கமல் இந்த காட்சியை தவிர்த்திருக்கலாமோ? இதுபோன்றவைகளைத்தான் மம்மூட்டி கமல் 50ல் திரும்பி பார்த்தால் எப்படி இருக்கிறது என்று கேட்டாரோ?

2. ரஜினியும் கமலும் சொந்தக் குரலில் பேசி நடித்திருக்கிறார்கள். “இது ரொம்பப் பெரிய விஷயம் சார். அங்கேர்ந்து வந்தவங்க யாரு இப்படி சுத்தமா பேசி நடிக்கறாங்க” என்று என் நண்பர் பெருமிதமாக மார்த்தட்டிக் கொண்டார்.

3. “நீயா நானா”வில் ஒரு பகுதியில் ஏன் ரஜினி பிடிக்கும் என்ற வாக்குவாதம் நடத்தப்பட்டது. அதில் ஒரு வட இந்தியர், கிராஃப்த்தாரில் ரஜினி சிகரெட் தூக்கிப் போட்டு துப்பாக்கியால் சுடும் ஸ்டைல் பார்த்து பிடித்தது என்றார். அதற்கு கோட் போட்ட கோபி அது அந்தப் படம் அல்ல, அந்தாகாணூன் என்று அவரை திருத்தினார். இதை படித்தால் அல்லது படித்தவர்களில் யாரேனும் அவர் நண்பராயிருந்து இதைச் சொன்னால், அவர் திருத்திக் கொள்வாராக. ஆமேன்.

4. 1980களில் கமல் அந்தக்கால இளைஞினிகளுக்கு கனவுக்கண்ணன். இருந்தாலும் ஒரு காட்சியில் அமிதாப் கமலை “பச்சே” (பச்சை இல்லீங்க) என்று செல்லமாக அழைக்கிறார். இந்தளவு கமல் இறங்கியிருப்பது அவரின் கலைப்பசியை காட்டுகிறது.

அப்பாடா…..அப்படி இப்படி யோசித்து உங்கள் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் சார். அடுத்து சந்திப்போம்.

This entry was posted in Headline, இந்திய சினிமா, சிந்தனைகள், தொ(ல்)லைக்காட்சி, நகைச்சுவை, நாட்டு நடப்பு, பொது and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *