ஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவை – 2012

நான் கொஞ்ச காலமாக எழுதுவது இல்லை. அலுவல் காரணமாக இந்த மாதிரி ஆகிவிட்டது. அலுவல் என்று அதைமட்டும் குத்தம் சொல்றது சரி கிடையாது. மனசும் ஒரு காரணம். நண்பர்களோடு மின்னஞ்சல் வழியாகபலதரப்பட்ட விஷயங்களையும் நாட்டுநடப்புகளையும்  சம்சரிக்கறது உண்டு. இந்த தமிழ் சாப்ட்வேரும் கொஞ்சம் படுத்தியெடுத்துவிட்டது. ஒரு வழியாக எழுதலாம்னு முடிவுபண்ணிட்டு என்றைக்கு ஆரம்பிக்கலாம்னு காத்துகிட்டு இருந்தேன்.

தெய்வாதினமா ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரமோத்ஸவ தினமா அதுவும் கருட சேவை அன்னிக்கு மனசு ஒத்துழைச்சது ரொம்ப விசேஷமா நினைக்கிறேன். அதுவும் அதே திருவல்லிக்கேணி கருட சேவை பற்றிஉஅ ஒரு சின்ன பதிவு போடறது மனசுக்கு இதமாத்தான் இருக்கு. ஒரு சில போட்டோ (நானே) எடுத்ததையும் உங்களுக்காக. பல பேர் வெளிநாட்டுல இருக்கீங்க. உங்களால கருட சேவை (2012) நேர்ல பார்த்திருக்க முடியாது. அந்தக் குறையை கொஞ்சமாவாது போக்கவே இந்த பதிவு.

திருவல்லிக்கேணி 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த ஸ்தலம்பிருந்தாரண்யஸ்தலம்என்றும் தெரியப்படுகிறது. இங்கே உள்ள குளம் கைரவேணி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்தில் அல்லிப்பூ அதிகமாக இருந்ததால் (கவனிக்கஇருந்ததால்) அல்லிக்கேணி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உதவியால தூர்வாரப்பட்டது.

இங்கே மூலவர் ருக்மணி சமேத வேங்கடக்கிருஷ்ணன் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். மிகவும் விசேஷமாக இங்கே தன் குடும்பத்தோடு காட்சியளிப்பது காணக்கிடைக்காதது. சகோதரன் பலராமன், சதகி, மகன் ப்ரத்யும்ணன் மற்றும் பேரன் அனிருத்தனோடே சேவை சாதிக்கிறார் வெங்கி.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களும் , பேயாழ்வர் ஒரு பாசுரமும், திருமழிசையாழ்வார் 1 பாசுரமும் பார்த்தசாரதியை போற்றி பாடியுள்ளனர்ப்ரமோத்ஸ்வம் நாட்களில் இங்கே பக்தர்கள் எதோ தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுவது நினைக்கும்போதே இனிக்கும் விஷயம். சிறுவர்கள் பெரிய வாகனத்தைப் போலவே சிறியதாக ஒன்று செய்து பத்து நாட்களும் திருமாலின் கூடவே எழுந்தருளச் செய்வது பார்ப்பதற்கு அழகான ஒன்று.

இந்த முறை கருட சேவையை என்னால் முடிந்த தெரிந்த அளவுக்கு படம்பிடித்து இருக்கிறேன். உங்களுடன் என் இந்த இனிய அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் ஆனந்தமடைகிறேன். எம் பெருமான் எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதி பெரிய திருவடி எனப்படும்கருடனின் இரு திருக்கரங்களில் தன் பாதங்களை வைத்து அமர்ந்து ராஜநடையிட்டு வரும் காட்சி கண்களுக்கு விருந்து மனதுக்கு மருந்து.

This entry was posted in Headline, Sticky, ஃபோட்டோகிராஃபி, அனுபவம், பொது and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ஸ்ரீ பார்த்தசாரதி கருட சேவை – 2012

 1. Good post on auspicious day.

 2. Muralee says:

  அற்புதம்! திவ்யம்!! பிரமாதம்!!!

 3. Swarnapriyaa says:

  Good post! Welcome back!

 4. anu says:

  Welcome back ! ! Its really nice to start with god ! ! Especially people like us living in the place where we dont have any temple’s. Specialty is ur area and the way people gather at this temple.

  Thanks for sharing your exp with the photo’s. nice clicks :-)

  உங்க புன்னியத்தில் பெருமாள் தரிசனம் காண முடிந்தது….

 5. Sundar says:

  நல்ல துவக்கம். தூய தமிழ்ல எழுதாம எளிய தமிழ்ல எழுதினா நல்ல இருக்கும்ங்கறது என் அபிப்ராயம். தொடர வாழ்த்துகள்.

 6. Prasanna says:

  Ur back!! (Billa style)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *