Home » Featured, Headline, சிந்தனைகள், செம்மொழி, நாட்டு நடப்பு

அடையார் ஆனந்தபவன்

4 June 2010 13 Comments

நான் மக்களை சந்தித்து எத்தனை நாள் ஆகிறது, ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை என்று பல வாசகர்கள் ஈமெயில், கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருத்தப்பட்டதாக நானே நினைத்துக் கொண்டதால் இன்று ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு போடலாம் என்று உட்கார்ந்துவிட்டேன். என் விடுமுறைக் காலம் (என் மனைவி இரண்டா..மவனை பெற்றெடுத்து இன்னும் சில தினங்களில் வந்துவிடுவாள்) முடிவடையப் போவதால், குறைந்தது ஒரு பதிவாவது எழுதிவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே நான் பின் வைத்த விரலை முன் வைக்கமாட்டேன் என்று (பேட் ஸ்மல் அடிக்குமில்ல). அதனால் இன்று ஒரு….ஆரம்பிச்சிட்டான்யா..இப்படித்தான் முன்னால ஒரு தடவை எத பத்தி எழுதலாம்னே பேசி முழு பக்கத்துக்கு முக்க வெச்சிட்டு போயிட்டான்னு சில பல வாசக நெஞ்சங்கள் ஆங்காங்கே புலம்புவது கேட்கிறது. ஆபிஸர்ஸ் இது அது இல்ல. இது ஒரு வேளை அதுவா இருக்குமோன்னு மனக்கணக்க ஸ்கூல்ல படிக்கும் போது போட்டாப்போல தப்புத்தப்பா கணக்குப் போட்ட அதற்கு நான் பருப்பே அல்ல.

சமீபத்தில் என் மச்சினன் உதவியுடன் ராவணன் எம்பி3 வாங்கி கேட்டேன். அந்த எம்பி3யில் இன்னபிற படங்கள் இருந்தது. கவனித்தபோது பல புது இசையமைப்பாளர்கள் பல படத்திற்கு இசையமைத்திருப்பது தெரிந்தது. தென்னிந்திய திரைப்படத்துறை இப்போது அமெரிக்காவைப் போல ”யாரும் வாரீர் யாவரும் கேட்பர்” ரேஞ்சுக்கு போயிருப்பதும் புரிந்தது. ஒரு காலத்தில் அப்போது அமெரிக்கா போய் வந்த என் சில நண்பர்கள் சொல்வர், அங்கே தெருவில் ஆங்கில ஆல்பம் கொட்டிவைத்து விற்பார்கள் என்று. தரம் முக்கியமில்லை, ஏதாவது புதிதாக அதேசமயம் தங்கள் கையை பதம் பார்க்காமல் படம் எடுக்க பலர் கிளம்பிவிட்டதாலும், அப்படி கிளம்பிய சிலரின் படங்கள் வெற்றி பெற்றதாலும் வந்த தொந்தரவுகளே இவை.

அந்த எம்பி3யில் நான் கேட்ட கவனித்த இன்னுமொன்று “செம்மொழியான தமிழ் மொழியாம்” என்ற தற்போதைய தமிழ்நாட்டு தேசியகீதம். ஏஆர்ஆர் கைவண்ணத்தில் உலகச் செம்மொழி மாநாட்டுக்கு இசையமைக்கப்பட்ட பாடல். பாடல் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது, கடைசியில் ரேப் பாடகர் ப்ளேஸ் என்று நினைக்கிறேன், ஏதோ ஓட்டலில் சாப்பிட்டது சரியாக ஜீரனமாகதது போலவும், இப்படியெல்லாம் பாடினால் வயிறு சரியாகிவிடுமென்று அவரது மருத்துவர் சொன்னது போல கிட்டத்தட்ட வாந்தியெடுத்து இருக்கிறார்.

“கம்ப நாட்டாரும் கவியரசரும்”  பாடியதற்காக (வரிகளில் பிழையிருப்பின் அது ஏஆர்ஆரை மட்டுமே சாரும். அவரது பாடல்கள் எப்போதுமே வார்த்தைகள் முதல் இருபது தடவைகள் கேட்கும்போது புரிய அநேகம் பேருக்கும் வாய்ப்பில்லை. நானும் அந்த அநேகத்தில் ஒருவன்) ப்ளேஸைச் சொல்லி பிழையில்ல, ரஹ்மானைச் சொல்லியும் தப்பில்லை. அவர் கொடுத்த வேலையை செய்தார். ரஹ்மான் முத்தமிழ் அறிஞரின் இம்சைக்கு இணங்க இசைந்திருக்கிறார்.  ஆனாலும் ரஹ்மானுக்கென்று பொறுப்புகள் இருப்பதை நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாது. இதை மேற்பார்வை பார்த்தோரையும், இந்த மாதிரிதான் பாட்டு வரும் என்று ரஹ்மான் சொல்லும்போது ஓகே சொன்னவர்களையும்தான் காரணம் காட்டவேண்டும்.

நாம் இங்கே இந்தியாவிலே பல ஆங்கில வார்த்தைகளை கொச்சையாகவும் தப்பாகவும் உச்சரிப்பதால் அங்கே அவர்கள் நாட்டில் அதை அப்படியே மாற்றி வைத்துக் கொள்கிறார்களா என்ன? அப்படியிருக்க நம் தமிழ் மொழியை இப்படி அசிங்கப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. நம்ம சாரு பாலா சார் நிச்சயமாக ரொம்ப ரசித்திருப்பார் 🙂 பாடலை.

பாடல் அழகான (சுசீலா குரல் என்று நினைக்கிறேன்…)குரலுடன் ஆரம்பிக்கும்போது நாம் தயாராவது ரஹ்மானின் கரைய வைக்கும் மெலடிக்கு. ஆனால்…

இப்படி இசையமைப்பதையோ அல்லது பாடுவதையோ எதிர்ப்பவனல்ல நான். ஆனால் அது எந்த பாடலுக்கு எந்த இடத்துக்கு என்பதுதான் சங்கதி. ஆஸ்கர் விருது வாங்கும்போது அரங்கிற்கும் அங்கிருக்கும் மக்களுக்கும் ஏற்றார் போல உடையை அணிந்த ரஹ்மானுக்கும் கூட இது தெரியாமல் போனது நகைச்சுவைதான். எது எப்படியிருக்க வேண்டுமோ அது அப்படித்தான் இருக்க வேண்டும். வித்தியாசம் என்கிற பெயரில் பூனையை காவல் காக்கச் சொன்னால் பால் திருடு போவதுதான் மிச்சம்.

இதே பாடல் ஒரு தமிழ்ப் படத்தில் வந்திருந்தால் அது வேறு விதமாகவே போயிருக்கும். அந்த காலத்து பாடகர்களிலிருந்து இந்தக் காலம் வரை என்றால், ப்ளேஸ் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா ரஹ்மானுக்கு? இதுபோலத்தான் இந்த பாழாய்ப் போன விஜய் ஆண்டனி ஒரு பாடலில் ஆத்திச்சுவடியை ராப் செய்தார்..இல்லை இல்லை ரேப் செய்தார். நாம் இந்த விஷயங்களில் வாயை மூடிக்கொள்வதில்லை..மூடிக்கொண்டால் பாட முடியாதே.

இது முழுக்க முழுக்க நம் கலாச்சாரமும் கூட வியாபார மயமாகிவிட்டதயே காட்டுகிறது. திரைப்படங்களில் வீருநடை போட்டுக் கொண்டிருக்கும் ம்சாலாவும் வியாபார யுக்திகளும் இது போன்ற சமாச்சாரங்களுக்கும் வந்துவிட்டன.

ப்ளேஸ் முடித்ததும், ஒரு பெண் பாடுகிறார் பாருங்கள்…சாரி..கேளுங்கள்….அப்படியே ஒப்பாரிதான். அம்மாவிடம் ஆசி வாங்கியிருப்பாரோ ரஹ்மான் என்று நினைக்க தோன்றியது. ”உவ்வே” என்ற வார்த்தையில்லை பாடலில். அது ஒன்றுதான் குறை. மற்றபடி அழகான தமிழ் மொழியில் ஒரு வாந்தி என்று சொல்லலாம். இதற்கு இளையராஜாவை ஏன் கூப்பிடவில்லை கலைஞர்? ஆச்சரியம் தான்.

ரஹ்மானே நல்ல பாடகர். அவரின் குரலில் ஒரு மென்மை இருக்கிறது. ச்ரேயா கோசல் இருக்கிறார், ஜானகி இருக்கிறார், மஹதி பாடுவார். ரஹ்மான் தூக்கத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாடகர்களை தேர்வு செய்திருப்பாரோ.

பாட்டு வரிகளும் அவ்வளவு ஒன்றும் மாநாட்டின், தமிழ் மொழியின் ஈடு இணையற்ற தன்மையை சொல்வதாகவும் இல்லை. வழக்கம் போல கம்பன், சேரன், குலோத்துங்கன் என்று பாடகர்களின்(இன்றைய) குரலில் கதறுகிறது.

இண்டர்வியூவிற்கு வித்தியாசமாக போகிறேன் பேர்விழி என்று ஒரு மாதமாக தோய்க்காத ஜீன்சையும் பட்டன் போடாமல் மடித்துவிட்ட சட்டையும், அதற்கு உள்ளே கெட்ட வார்த்தை டீசர்ட்டும் போட்டுக் கொண்டு போவது போல உள்ளது செம்மொழி மாநாட்டிற்கு ரஹ்மானின் பாடல். சம்பந்தமேயில்லை. தான் கொடுக்கும் எதையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணம் மேலோங்கியதின் விளைவுதான் இசைஞானி அவுட் ஆஃப் மார்கெட் போனதற்கும் ரஹ்மானின் வெற்றிக்கும் முக்கிய காரணம். அது போல இப்போது ரஹ்மானுக்கு வந்திருக்கிறது போலும்.

என் போன்ற ரஹ்மான் ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமே. மற்றபடி ராவணன் பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஒன்றிரண்டு தவிர எல்லாம் சூப்பர் ரகம்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!

அது சரி தலைப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்போருக்கு….இதை எழுத ஆரம்பிக்கும்போது என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருந்த போது ஆர்டர் செய்த வெஜிடபிள் பிரியாணி ஆனந்தபவனிலிருந்து வந்ததால், இந்த குழுந்தைக்கு அந்தப் பெயரையே வைத்துவிட்டேன். ஹி….ஹி…ஹி…

13 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.