Home » Featured, Headline, சிந்தனைகள்

எல்லாம் அவன் செயல்

5 April 2010 5 Comments

காலை அலாரம் வைத்து கண்விழிப்பதிலிருந்து இரவு உறங்கிப் போவதுவரை நடப்பவை எல்லாம் ஒன்று நம்மாலோ அல்லது பிறராலோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆத்திகர்கள் நடப்பவை தமக்கு சாதகமாக இல்லையென்றால், வருத்தப்பட்டு கடவுளை வணங்குகிறார்கள். நாத்திகர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய என் நண்பர்களில் ஒருவன் மட்டுமே உள்ளதாலும், அவனும் பெரியார் வழி நாத்திகன் இல்லையென்பதாலும், அவர்கள் புலம்புவார்களா, அல்லது தாந்தான் காரணம் என்று விட்டுவிடுவார்களா அல்லது மற்றவர் மீது பழியை போடுவார்களா என்று தெரியவில்லை. வாசகர்களில் யாரேனும் இருந்தால், மறுமொழியலாம். தெரிந்துகொள்ள ஆசையாக உள்ளது.

இந்துமதத்தில் இரண்டு கருத்துக்கள் நிலவுகிறது. என் போன்ற சாதரணனுக்கு அதை புரிந்து கொள்ளுதல் சிரமம்தான். ஆனால் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றே. நாம் பின்பற்றும் ஒன்றைப் பற்றி புரிதலும் தெளிதலும் மிக அவசியம். எனக்கு புரிந்த பிறகு, என் மனதில் தோன்றியது:

என்போலவே என் நண்பர்களுடன் இந்தப் புரிதலை பகிரவேண்டும் என்பதுதான்.

கருத்து ஒன்று: நடப்பவை எல்லாம் ஆண்டவன் செயல். நாராயணன் செயல் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

கருத்து இரண்டு: நம் செயல்கள்தான் நம் பாவ புண்ணிய கணக்கை நிர்ணயம் செய்கிறது. இதுவே நம் மறுபிறப்பிற்கு காரணமாகிறது.

ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது அல்லவா? இதுதான் எனக்கு புரியாமல் இருந்தது. சில சொற்பொழிவுகளை கேட்டபிறகு தெளிந்தேன்.

கருத்து ஒன்று: விளக்கம்

ஒருவன் மாலை வீடு திரும்புகிறான். அவன் மனைவி நல்ல அறுசுவை உணவு சமைக்கிறார். நம்மவர் சக்கரை வியாதிக்காரர் அதனால் அவரின் மருத்துவர் அவரை நேரத்துக்கு உண்ணச் சொல்லியிருக்கிறார். கடிகாரத்தில் மணி எட்டடித்தால் சாப்பிட்டாக வேண்டும். அன்றும் என்றும் போல சாப்பிட உட்கார, சரியாக எட்டு மணி. வாசலில் ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்க, நம்மவர் சென்று விசாரிக்கிறார். விசாரித்ததில் அவர் தேடிவந்த வீடு வேறு. சரியென்று அவரை அனுப்பிவைத்துவிட்டு மறுபடியும் உட்கார, தொலைபேசி அழைக்கிறது. அழைத்தவரை அவ்வளவு எளிதாக துண்டிக்க முடியாதவர், கிட்டத்தட்ட பதினைந்து நிமிடம் போயிற்று. முடித்துவிட்டு சாப்பிட உட்கார மணி இப்போது எட்டேகால். அவர் மனைவி கேட்டார், “இது நீங்கள் உண்மையாக சுயமாக சம்பாதித்த பணத்திலிருந்து வாங்கிய பண்டங்களிலிருந்து செய்த உணவு, நான் உங்கள் மனைவி, இது உங்கள் வீடு அப்படியிருக்க உங்களால் ஏன் நேரத்துக்கு சாப்பிட முடியவில்லை?”

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஏதோ ஒன்று நம்மை செலுத்துகிறது. இந்தப் பதிவும்கூட அப்படித்தான். இன்று ஏன் இந்த கருத்துக்கள் ஞாபகத்துக்கு வரவேண்டும்? வந்து அதை பற்றியே சிந்தனையிலேயே ஏன் என் மனம் செல்ல வேண்டும்? சிந்தித்தாலும் அதை பற்றி ஏன் எழுத முடிவெடுக்க வேண்டும்? இந்த இத்தனை கேள்விக்கு ஒரே பதில் “நாராயணன்”. செயல்படுத்துபவன் அவன்..செயல்படுகிறவன் நான்.

கருத்து இரண்டு: விளக்கம்

இறைவனே வேதங்களை இயற்றி, அதை வேதவியாசர் நான்காக பிரித்து, அவர் போன்ற சான்றோர் பலர் அதற்கு விள்க்கவுரை இயற்றியுள்ளார்கள். பிற மதங்களில் குரான் மற்றும் பைபிள் உள்ளன. பல் வேறு புராணங்கள், பகவத் கீதை, பாகவதம் வேதங்களோ அல்லது குரான், பைபிளோ கூறவது மனிதன் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதே.

கடவுள் அறிவை கொடுத்து, அந்த அறிவுக்கு உணவாக மேற்சொன்ன அனைத்தையும் கொடுத்தது, அந்த அறிவை உபயோகப்படுத்தி ஒழுங்காக, நன்மை செய்து வாழ்வதற்கே. அதை விட்டுவிட்டு நாம் அந்த அறிவை பயன்படுத்தி மற்றவரை துன்புறுத்துவம், மற்றவர் பணத்தை அபகரிப்பதும் என்று எண்ணற்ற பாவங்களை செய்கிறோம். இப்படிச் செய்துவிட்டு, ”எல்லாம் அவன் செயல், செயல்படுத்துபவன் அவன், செயல்படுகிறவன் நான்” என்று கையை மேலே காண்பிப்பது தவறு.

உதாரணத்திற்கு காய்கறிகாரரிடம் கத்தி உள்ளது என்பதற்காக, அவர் அதை இன்னொருவரை குத்த உபயோகப்படுத்தினால் அதற்கு இறைவனை பழிசொல்லலாமா? மக்கள் நம்பி வாக்களிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் பணத்தை சூரையாடிக் கொண்டு, கடவுளின் மேல் பழியை போடுலாமா?

இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்க்கை விதிமுறைகளை இயற்றி, அதை கடவுளும், அதுபோக அவரது பல தொண்டர்கள் மூலமாகவும், பல நல்வழிகாட்டும் ஆச்சார்யர்கள் மூலமாகவும் அதை நமக்கு கொண்டுவந்து சேர்த்தால், நாம் அதை பின்பற்றாமல், அழிவின் (மற்றவருக்கு) பாதையில் சென்றுவிட்டு, இறைவன் மிது பழிபோடுவது தவறு. இதைச் சொல்வதே இந்த இரண்டாவது கருத்தின் சாரம்சம்.

முதல் கருத்து விளக்கப்படி, அந்த ஆண்டவன் எழுதச் சொன்னான், நான் எழுதினேன். இரண்டாம் விளக்கப்படி, நான் கற்ற நல்ல கருத்தை மற்றவரிடம் பகிர்ந்துவிட்டேன்.

நீங்கள் முதல் விளக்கப்படி படித்தீர்கள். இரண்டாம் கருத்தின்படி, மறுமொழியில் என்னை திட்டியோ அல்லது டமிலிஷில் ஓட்டு போடாமலோ பாவம் செய்யாதீர்கள்.

5 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.