Home » Featured, Headline, ஐபிஎல் 3, கிரிகெட், நகைச்சுவை

எல்.எம்.எல் 3 – ரவுண்டப்

29 March 2010 4 Comments
 1. சென்ற முறை வெளுக்காத சச்சின் மற்றும் காலீஸ் இந்த முறை மின்னுவது. இன்றைய நிலவரப்படி, சச்சின் படுவேகமாக முன்னேறி இரண்டாவதாக நிற்கிறார். அவருக்கும் காலீசுக்கும் 7 ரன்களே வித்தியாசம்.
 2. சென்ற முறை வெளுத்த அபிஷேக் நய்யார் (மும்பை இந்தியன்ஸ்) இந்த முறை இதுவரை கண்ணில்படாதது
 3. மேஜிக்கல் மேத்யூ ஹேடன் இந்த முறை மங்கூஸ் ஹேடனாக மாறி, டீம் காலை வாரிவிட்டுக்கொண்டிருப்பது
 4. ”வந்தோமா, அடிச்சோமா போனோமான்னு இருக்கணும்” என்று வடிவேலுவைப் போல இருந்த முரளி இந்த முறை அற்புதமாக பந்து வீசி அவர் யாரென்று காண்பித்துக் கொண்டிருப்பது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் முரளி முதல் இடத்தில்.
 5. ”நான் யாரு, எங்க இருக்கேன்”ன்ற ரேஞ்சில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்த முறை சேர்க்கை அஷ்வின். நம்ம சிவா (எல்.சிவா) இவர் ஆ…ஊ…என்றார். ஆனால் மனிதர் தன் பந்தில் பேட்ஸ்மேன் அடிக்கும்போது மட்டுமே ஆ…ஊ..என்கிறார். இது தவிர மேட்ச் முடிந்தபின்பு அணித்தலைவர் ரூம் போட்டு திட்டும்போதும்.
 6. ஷிகார் தவான் (மு.இ) உண்மையிலேயே பெயருக்கு ஏற்றார் போல் வேட்டையாடுகிறார்
 7. போலார்டு சேர்க்கை மு.இக்கு புதிய பலத்தை கொடுத்திருக்கிறது
 8. வினய்குமார் (ரா.சே) விக்கெட்டாக எடுத்துக் கொண்டிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. சராசரியாக ஒரு மேட்ச்சில் குறைந்தபட்சம் இரண்டு விக்கெட்டுகளை சாய்க்கும் இவர், ஏன் இந்திய அணியில் இல்லை? ரஞ்சியில் இவர் அதிகம் சோபிக்காதது ஏன்? உண்மையில் இவர் பந்து வீச்சு அப்படியொன்றும் அபாரம் கிடையாது. அப்படியொரு எண்ணம் இருப்பதாலோ என்னவோ இவரை லேசாக எடுத்துக் கொண்டவர்களே இவர் பந்தில் சாய்பவர்கள்?
 9. ஐ.பி.எல் இந்திய வருங்கால கிரிக்கெட் அணிக்கு எந்தளவுக்கு வலு சேர்க்கும் என்பது தெரியவில்லை. நிச்சயம் ஆட்டக்காரர்களின் பைனான்ஷியல் வலுவை அதிகரிக்கிறது.
 10. இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய அஜீத் அகர்கர் கொஞ்சம் சதைப் போட்டிருக்கிறார். ஆனால் மனிதர் ரன் வழங்குவதிலும், விக்கெட் எடுப்பதிலும் மாறவில்லை. அதே அகர்க்கர்.
 11. முனாஃப் படேல் இன்னும் (எந்த) அணியில் இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவரின் மெத்தன போக்கு ஒழுக்கத்துக்கு பெயர்போன ஆஸ்திரேலியாவின் வீரரான வார்னே கண்ணுக்குப்படவில்லையா?
 12. முதலில் டாடா டோகோமோ தூங்குபவர் காதில் கத்தியது. இப்போது இன்னும் படுகேவலமாக மூன்று இளைஞர்கள் கார் பந்தயம் விடுவது போல எடுத்திருக்கிறார்கள். இது கேவலமாக இருப்பதாக எனக்கும் தோன்றுவது, அந்த இளைஞன் வாந்தியெடுப்பது போல சிரிப்பது. இது எல்.எம்.எல் முடியும்வரை படுத்தும்.
 13. மாறாக ஐடியா மொபைல் விளம்பரங்கள் (சிமாசே போட்டிகள்) நன்றாக இருக்கிறது.
 14. இந்த பதிவு எழுதும் போது டெல்லி டேர் டெவில்ஸ் வார்னர் கொல்கத்தா குதிரைகளை வார்னிஷ் செய்துகொண்டிருந்தார்.
 15. என் அண்ணன் பேச்சுவாக்கில் ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டே இரண்டு தமிழக வீரர்கள்தான் இருக்கிறார்கள் என்றான். சிந்திக்க வைத்த கேள்வி. பத்ரி, விஜய் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பாலாஜி அவ்வப்போது வந்து “ப்ரெசெண்ட் சார்” போட்டுவிட்டு போகிறார்.
 16. இந்த பஞ்சாப் அணிக்கு என்ன ஆயிற்று…? பதில்: கேள்வி மோடிக்கு திருப்பப்படுகிறது. சரி, டெக்கான் சார்ஜர்ஸ்….அதுவும் மோ…
 17. தற்போது போட்டியில் முதல் இடத்தில் இருப்பதைப் பற்றி கும்ப்ளேவை கேட்டபோது, “நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை, கவனிப்பதும் இல்லை. ஜெயிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் மனதில் உள்ளது”. கும்ப்ளேவுக்கு ஒரு வேளை வி.மல்லையாவும் மோடியும் விளையாடிக்கொண்டிருக்கும் மேட்ச் பற்றி தெரியாதோ?
 18. ஹர்பஜன் வந்த கையோடு வாங்கியதும், ஜஸ்கரன் இரண்டு ஃபுல்டாஸ் போட்டதும், அவரை நிறுத்திவிட்டு ரோஹித் ஷர்மா வந்து போட்டதும், எனக்கு நாங்கள் மெரினா பீச்சில் பாதி மண்ணில் நின்று கொண்டு ஃபோர்& சிக்ஸ் விளையாடியது நினைவுக்கு வந்தது.
 19. இந்த முறை கேமரா அதிகம் “சியர் கேர்ள்ஸ்” பக்கம் போகவில்லை. மாறாக பந்துகளுக்கு இடையே விளம்பரங்கள் வருகின்றன. ஒரு செகண்டு எவ்வளவு விலைமதிக்க முடியாதது என்பதை மோ டியிடம் கேளுங்கள் (பெயரில் கேப் விட்டது, நீங்களாகவே எழுத்தை சேர்த்துப் படித்துக்கொள்ள)
 20. “வித்யா” கால் வரும்போது சேவாக்கும், கம்பீரும் அடித்துக் கொள்கிறார்கள். அதே கோச்சிடமிருந்து கால் வரும்போது “கல்லூரி பட இரட்டையர்கள்” போல நீ எடு, உனக்குத்தான் என்று ஒதுங்குகிறார்கள். கோச் பேச்சைக் கேட்காமல் போனால் இப்படித்தான்.

4 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.