எல்.எம்.எல் – 3

எல்லோரும் ஐபிஎல்ன்னு போட்டு எழுதிட்டு இருக்குற நேரத்துல என்னடா இவன் ஏதோ எல்.எம்.எல்ன்னு போட்டு வெச்சிருக்கானேன்னு நினைச்சுக்காதீங்க. நான் எழுதினதுதான் கரெக்ட். நீங்க எல்லோரும் தப்பா நினைச்சுருக்கீங்க. லலித் மோடி லீகத்தான் சுருக்கியிருக்கேன். ஆமாம் இந்த பலவார ஆராவாரத்துக்கு அவர்தானே முழுக்க முழுக்க காரணம். இப்ப நாம நம்ம தேசத்துக்காக உழைத்து உயிர் துறந்தவர்களை போற்றும் (ஒரே) வகையில் தெருக்களுக்கு அவர்களின் பெயர்களை வைத்து அதை மரியாதை இல்லாமல் சொல்வதில்லையா? அதுபோலத்தான் இதுவும். ஆனால் இது மரியாதையாக. ஏன் மரியாதையாக?

ஆமாம் “மரியாதையாக நான் சொன்னபடி விளையாடுங்கள்” என்று மரியாதை கலந்த ஆர்டர் போட்டவரல்லவா நம் மோடி.டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லி மேட்சை பார்த்தவுடனேயே எழுதத் தோன்றியது. மக்களே இன்னுமா ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பரிதாபத்தோடு கேட்கத் தோன்றியது. என்ன தோன்றி என்ன பயன். கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து நம் மக்கள் தொன்றுதொட்டு ஏமாறுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது. டெல்லியின் ஹெண்ட்ரிக்ஸ் ஒரு கேட்ச் கொடுக்க, கொஞ்சம் தள்ளி விழுந்ததால் பிடிக்கமுடியாமல் நம் ஆர்.பி திணற, “சாரி மச்சி, இந்தா” என்றி அவர் கையை பார்த்து கொடுத்துவிட்டுப் போனார். நம் தினேஷ் அதுவரை வெளுத்துவாங்கிக் கொண்டிருந்தவர், சிமெண்ட்ஸ் பந்தில் அவரிடம் பத்திரமாக மெதுவாக அளந்து அள்ளி கொடுத்தது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.

அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ். அதுவரை பார்த்திவ் ஒரு குழந்தை மாதிரி துள்ளிகுதித்து விளையாடிக் கொண்ட்ருந்தவர், ஐபிஎல் அப்பா சொன்னது போல சப்தநாடியும் அடங்கிப்போய் சப்தமே இல்லாமல் ஆடினார். எப்பொழுதோ ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை ஓவராக கொண்டுசென்றனர். வர்ணனையாளர் “குறைந்த ரன்கள் கொண்ட ஆட்டங்கள் திருப்பங்களோடு இருக்காது என்று யார் சொன்னார்கள் என்று எழுதி கொடுத்த டையலாக்கை உதிர்த்தார்.

இன்று நடந்துகொண்டிருக்கும் மும்பை கொல்கத்தா மேட்சில், நம் முரளி கார்த்தி சச்சின் கொடுத்த கேட்ச்சை மிக அருமையாக நன்றாக பந்தை கடைசிவரை கவனித்து விட்டார். ஆமாம் விட்டேவிட்டார். கங்கூலி போடி ஆட்டத்தில் இல்லை போலும். பாவம் கத்தினார். முரளி ஒன்றுமே தெரியவில்லை என்று கண்ணை காண்பித்தார். அதே முரளி மேட்ச்சில் எப்படி ஃபீல்டிங் செய்திருக்கிறார் என்று கவனியுங்கள். நான் சொல்வது புரியும்.

எல்.எம்.எல் – லலித் மோடி லீக்க அல்லது லலித் மோசடி லீக் என்று அழைப்பதா? கிரிகெட்டுதான் அவர் வேலை. அப்படியிருக்க அதென்ன மேட்ச் முழுவதும் தன் ப்ளாக்பெர்ரியை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார். மோ(ச)டி விளையாட்டோ?

This entry was posted in Featured, Headline, ஐபிஎல் 3, கிரிகெட் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to எல்.எம்.எல் – 3

 1. சில விசயங்கள் உங்களைப் போன்றோர் கூர்ந்துகவனித்து சொன்னாதாங்க மரமண்டைக்குப் புரியுது. நன்றி.

  • வாங்க மதுரை சரவணன். எழுதணுமேன்னு கொஞ்சம் மெனக்கெடறோம் அவ்வளவுதான்.

 2. ஐ பி எல் 3-ல் முதல் பந்தில் ஒரு விக்கெட் விழுந்தது எல் எம் எல் என்றே நினைக்கிறேன்.

  சூப்பர் ஓவர் வரை சென்னை மேட்ச் இழுபட்டது எல் எம் எல் என்ற சந்தேகம் எனக்கும் வந்தது.

  அரசியல் கூட்டுறவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லை என்றால், யாராவது பப்ளிக் இண்ட்ரெஸ்ட் லிடிகேஷன் போட்டு லலித் யாருக்கு என்ன எஸ்.எம்.எஸ். செய்கிறார் என்று கண்டுபிடித்து பார்க்கலாம்.

  பணம் சும்மா ஃபோர் அண்ட் சிக்ஸராக துள்ளி விளையாடுகிறது. பந்தயங்களில், பந்தயம் நிர்ணயித்த முடிவுகள் இருக்கலாம் என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது.

  • ஓ…அதுவேற நடந்திருக்கா…எனக்கு அது தெரியாம போச்சே!@?!?! தெரிஞ்சு என்ன பண்ணப்போறேன்னு கேட்கறீங்களா? இன்னும் ரெண்டு வரி கூடுதலா எழுதியிருப்பேன்.

 3. சாரதி,

  நமக்கு தெரிந்த விஷயம் தான்…..
  ஏமாற்ற இதில் ஒன்றும் இல்லை…

  நாம் எதையும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை…

  கிட்டதட்ட சீரியல் மாதிரி தான் இதுவும்.

  என்ன நடக்கும் என்று தெரிந்த விஷயம் தான், ஆனாலும் நம்ம எல்லோருடைய வீட்டிலும் 7.00 மணி முதல் 10.00 மணி வரை பூகம்பமே வந்தாலும் தெரியாது அது மாதிரி தான் சார் இதுவும்….

  இந்த பதிவில் மிகவும் பிடித்தது எல் எம் எல் மற்றும் 100 சதவிகதம் உண்மை…

  மக்களே தூங்காதீன்ங்க ! ! !

  தூங்கறவங்களை எழுப்பிடுவீங்க இந்த பதிவினால், தூங்கற மாதிரி நடிக்கிறவங்கள நாம என்ன பண்றது ???

  • பெண் கிரிக்கெட் ரசிகர் அளவுக்கு தெரிஞ்சு இருக்குண்ணா….கொஞ்சம் ஓவராத்தான் போயிக்கிட்டிருக்கு….

   அது சரி இன்னிக்கு யார் யாருக்கு மேட்ச் அனு?

 4. T.P.Anand says:

  பங்கு சந்தை மோசடி போல IPL (LML) ஒரு புது மோசடி.

  பழகிப்பாருங்க புடிக்கலைனா விட்டுட்டு வேர சேனல் பாருங்க – அய்யா சாலமன் பாப்பாய்யா சொன்ன மாதிரி

  பங்கு சந்தையில் ஏமாந்து இப்போ தங்கம், இன்சூரன்சு, வங்கி சேமிப்பு என வேர சேனல் தேடி போராப்பல LML பார்த்து time waste பண்ணாம காமடி டய்ம் பார்க்கர்து என நான் முடிவெடுத்து நிம்மதி தேடிகிட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *