ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டுக்கு திருவல்லிக்கேணி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தன் ஆசீர்வாதங்களையும் பக்தர்களுக்கு அளிக்க வீதி உலா வந்தபோது, சடாரென்று உங்கள் நினைவு வர, இந்த வாழ்த்தை அப்படியே ஐஃபோனில் படம் பிடித்துவிட்டேன். மீண்டும் ஒரு முறை என்னுடைய வாழ்த்துக்களும் அவரின் ஆசீர்வாதங்களும். படங்கள் தரம் அவ்வளவாக இல்லாததற்கு மன்னிக்கவும். கூடியிருந்த கூட்டத்தில் நான் வீடு வந்து என் நிக்கான் டி60யை எடுத்து வருவதற்குள் அவர் ஓடியே போய்விடுவார் என்பதால் இந்த அவசர ஐஃபோன் ஃபோட்டோ…


நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே

This entry was posted in ஃபோட்டோகிராஃபி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  1. அருமையான தரிசனம் சார்.. உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. :)

  2. அருமை… அட்டகாசம்… இனிய புத்தாண்டில் பார்த்தசாரதியின் தரிசனம்… நன்றி..

    புத்தாண்டு வாழ்த்துகள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *