அரட்டை அரங்கம் – பாகம் 2

மு.கு: இந்த பாகத்தில் பாகம் – 1ல் இருந்தது போல நகைச்சுவைக்கு எந்த கியாரண்டியும் இல்லை. ஜக்கி விவரித்தபோது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. முன்னுரையில் சொன்னதுபோல இவர்கள் சிந்திக்கும்படியான விஷயங்களையும் கூட அலசுகிறார்கள். அதுவும் பொங்கல் சிறப்பு..பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னாயிருந்தது…இக்கி..க்கி..கிகி..

பக்கி: ஹாய் மச்சான்ஸ்….எப்ப வந்தீங்க ரெண்டு பேரும்? ஒரு குரல் கொடுத்திருக்கலாமே…

ச்சக்கி: நாங்க வந்து ஒரு பத்து நிமிஷம் ஆச்சு பக்கி…கூப்பிட்டோம்…பதில் ஒண்ணும் வரலெ…நீ ஏதாவது வீட்டு வேலையா இருப்பேன்னு விட்டுட்டோம்..

ஜக்கி: என்னடா…பொங்கல் எல்லாம் நல்லா போச்சா? இன்னிக்கு தமிழ்ப் புத்தாண்டு வேறே….

ச்சக்கி: டேய் அது சித்திரையிலதாண்டா…

ஜக்கி: கலைஞர் மாத்திட்டார்..ஞாபகமில்லையா?

ச்சக்கி: அவர் என்ன இந்த தமிழ்நாட்டுக்கே சொந்தக்காரரா என்ன…அவர் சொன்னா…? தமிழன் வாழ்க்கையை மாத்தியமைக்க முதல்வராக்கினா இவரு மத்த எல்லாத்தையும் மாத்தியமைக்கறார்…யாரு இப்ப இதெல்லாம் கேட்டாங்க?

ஜக்கி: காலம் சொல்லுமில்ல…அப்பொழுதைய முதல்வராக இருந்த கலைஞர் மாத்தினார்னுட்டு…

ச்சக்கி: அவரு நித்திரையில் இருக்கும் போது சொன்னதுக்கெல்லாம் நான் சித்திரைய விட்டுக்கொடுக்க முடியாது…இந்தத் திணிக்கறது எனக்கு ஒப்புதல் இல்ல…

ஜக்கி: உன் ஒப்புதலுக்கெல்லாம் யாரும் காத்திருக்கல மச்சான்…அவர் முடிவு பண்ணிட்டாரு…அவரு முடிவெடுத்துட்டா அவர் சொல்றத அவரே கேட்கமாட்டார்…

பக்கி: ச்சக்கி பொங்காத…அம்மா வந்தா மாத்திடுவாங்க…

ச்சக்கி: தட் ஈஸ் வேர் ஐ ஆம் கமிங் டு…இப்படியே இவங்க நம்மள வாலிபால் ஆடறாங்க…நம்மள பத்தி யோசிக்க நேரமே இருக்கறதில்லை இவங்களுக்கு..

ஜக்கி: அரசியல் வேணாம்டா…பக்கி சொல்லு…பொங்கல்…ஹும்…என்ன…ஆச்சா?

பக்கி: போச்சு..இன்னொரு லீவுன்னு காண்பிச்சு கொடுக்க எல்லா டிவிலேயும் பரபரப்பா நிகழ்ச்சிகள்…

ஜக்கி: கொடுக்கண்ணு சொல்லாதே…கெடுக்கண்ணு சொல்லு…

ச்சக்கி: சரியா சொன்னே ஜக்கி…அதிருக்கட்டும் நாங்கதான் வீண் பாய்ஸ்..பேச்சிலர்ஸ்…நீ குடும்பஸ்தன் தானே…நீயும் அதேயே சலிச்சுக்கறே…

ஜக்கி: அதான் பிரச்சனை..நீங்க ஜாலியா கிளம்பி எங்கேயாவது போயிடலாம்…

ச்சக்கி: சரி சரி..புலம்பாதே…

பக்கி: ப்ரோக்லாம்லெ ஒரு நல்ல ப்ரோக்ராம்..சூர்யாவுடன் ஒரு கோடி ஒரு துவக்கம்…நல்லா இருந்தது…

ஜக்கி: ஆமாம்டா…அத சொல்லியே ஆகணும்… மனுஷன் பேசறத கேட்கும்போது எனக்கு புல்லரிச்சுப் போச்சு…போறா குறைக்கு என் மனைவி “நீங்களும்தான் இருக்கீங்களே..பாருங்க உங்களோட சின்னவர்தான் சூர்யா” அப்படீங்கறா

ச்சக்கி: பின்ன சும்மாவா…அகரம் பவுண்டேசன்னு ஒண்ண ஆரம்பிச்சு அதன் மூலமா எத்தன பேர் வாழ்க்கையில விளக்கேத்தி வெக்கிறார்…

பக்கி: சம்பாதிச்சா போறாது ச்சக்கி..உண்மையிலேயே நம்மை வளர்த்த இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யணும்னு அடிமனசுல தோணனும்…

ச்சக்கி: ஹீ ஈஸ் சிம்ப்ளி சூப்பர்ப்…ஹாட்ஸ் ஆஃப்..அது என்ன “விதை” தானே?

ஜக்கி: ஆமாம். அவர் செய்யறது மட்டுமில்லாம ஒரு சில பெரிய கம்பெனியின் நிறுவனர்களையும் செய்ய வெக்கிறார் பாரு…..

பக்கி: ஒரு இளைஞி தனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கும் பணமில்ல…மாற்று உடைகூட கிடையாது…தன் நண்பிகிட்டேயிருந்து வாங்கி போட்டுக்கிட்டு வந்திருக்கேன்னு சொன்னபோது…அவர் கண் கலங்கிப் போச்சு….எனக்கு என்னை நினைச்சு அவமானமா போச்சு….எங்கிட்ட போதுமான உடைகள் இருந்தும் லைஃப் ஸ்டைல் போய் இன்னும் வாங்கிக் கொள்கிறேனே தவிர..இப்படி மாற்று உடை இல்லாமல் தவிக்கும் இந்தியர்களை நெனச்சும் பார்க்கிறதில்லையே…

ச்சக்கி: பட் யூ நீட் மனி பவர் டு டூ பக்கி…ஈவன் எனக்கும் அந்த ஃபீலிங்ஸ் உண்டு…

ஜக்கி: பொடலங்கா மனி பவர்…உங்கிட்ட இருக்கறதுல மத்தவங்களுக்கு உதவி பண்ணலாமே…நாம் யாருக்காக காத்திருக்கணும்…என்ன உங்கிட்ட கோடி கோடியா பணம் சேர்ந்த பிறகுதான் செய்வியா….?

பக்கி: வெல் செட் ஜக்கி….

ச்சக்கி: மச்சான் இது பேச்சுக்கு ரொம்ப நல்லா இருக்கு…பட் ப்ராக்டிகலீ சில விஷயங்கள் இருக்கு…

ஜக்கி: எனக்கு புரியல..என்ன தடுக்குது?

ச்சக்கி: நானும் தினமும் என் வீடு தேடிவருபவர்களுக்கு என்னால் ஆன உதவியை செய்யறேன்…நிச்சயமா அவங்களுக்கு நான் 1 ரூபாயோ 2 ரூபாயோ மட்டும் போடறதில்லை…விலைவாசி, அடுத்த வீட்டில் அவர்களுக்கு கிடைக்குமோ என்னவோன்னு யோச்சிச்சு 10லேர்ந்து 20 வரை தர்றேன்..தட் ஈஸ் பர்ஃபெக்ட்லி ஃபைன் டு மீ…ஆனா சில பேர் வர்றாங்க…..அவங்கள மாசாமசம் பார்க்கறேன்…

பக்கி: அதுல நான் உன் பக்கம் ச்சக்கி…நானும் அனுபவப்பட்டிருக்கேன்…கையில ஒரு பேம்ப்ளட் கொண்டு வர்றாங்க…ஒரு நாலு பேர் வந்து கலக்ட் பண்றாங்க…சாரிட்டி நடத்தறாங்கன்னா அவங்களுக்கு ஃபண்டிங் ஏதும் வராதா? ஏன் அவங்க மாசாமசம் தெருத்தெருவா பணம் வாங்கணும்…மொதல்ல அவங்க சொல்ற ஆசிரமம் இருக்குங்கறது நாம செக் பண்ணிப்பார்க்கிறது கிடையாது அதுக்கு நேரமும் இல்லை…ஹவ் கேன் வி ட்ரஸ்ட் தெம்?

ச்சக்கி: இருந்தும் நான் அவங்க வந்தாலும் கொடுத்திக்கிட்டுதான் இருந்தேன் மச்சி..போன முறை வந்தபோது அவங்ககிட்ட சும்மா ஒரு பேச்சுக்கு போன மாசம்தானே வந்தீங்கன்னு கேட்டதுக்கு….”நாங்க மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் வரோம்”னாங்க…அப்பதான் எனக்கு லேசா டவுட் வந்தது…

ஜக்கி: சீ..நான் இதெல்லாம் பார்த்ததும் இல்ல…என்கரேஜ் பண்றதுமில்ல…உனக்கு உதவி செய்யும் குணம் இருந்தா நீ நேரா அந்த அந்த ஆசிரமத்துக்கு போய் உதவலாமே…நாம பண்றதில்லை…நேரத்தின் மேலேயும் வாழ்க்கையின் ஓட்டத்தின் மேலேயும் பழி போட்டு விலகி நிக்கறோம்…திஸ் ஈஸ் மை அப்சர்வேஷன்…

பக்கி: ஐ அக்ரீ வித் யூ ஜக்கி…நேரே போவது சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்…அதே சமயத்துல நான் வீட்டிலிருந்தோ அல்லது என் ரீச்சிற்கு அருகிலேயோ உதவ நினைக்கும் போது…க்வெஸ்டின் ஆஃப் தட் மினிட் ஈஸ்….அவங்க உண்மையானவங்களா?

ஜக்கி: அப்படியே அவங்க பொய் சொல்றாங்கன்னே வெச்சுக்கோ பக்கி…சோ வாட்…தட் பர்சன் ஆல்சோ நீட் ஹெல்ப் ரைட்…அவனுக்கு பண்ணதா நெனச்சுக்கோ…

ச்சக்கி: இத நான் ஒத்துக்கவே மாட்டேன்…அவனுக்கு வேணும்னா அவனுக்குன்னே கேட்கணும்..குழந்தைங்க பேரச் சொல்லி ஏமாத்தறது தப்பு ஜக்கி….

பக்கி: எனக்கு ஒரு ஐடியா தோணுது மச்சான்ஸ்…நாம் ஏன் அகரம் பவுண்டேசன் காண்டாக்ட் பண்ணி, அதுல உறுப்பினராகி, நம்ம டெஸ்க்குலேயும் வீட்டிலேயும் கலக்‌ஷென் பாக்ஸ் வெச்சிக்கக் கூடாது…யாரையும் ஃபோர்ஸ் பண்ணவேண்டாம்…அதுல கலக்ட் ஆகறத அப்படியே பவுண்டேசனுக்கு அனுப்பிடலாம்….என்ன சொல்றீங்க…?

ச்சக்கி: ஃபெண்டாஸ்டிக் ஐடியா பக்கி…வீ கேன்……இது வருங்கால இந்தியாவை ஒரு நல்ல பாதையில் கூட்டிக்கொண்டு போகும்…நமக்கு அடுத்து வரும் சந்ததியினருக்கு ஒரு நல்ல கற்ற, தூய்மையான இந்தியாவை கொடுக்கும்னு நம்பலாம்…

ஜக்கி: ஆமாம்…நானும் வழிமொழியறேன் மச்சான்ஸ்…கல்வி நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்…இன்னும் ஒரு நல்ல ஆர்கனைசேஷன் ”கிஞ்சித்காரம் ட்ரஸ்ட்”…இது வேளுக்குடி கிருஷ்ணன் நடத்தறார்…அவங்க கூட நல்ல நல்ல காரியங்கள் செய்யறாங்க…

ச்சக்கி: டேய்….என் ஃப்ரெண்ட் கோகுல், முகுந்த் ஃபாமிலி கூட “மதர்” அப்படின்னு ஒரு சாரிட்டி ரன் பண்றாங்க..அவங்களும் அகரம் போலவே…பட் ஸ்லைட் டிஃபரண்ட்…அவங்க ஊர்களுக்கு(கிராமங்களுக்கு) போய் இலவசமா பாடங்கள் எடுக்கிறாங்க…கல்வியறிவை வளர்க்க வொர்க் பண்றாங்க….மெடிக்கல் ட்ரீட்மெண்ட்ஸ் கூட ஏதோ செய்யறத முகுந்த் சொல்லியிருக்கான்..

பக்கி: பைதிவே…நீங்க கவனிச்சிருப்பீங்க..”http://www.agaram.in” தான் அகரம் பவுண்டேசனோட வெப்சைட். போய் பாருங்க..ஆன்லைன் டொனேஷன்கூட இருக்கும்னு நினைக்கிறேன்….

ச்சக்கி: கொஞ்சம் லைட்டர் சைட்ல…”ஆயிரத்தில் ஒருவன்” படம் மூலம் தமிழ் ஃபிலிம் இண்டஸ்ட்ரீய ஒரு லெவலுக்கு கொண்டு போகப்போகிறார் செல்வராகவன்…

ஜக்கி: ட்ரெய்லரே கலக்கல்…ஏதோ ட்ரெஷர் ஹண்ட் டைப் ஸ்டோரி போலிருக்கு….கார்த்தி கொடுத்து வெச்சிருக்காரு…இந்தப்பக்கம் ஆண்ட்ரியா அந்தப்பக்கம் ரீமா…பாட்டு அந்தளவுக்கு ஹிட் ஆகாதது லைட்டா உறுத்துது…பட் இந்த மாதிரி படங்கள்ள பாட்டோட ரீ-ரெக்கார்டிங்தான் பேசும்…பார்ப்போம்…ஜி.வி.பி தானே ம்யூசிக்?

பக்கி: யெஸ் ஜக்கி…தட் ஃபெல்லோ ஈஸ் வெரி டேலண்டட்….டிக்கெட் புக் பண்ணி போயிரலாமா மூணு பேரும்…

இருவரும் பலமாக தலையசைக்கிறார்கள்….

ச்சக்கி: சரி என்ன வேட்டைக்காரன் டோட்டலா அவுட் போலிருக்கே….

பக்கி: ஏண்டா…பார்க்கிறா மாதிரிதான் இருக்குன்னு நான் விசாரிச்சதுல கேள்விப்பட்டேன்

ஜக்கி: பின்ன எதுக்கு வேட்டைக்காரன் படத்தை பாருங்க பாருங்கன்னு டீலா நோ டீலாவை வெச்சு பப்ளிசிட்டி…அதான் ஓடுதில்லெ….

ச்சக்கி: மண்ணாங்கட்டி….நிகழ்ச்சியில கலந்துக்கணும்னா படத்தை பார்த்தே தீரணும்ங்கறாங்க….அப்பவே தெரியலையா?

பக்கி: அதான் 25000 கியாரண்டினு சொல்றாங்களே ச்சக்கி…

ஜக்கி: இப்படி இத நம்பி படம் பார்த்தா என்ன கலெக்‌ஷன் ஆகும்னு ஒரு கணக்கு போட்டுப் பார்….25000 நமக்கு வைக்கும் சின்னப் பொறி….

ச்சக்கி: அதுமட்டுமில்ல பக்கி…படத்தை தியேட்டர்லேர்ந்து தூக்கப் போறதா ஒரு பேச்சு…சன் பிக்சர்ஸ் அடுத்து கோவா, தீராத விளையாட்டுப் பிள்ளைன்னு டிஸ்ட்ரியூஷன் எடுத்திருக்காங்க இல்ல…

பக்கி: இப்பத்தானேடா இந்தப் படம் வந்தது…அதுக்குள்ளேயா? 25 டேஸ் ஆச்சா?

ஜக்கி: ஐ திங் சோ….

ச்ச்சக்கி: என்னவோ பண்றாங்க…விஜய் யோசிக்கணும்..புதுசா வர்றவங்க எல்லாம் சம்திங் புதுமையா செய்யறாங்க…கெட்டப் மாத்தவேணாம்…ஆனா ஒரே டைப் கொடுத்தா இந்த அடி நிச்சயம்…கேட்டா மக்கள குஷிபடுத்தறேன்னு ஒரு பூசணிக்காய போடறது….அப்ப மத்தவங்கெல்லாம் முட்டாளா….அவங்களுக்கெல்லாம் மக்கள குஷிபடுத்த எண்ணமில்லையா என்ன? தானா ஒண்ண நெனச்சுக்கறது…ஏதும் வரலைன்னா அதான் ஊருக்கு ஊர் சத்திரம், பங்களா எல்லாம் வாங்கிப் போட்டிருக்காரில்லெ…அதுல செட்டில் ஆகணும்…

பக்கி: தட் ஹிஸ் பர்சனல் ச்சக்கி…ஐ டோண்ட் அக்ரீ டு இட்…உனக்கு பிடிக்கலைன்னா பார்க்காதே…அவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு….

ஜக்கி: அதனாலதான் பக்கி அவர் நல்ல படங்கள் கொடுக்கணும்னு சொல்றோம்…மக்கள் அவரை நம்பி மட்டுமே அவர் படங்களை பார்க்க வர்றாங்க….நம்பினவங்கள ஏமாத்தறது பெரிய தப்பு..ஓகே ஃபோல்க்ஸ்…இது முடிவில்லாத டாபிக்…நான் கிளம்பறேன்….

பக்கி: இருடா…உள்ளவாங்க…சக்கரைப் பொங்கல் சாப்பிட்டு போங்க

என்று அன்பை பெரிய ட்யூபில் பீய்ச்சி அடிக்க….சர்க்கரைப் பொங்கலுடன் அன்றைய வெட்டிச் பேச்சையும் முடித்துக் கொண்டு ஜக்கியும் ச்சக்கியும் அவரவர் வீடு சென்றனர்..

சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்க இங்கே க்ளிக் செய்து ஓட்டு போட்டுங்கள். கண்டிப்பாக உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அவருக்குத் தெரிவியுங்கள். தப்பித்தவறி என் ப்ளாகுக்கு அவர் வந்தாரேயானால், இதை பார்த்து மகிழ்ச்சியடைவார். அவருக்கு மேலும் ஊக்கமளிக்கும். தவறாமல் ”விதை”க்கு உங்களால் ஆன உதவியை செய்யுங்கள். செய்துகொண்டிருப்பவர்கள் தொடருங்கள்.

This entry was posted in Featured, Headline, Sticky, தொ(ல்)லைக்காட்சி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *