Home » Featured, Headline, பொது

45 நாட் அவுட்

8 January 2010 7 Comments

ஒரு பட்டயக் கணக்கர். இவரின் ஞாபகசக்தி நான் வியக்கும் ஒன்று. சிறுவயதிலிருந்து போன நிமிடம் வரை நடந்த அனைத்தையுமே இவர் தன் ஞாபகத்தில் வைத்திருப்பது ஆச்சரியம்தான். என்ன ஒன்று, நமக்கு அவசரமாக வந்தாலும் விடாப்பிடியாக தன் ”ஞாபகம் வருதே”வை கேட்டுவிட்டுத்தான் போகவேண்டும் அடம்பிடிப்பார்.

இவர் இப்போதுதான் எழுதுகிறார் என்று பலர் நினைக்கக்கூடும். ஆனால் அவர் தன் கல்லூரி காலத்திலேயே கவிதைகளை எழுதியவர். ஒருவேளை எழுத்தில் முழுவீச்சில் இறங்கியிருந்தால் இன்று ஒரு பிரபல எழுத்தாளராக வந்திருக்க எல்லா வாய்ப்புக்களும் அவரின் படைப்புகளில் தெரிகிறது. ஆங்கிலப் புலமை அதிகம் இவர் ஆங்கிலப் படைப்புகளில் தென்பட்டாலும் நான் விரும்புவது இவர் தமிழில் எழுதவேண்டுமென்பதே. சுஜாதாவின் இன்னொரு ரசிகர். இவரின் எழுத்தில்/எழுத்து நடையில் அந்த தீவிரம் உங்களுக்கே தெரிந்திருக்கும். பாலகுமாரனையும் படிப்பார் சிட்னி ஷெல்டனையும் சிலாகிப்பார்.

சத்தியம் (உண்மையல்லாத என்று பொருள் கொள்ளலாம்) பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் பதிவர் உலகில் பிரசித்தம். இதுவரை படிக்கவில்லை என்றால், இப்போதே படியுங்கள்.

பட்டயக் கணக்கரின் முக்கிய வேலை அலசி ஆராய்வது. ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதனுள் சென்று அதில் என்ன நல்லது, கோளாறு என்று கண்டுபிடித்தல். தன் இளவயதிலேயே வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்வார் என்று இவரின் அம்மா அடிக்கடி சொல்வார். தன் பெயருக்கு ஏற்றார்போல் எப்பொழுதுமே உண்மையையே உரைப்பவர். எந்த ஒரு விஷயத்திலும் நடுநிலை கண்டு இருதரப்பு ஞாயங்களையும் பார்த்து தன் கருத்தை வழங்குவார். தன் அறிவிற்கு எட்டிய கருத்தை மறைக்காமல் (அது யாராக இருந்தாலும்) போட்டு உடைத்துவிடுவார். எதிர்பார்ப்பு மிக்கவர். இதனால் இவருக்கு எதிரிகளே அதிகம். எதிரிகள் என்று சொல்வதைவிட இவரைப் புரியாவதவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் என்று சொல்லலாம். இருந்தும் அநியாயத்திற்கு உதவி செய்பவர்.

இவருக்கு இசை பிடிக்கும். என்னதான் தான் எம்.எஸ்.வி காலத்து திரை இசையை அதிகமாக விரும்பினாலும், இன்றைய பிரபலம் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்ட தவறுவதில்லை. இளையராஜாவின் ரசிகரும் கூட. திறமை எங்கிருந்து வந்தாலும் அதை மதிப்பவர் போற்றுபவர். என்னைப் போல பாட்டுக் கேசட்டுகளையும் புத்தகங்களையும் வஞ்சனையே இல்லாமல் வாங்கித் தள்ளியவர். எம்.பி3 வந்தவுடன் பாட்டுக் கேசட்டுகளையும் தகடுகளையும் வாங்குவதை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

குடும்பத்தார் அனைவரிடமும் மிகுந்த பாசமிக்க மீன ராசி நேயர். மனித(ம்)நேயர்(சுஜாதவிற்கு மன்னிக்கவும் 🙂 ). குறிப்பாக பல விஷயங்களில் முன்மாதிரியாக விளங்குபவர். பட்டயக் கணக்கராக இருந்தாலும், எதையும் ஆராய்ந்து செய்வபவராக இருந்தாலும் இவரிடம் நான் எதிர்பார்க்கும் ஒன்று எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்ளவேண்டுமென்பதே.

நான் அறிந்தவரை இவர் இதுவரை வேலைப்பார்த்த எல்லா அலுவலகங்களிலும் தன் மேலாளரிடம் பாராட்டுக்களையும் நற்பெயரையுமே சம்பாத்தித்திருக்கிறார். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லும் இந்த பட்டயக்கணக்கர் தன் பேச்சாலும் எழுத்தாலும் பலரை இன்றும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பலரின் ஒருவன் நான்.

அழகான, அளவான குடும்பத்துக்கும் தெவிட்டாத இன்பத்துக்கும் சொந்தக்காரர். “ஜேஷ்ட ப்ராத: பித்ரு சமான: என்று சமஸ்கிருதத்தில் ஒரு வாக்கியம் உண்டு. அப்பாவை இழந்துவிட்ட எங்கள் நால்வருக்கும் இவர்தான் ஜேஷ்ட ப்ராத:. முன் பிறந்ததால் முன்மாதிரியாக இருக்கிறார்.

இப்படி இவரை புகழ்வதற்கும் இவரின் பிறந்தநாளை சுயேச்சையாக கொண்டாடுவதற்கும் ஒரே ஒரு காரணம். அவர் என் மூத்த சகோதரர்.

இவரை வாழ்த்த தற்சமயம் அம்மம்மா மற்றும் அப்பப்பா என்று அப்பா மற்றும் அம்மா தரப்பில் இல்லை என்றாலும் அவர்கள் விண்ணுலகத்திலிருந்து இவரை வாழ்த்துவார்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.

அவரை வாழ்த்தும் இன்னபிற அன்பு நெஞ்சங்கள்: அவரின் குடும்பத்தினர், அம்மா, திருவல்லிக்கேணி ஸ்ரீகாந்த் குடும்பத்தினர், மஸ்கட் முரளி குடும்பத்தினர், துபாய் சுந்தர் குடும்பத்தினர், மடிப்பாக்கம் பாலாஜி, ராஜன், திருச்சி கண்ணன் மற்றும் இவர்களது குடும்பத்தினர்.

அவரை நீங்களும் வாழ்த்தலாம் இங்கே சுட்டி…

7 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.