உலக வலை வரலாற்றில் முதல் முறையாக

வழக்கமா நாம் தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று “சின்னத்தாமரை அவிஷ்கா”, ”தித்திக்கும் திரிஷா”, “கோவாவுக்கு போகலாம் – கோவா படக் குழுவினருடன் ஒரு வித்தியாசமான சந்திப்பு” போன்றவைகளையே பார்த்துப் பார்த்து சலித்துபோய்விட்ட என் இனிய வலையர்களே இதோ உங்கள் நேசத்திற்குரிய விஜயசாரதி தன் வழக்கமான ”பாணி”யிலிருந்து சற்று விலகி…சரியா வரலை..இங்கேயே விட்டுருவோம்…இந்த புத்தாண்டுக்கு உலக வலை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பதிவரின் பேட்டியை உங்களுக்கு தருவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இனி பேட்டி…

நண்பன்: என்னன்னவோ எதபத்தியெல்லாமோ எழுதற. படிக்க சுமாரா இருக்கு. உன்ன ஒரு சின்ன பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன். என்ன ஓகேயா?

நான்: அதுக்கென்ன, என்னையும் ஒரு பதிவாளான மதிச்சு, மனுஷனா மதிச்சு பேட்டியெல்லாம் கேட்குறே…ஹும்..கோ அஹெட்..ஷூட் யுவர் க்வஸ்டீன்ஸ்..

நண்பன்: ஏன், இத்தன நேரம் நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்த..திடீர்னு என்ன ஆங்கிலம் வெங்காயம்?

நான்: சாரி ஏதோ ஒரு குஷியில ஆங்கிலத்துக்குத் தாவிட்டேன். பேட்டின்னதும் கொஞ்சம் பில்டப் கொடுக்கலாம்னுட்டு..ஹி..ஹி..

நண்பன்: வழியாத, நிறைய பேர் பேட்டி எடுக்க இருந்தாலும், சாதிச்சிருந்தாலும் உன்னப்போல ஒருவன் யாரும் கிடைக்கல.

நான்: ஓஹ்…தட்ஸ் க்ரேட் யா…இட்ஸ் மை ப்ளஷர்

நண்பன்: டேய். நிறுத்துடா. மறுபடி மறுபடி ஆங்கிலம் பேசி என் ப்ரஷர ஏத்தாத. உன்னப்போல யாரும் கிடைக்கலன்னு நான் குறிப்பிட்டது உன்னப்போல வெட்டியா வெங்காயம் உரிச்சுகிட்டு தேவையே இல்லாம அதிகமா பேசறதும் எழுதறதும் யாரும் இல்ல. அதைத்தான் அப்படி சொன்னேன்.

நான்: ஹி..ஹி..ஹி..சரி கேள்வியை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?

நண்பன்: மண்ணாங்கட்டி…நாந்தானே பேட்டி எடுக்கறேன்னு சொன்னேன்…அப்புறம் எதற்கு இந்த சினிமா டயலாக் எல்லாம். டேய் நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா?

நான்: ஆமாம் இல்ல…

நண்பன்: ஆமாவா இல்லையா…ஒழுங்கா சொல்லு

நான்: ஆமாம்…

நண்பன்: என்ன நோமாம்…பொத்திக்கிட்டு கேள்வியை காது கொடுத்து ஒழுங்கா கேளு

நான்: ஒரு சின்ன டவுட்…காதை கொடுத்திட்டு எப்படி கேட்கறது….அதுமட்டுமில்லாமல் காதை யாருக்கு கொடுக்கணும்னு சொல்லலையே நீ..

நண்பன்: எனக்கேவா…டவுசர் பாண்டி ரேஞ்சுக்கு இருந்துட்டு, டவுட்டா..கேள்வியை நிதானமா கவனிச்சு கேளு

நான்: ஒரே குழப்பமா இருக்கு, நீதானே கேள்வி கேட்பேன்னு சொன்ன…இப்ப நிதானமா கேளு, நின்னுகிட்டே கேளுங்கற…

நண்பன்: அய்யய்யோ…யாராவது வாங்களேன்….இந்த மூதேவிய என்னன்னு கேளுங்க கொஞ்சம்….தாங்கலை

நான்: ஓஹ்..அப்ப நீயும் நானும் கேள்வி கேட்கலையா..வேற யாராவது வராங்களா..எனி செலிபிரிட்டீஸ்?

நண்பன்: உன் மொகரகட்டைக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்…சரி நான் கேள்விய கேட்க ஆரம்பிக்கறேன்..

நான்: அப்போ வேற யாரும் வரலையா..நீயேதான் கேட்கப் போறியா?

நண்பன்: டேய் முந்திரி கொட்ட கொஞ்சம் பொத்திக்கோடா….நாந்தான் கேட்கப் போறேன் போதுமா?

நான்: போதும்..சரி எதபத்தியெல்லாம் கேட்கப் போறே? ஜீகே ஆர் ஸ்பெசிஃபிக் சப்ஜக்ட்?

நண்பன்: உனக்கு ஜீகேயும் கிடையாது, ஸ்கூல்லையே நீ ஃபெயிலாகத ஒரே சப்ஜக்ட் மாக்ஸ்ன்னும் எனக்கு தெரியும்…

நான்: யா..யா…

நண்பன்: என்ன யா..யா..வெங்காயா….மாக்ஸ் எக்ஸாமுக்கு மட்டமடிச்சுட்டே…இல்லாட்டி அதுலையும் சுத்தமான வட்டம்தான் அடிச்சுருப்பே…

நான்: இப்ப எதுக்கு பழசையெல்லாம் பேசிகிட்டு..அது அப்போ..கண்ணா நேத்து நான் ஃபெயிலாப் போனேன் இன்னிக்கு மெயில் ஸ்பீடுல போறேன்..நாளைக்கு ?

நண்பன்: இது வேறயா? உங்களுக்கெல்லாம் சொந்தமா எதுவுமே தோணாதாடா…ஏண்டா இப்படி…?

நான்: ஹி..ஹி..ஹி..எல்லாம் ஒரு டமாசுக்குத்தான்…

நண்பன்: இது டமாசா? இப்படி நினைச்சுக்கிட்டு ஏதையாவது எழுத வேண்டியது, அப்புறம் உன்ன மாதிரியே டமாஸ் பண்ற மத்தவங்க வந்து ஓட்டு போடவேண்டியது..இப்படியே எத்தன நாள் காலம் தள்ளறதா உத்தேசம்..ஒரு நாள் இல்ல ஒரு நாள் மகனே நீங்கெல்லாம் பைத்தியம் பிடிச்சு பாயப் போறாண்டப் போறீங்க…

நான்: கண்ணு போடாத..எங்க நட்பு என்ன சாதரணமான நட்பா? நான் என்ன எழுதினாலும் ஒரு 50 பேர் ரெகுலரா வந்து ஒரு ஓட்டும், மறுமொழியும் போட்டுடுவாங்க தெரியுமா?

நண்பன்: ஓஹ்..நல்லாத் தெரியுமே…படிச்சேன்…..மறுமொழிக்கு அர்த்தமே தெரியாம, எந்தப் பதிவுக்கு மறுமொழி போடணும்னு தெரியாம, ஆபீஸ்ல வேலையில்லைன்னு உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு குத்த வேண்டியது…

நான்: சரி அத விடு…நீ ஏதோ பேட்டி எடுக்கணும்னு சொன்னியே…ஸ்டார்ட் யுவர் க்வஸ்டீன்ஸ்…ஐம் ஃபார் த கேம்…

நண்பன்: டேய் நீ அடங்கவே மாட்டீயாடா?

நான்: முதல் கேள்வியே ரொம்ப ந(க்க)(ல்)லா கேட்டிருகீங்க….வெல்…சீ…

நண்பன்: டேய் நிறுத்து, அது பேட்டிக்கான கேள்வியே இல்ல. அது சரி என்ன திடீர்னு மரியாதையெல்லாம்…

நான்: ஓஹ்…ஐம் சாரி. பேட்டியெல்லாம் பார்த்ததில்லையா நீ…கேள்வி கேட்டா இப்படித்தான் ஆரம்பிக்கணும்…அதுதான்…நானும்…

நண்பன்: உன்ன வாரி மே மாச வெய்யில்ல போட…எதுக்கு இந்த விளம்பரம்? ஏன் இப்படி? நிறுத்து…எல்லாத்தையும் நிறுத்து…

நான்: என்ன நிறுத்தச் சொல்ற? எத நிறுத்தணும்? ஒண்ணும் புரியல. இருந்தாலும்…எல்லாரையும் நிறுத்தச் சொல்லு?நான் நிறுத்தறேன்…

நண்பன்: ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..ஷபா…என்னால முடியல…

நான்: முடியல இல்ல, முடியாது, எல்லாரையும் நிறுத்தச் சொல்றதுன்னா என்ன சின்ன விஷயமா?

நண்பன்: டேய் இது அந்த முடியலடா…

நான்: ஓஹ்..அப்ப..அய்யய்யோ இப்ப மாத்ரூபூதம் கூட இல்லியே…காளிமுத்துவ பாரு…தினத்தந்தியில் இரண்டாம் பக்கதுல அவர் அட்ரஸ் இருக்கு…

நண்பன்: அடப்பாவி, இது அந்த முடியல இல்லடா…இது வேற….

நான்: என்ன வேற வெங்காயம்னுகிட்டு….முடியலைன்னா விட்டுரு…

நண்பன்: இப்ப நாம பேட்டிக்கான கேள்விக்கு போகலாமா வேணாமா?

நான்: ஒஹ்..மை காட்…சக்ஸ் மேன்…இன்னுமா ஆரம்பிக்கலை…

நண்பன்: எங்கடா கேட்கவிட்ட….இனிமேலாவது கவனமா கேளு…

நான்: மறுபடியும் என்ன கேட்கச் சொல்ற…இப்ப யாரு கேட்கப் போறது யாரு சொல்லப்போறது…

நண்பன்: உன் பேட்டியும் வேணாம் ஒண்ணும் வேணாம்…நீ நல்லா நாசமாபோ…நான் கிளம்பறேன்..இனியும் இங்கேயிருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சு அப்புறம் சைக்யாட்ரிட்ஸ் கிட்டதான் போகணும்…அங்க போன அவரு கேள்வி கேட்பாரு…

நான்: ஓஹ்..இப்ப அவங்கெல்லாம் கூட பேட்டி எடுக்கறாங்களா…

நண்பன்: அய்யய்யோ…யாரவது வந்து என்ன காப்பாத்துங்க…

நான்: யாரை காப்பாத்தணும்…உன்னையா இல்ல அந்த டாக்டரையா?

தொப்பென்ற சப்தம் கேட்டது. திரும்பிப் பார்க்கையில்…அவன் மயங்கிவிட்டிருந்தான். டேய்…எழுந்திருடா…டேய்…யாராவது வாங்களேன்…என் ஃப்ரெண்டு மூர்ச்சையாகிட்டான்…

நீங்க: இது பேட்டியா இல்லை பேச்சுப் போட்டியா? என்ன இருந்தாலும் நீங்க உங்க நண்பனை இப்படி கலாய்த்திருக்கக் கூடாது. பாவம், இப்ப அவரு எந்த ஆஸ்பத்திரியில இருக்காரு?

நான்: அவரு ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கெல்லாம் வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை பார்க்க அவர் ஆஸ்பத்திரி அட்ரஸ் எல்லாம் தேவையில்லை, என்னை ஒரு பேட்டி எடுத்தால் போதும்…ரெடியா?

நீங்க: உங்க ஃபோன்ல வராத அழைப்புல “ஹலோ! ஆங்ங்..நாந்தான்..யெஸ்…சொல்லுங்க…தோ இம்மிடியட்டா கிளம்பறேன்…ஓகே மிஸ்டர் விஜய்..நான் கொஞ்சம் அவசரமா கிளம்பணும்…ஃபோன் வந்திருக்கு…

நான்: அந்த ஃபோன் பண்ணதே நாந்தான் பாஸ்…என்ன அவசரம்..இருங்க போகாலாம்…..

நீங்க: !@)#(@)#@()$(@(*@#(@*)@#)!()#(#@(*$)(@!@!@!)(#_@_)(*&&%%$^#@!

உங்களுக்கு சில கேள்விகள் இருக்கலாம். எதுக்கு அதை விட்டுவைப்பானேன். கேளுங்கள். எல்லாவிதமான ஏடாகூடமான கேள்விகளுக்கும் நான் தயார். நீங்கள் தயாரா? சிறந்த கேள்விக்கு நிச்சயம் பரிசு உண்டு. என்ன பரிசுன்னு சொல்லிட்டா உங்கள் கேள்வி அதன் அடிப்படையில் அமைந்துவிடுமென்பதால்…பரிசை பற்றி பின்பு பார்க்கலாம். கேலியோ இல்லை டூமான்கோலி சைஸ் கேள்வியோ அள்ளிவீசுங்க…கூடவே ஒரு ஓட்டையும் போடலாம் (உங்களுக்கு நேரமும் இஷ்டமும் இருந்தால்)

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (சாரு கோபப்பட மாட்டாரே :-) )

This entry was posted in Featured, Headline, நகைச்சுவை and tagged , , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to உலக வலை வரலாற்றில் முதல் முறையாக

 1. பேட்டி எந்த டிவியில ரிலீஸ் பாஸ்?

  • வசந்த் வாங்க.
   டிவிக்கு காபி ரைட்ஸ் கொடுக்கறத பத்தி கமிட்டி கூட்டி முடிவெடுக்கணும். நிச்சயம் உங்களுக்கு முதல்ல தெரியபடுத்தறேன்.

 2. கலக்கல் பேட்டி.. ஓட்டும் போட்டாச்சு..

  // கண்ணா நேத்து நான் ஃபெயிலாப் போனேன் இன்னிக்கு மெயில் ஸ்பீடுல போறேன்..நாளைக்கு?//
  இந்த இடத்துல நிறுத்தி, ஒரு புன்னகையோட ஆடியன்ஸ்’ச பார்த்து அப்படியே மேல்நோக்கி கை காமிச்சிருந்தீங்கன்னா சும்மா கிளாப்ஸ் அள்ளும்…

  ஓகே.. இதோ என் டூமான்கோலி சைஸ் கேள்வி…
  நீங்க வெறும் விஜய்யா… இல்ல டாக்டர் விஜய்யா???

  :)

 3. அன்பு மணி,
  டிவி ப்ரோக்ராம்ல இதெல்லாம் செஞ்சிருவோமில்ல.

 4. கந்தசாமி படத்தில் விக்ரம் ஷ்ரேயாவுடன் கேள்விகளிலேயே பேசும் காட்சியை நினைவு “படுத்துகிறது”.

  இத படிக்கறவங்க சேது விக்ரம் ஆவது கியாரண்டி.

  இனிமே யாராவது உங்கள வம்புக்கு இழுத்தா “பட்டா பதிவாலேயே அறுப்பேன்”னு சொல்லலாம்.

  • நன்றி சத்தியமூர்த்தி. இது கந்தல்சாமி டைப் பேட்டி. ஏற்கனவே ஒரு சிலர் ஏர்வாடி அட்ரஸ் கேட்டு அலையறதா நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வங்த வண்ணம் இருக்கின்றன. அப்புறம் நீங்க ஏதோ கேட்கணும்னு சொன்னீங்களே?

 5. அந்தர் பண்ணிட்டீங்க போங்க

 6. thenammai says:

  விஜயசாரதி ..
  யம்மாடி மூச்சு வாங்குது ..
  எப்பூடீ இப்படியெல்லாம் ஐடியா வருது .. .
  ஆனா நல்லாத்தான் இருக்கு ..

  அடுத்த பதிலை நீங்க சொல்றதுக்குள்ள எஸ்கேப்

 7. alen says:

  kalakitinga ponga….

 8. T.P.Anand says:

  Dear Sarathy,

  This is fantastic. You have mixed Visu and Vadivelu in this interview and thorughtout the article i was hearing either Visu or Vadivelu.

  Really enjoyed reading it.

  Regards,
  Anand

  • ரொம்ப நன்றி ஆனந்த் அண்ணா….என்னடா என் கடைப்பக்கம் ஆளையே காணோமேன்னு பார்த்துக்கிட்டிருந்தேன்….

 9. MN Karthikeyan says:

  Hi ,
  Interviewer Name pls ?????
  Who is that BLACK SHEEP ??

  • பாட்டும் நானே பாவமும் நானே….நேர்காணல் எடுத்தவர் நேர்காணல் கொடுத்தவர்…கார்த்திக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *