Home » அனுபவம்

ஸஹஸ்ரநாமமும் நானும்

9 December 2009 15 Comments
தலைப்பை பார்த்து நான் ஏதோ அந்த காலத்து மனுஷன், நடிகர் ஸஹஸ்ரநாமத்தை பற்றியோ அல்லது அவருடன் நான் பழகிய நாட்களைப் பற்றியோ எழுதப்போகிறேன் என்று தப்பாக நினைத்துக் கொள்ளவேண்டாம். நான் சொல்ல வரும் ஸஹஸ்ரநாமம் எம்.எஸ் பாடிய, பல பேரின் வீட்டில் மாலைவேளைகளிலும், சில பல வைணவ  கோவில்களிலும் ஒலிக்குமே அதை பற்றித்தான். உடனே நான் ஏதோ அதை முழுவதுமாக படித்துவிட்டு உங்களுடன் அதன் அர்த்தத்தை பகிரப்போகிறேன் என்று அடுத்தகட்ட கனவுக் கோட்டையை கட்டியிருந்தால், தயவு செய்து அதை உடனடியாக உடைத்தெறிந்துவிடுங்கள். இது அதை பற்றியும் இல்லை. இது என் அனுபவம். உங்களின் அனுபவமாகவும் இருக்க அநேக வாய்ப்புகள் உள்ளது.
அன்று அலுவலகத்திலிருந்து கண் வலி காரணம் காட்டி கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டேன். எதையும் ஒரு கோணத்தில் (கண் வலியால்) பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குமேல் எதையும் எந்த கோணத்திலும் பார்க்கவேண்டாம் என்று கண்ணில் மருந்துவிட்டு, கம்ப்யூட்டரை மறந்துவிட்டு தூங்கிப்போனேன். எழுந்ததும் ஒரு கப் கும்பகோண காபி. கண்ணாடியில் பார்த்த போது கண் கொஞ்சம் பரவாயில்லை போல தோன்றியது. இருந்தாலும் என் அன்பு மனைவி வலது கண் விஜயகாந்த் கண் போல உள்ளது என்று நக்கலடித்தாள். நாம் ரசித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் நக்கலடிப்பதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கொண்டு அடிப்பாள். எதற்கு வம்பு? ”அப்படியா” என்று ஒரு சிரிப்பை அவிழ்த்துவிட்டு தப்பித்துக் கொண்டேன். முகம் கழுவி, ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டு, ஐபாடை போஸ் ஸ்பீக்கரில் முடிந்து பஜகோவிந்தமும் ஸஹஸ்ரநாமத்தையும் ஓடவிட்டேன்.
”சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்” என்று ஆரம்மித்தது. ”ஆஹா” என்று எம்.எஸ் குரலையும் ஸஹஸ்ரநாமத்தின் இனிமையையும் ரசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே என் ப்ராஜக்டில் வேலை செய்யும் ஹரி செல்ஃபோனினான்.
“விஜய், அந்த லைன்ஸ் ஏன் ஸ்ப்லிட்டாகலன்னு பார்த்துட்டேன் விஜய். அது செக் நம்பர் சேமா இருந்திருக்கு” என்று விவரித்து. அதற்கு நான் பதில் கேள்வி சிலவற்றை கேட்க (கேட்கலைன்னா ப்ராஜக்ட் மானேஜர்னு ஒத்துக்க மாட்டாங்களே) சளைக்காமல் அவனும் அதற்கெல்லாம் மிகப் பொறுமையாக அட்சரம் பிசகாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் போதுமான இடைவெளி விட்டு பேசினான். சுருங்கச் சொன்னால், ப்ளாக் எழுத எதுவும் தோணாதபோது ஒரு சின்ன விஷயத்தை நீட்டி முழக்கி எழுதுவோமே, அப்போது அதை எழுத எடுத்துக் கொள்ளும் அவகாசத்தை இதற்கு ஒப்பிடலாம். என்ன நாம் உளறுவோம் ஹரி குழப்பினான். ஃபோன் காலை கட் செய்து காதை எம்.எஸ்ஸுக்கு கொடுத்தேன். அப்போது எம்.எஸ் ”கிமேகம் தைவதம் லோகே”வை தொட்டிருந்தார்
“டேய் இங்க வாடா, வா இன்னும் ஒரு வாய்தான் இருக்கு, குடிச்சு முடிச்சுரு. அப்புறம் பில்டிங் செட்டை பக்கத்தாத்து ஸ்ரீராமுக்கு கொடுத்துருவேன்” என்று என் மகனை மிரட்டினேன். “நேத்து…” என்று என் மனைவி ஏதோ சொல்ல ஆரம்பித்து முடித்தாள். இடைப்பட்ட நேரத்தில் என் மகன் என் பர்ஸை எடுக்க மறுபடியும் “அதெல்லாம் எடுக்காதடா” என்று அதட்டினேன். போஸ் ஸ்பீக்கரில் இப்போது “புண்யோபேதம் புண்டரீகாயதாக்‌ஷம்” ஒலித்துக் கொண்டிருந்தது.
”கொஞ்சம்  குழந்தைக்கு ட்ரெஸ் பண்ணிடறீங்களா?” என்று கெஞ்சலாக் அதட்டினாள். அது எப்படி கெ.அ ரெண்டும் ஒரே சமயத்தில் என்று திருமணமானவர்கள் கேட்கவே மாட்டார்கள். திருமணமாகாதவர்கள் தற்தம்  பெற்றோகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். “சரி” என்று ஒத்துக்கொண்ட்டு தேவையான பகுடர், சீப்பு, மாற்று உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு “யாமுனா (அதுதான் என் மகனின் பெயர்) வாம்மா. வந்து ட்ரெஸ் பண்ணிக்கோ வா. ட்ரெஸ் பண்ணிண்டு பாட்டியாத்துக்கு போகணுமில்ல. வா” என்றழைத்தேன்.
வழக்கமான படுத்தல்களுடன் என் மகனும் வந்து ட்ரெஸ் செய்து கொள்ள, முடிக்கும் போது எம்.எஸ் இப்போது “விச்வம் விஷ்னூர் வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:” என்று முடித்தார்.
“நான் கடைக்கு கிளம்பட்டுமா? அம்மா ஆத்துக்கு போன ஞாபகமா சாத்தமுது வாங்கிண்டு வாங்கோ. குழந்தைக்கு சாதத்துக்கு. நான் வெக்கல. மறந்துடாதீங்க என்ன? (அவ்வளவு நம்பிக்கை என் மீது)”. ஆரம்பத்திலிருந்தே ஸஹஸ்ரநாமத்தை உட்கார்ந்து கேட்க வேண்டி எத்தனித்திருந்த நான், அதை காதில் வாங்கிக் கொண்டே “சரி” என்றேன்.
சரி மீதியை கேட்கலாம். கேட்க மட்டும் செய்யலாம் என்ற முடிவோடு உட்கார்ந்தேன். என் மகன் தன் வேலைகளை தொடர்ந்தான். மேஜை மேலிருந்த என் ஐஃபோனை தொட, “டேய் கொஞ்ச நேரம் சும்மாயிருடா. அதெல்லாம் தொடக்கூடாது” என்று அதட்டிவிட்டு “மஹா புத்திர் மஹாவீர்யோ”வில் எம்.எஸ்ஸை பிடித்து மறுபடியும் கேட்கத் தொடங்கினேன் அங்கிருந்து.
அந்த ஆர்.எஃப்.பி முடிக்கணுமே. ரொம்ப பெரிசா கொடுத்திருக்காங்க..ச்சே….எந்த வேலைன்னு செய்யறது. அடடே பாஸ்கருக்கு ஸ்கோப் அனுப்பறதா சொன்னோமே. ஃபோன் பண்ணிடுவாரே இப்போ. சரி அத முடிச்சுட்டு குழந்தைய வெளியே கூட்டிப் போகலாம். வீட்டுக்கு வந்தும் வேலை வேலைன்னு ச்சே என்ன பொழப்பு இது. மைண்ட மாத்தலாம். அடுத்த பதிவு என்ன போடலாம். அந்த ட்ரான்ஸ்லேஷன் பண்ணோமே அத போடலாமா? வாலியை பத்தி ஒண்ணு எழுதினோமே அத போடலாம். புதுசா ஏதாவது எழுதலாம். என்ன எழுதறது? என்று எனக்குள்ளே என்னோடு நானே பேசிக்கொண்டிருந்த நேரத்தில் எதற்குமே காத்திராமல் எம்.எஸ் ரொம்ப தள்ளிப்போய் “வருணோ வாருணோ வ்ருக்‌ஷ: புஷ்கராக்‌ஷோ மஹாமநா:”வில் இருந்தார்.
எந்த நேரத்தில் யோசித்தேனோ தெரியவில்லை பாஸ்..பாஸ்..என்று பாஸ்கர் ஃபோனில் அழைத்தார். “விஜய் உங்க காலுக்குத்தான் வெயிட் பண்றேன்” என்றார். அவரிடம் நான் ஸஹஸ்ரநாமம் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை என்றெல்லாம் சொல்லமுடியுமா அல்லது சொன்னால் புரிந்துகொள்வாரா. “இதோ அனுபிடறேன். உங்க வேலையத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று ஸஹஸ்ரநாமத்தின் இடையே அப்பட்டமான பொய் உரைத்தேன். திரும்பவும் விட்ட இடத்திலிருந்து தொடர முடியாமல் இடையூறுகள் காரணமாய் “சதுர் மூர்ததிஹ்ச் சதுர்பாஹூச் சதுர்வ்யூஹச் சதுர்கதி:” பிடித்தேன்.
கிளம்பட்டுமா என்று கேட்ட என் மனைவி அலங்காரங்களை எல்லாம் வெகு(?) சீக்கிரமாக முடித்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து “மறந்துடாதீங்க என்ன. ஒரு சாவி நான் எடுத்துண்டு போறேன். 8 மணிக்குள்ள வந்துடுவீங்க இல்ல? என்று நிஜமாகவே கிளம்பினாள். “சரி” என்று தலையாட்டினேன்.
என் மகன் அவளோடு போவதாக அடம் செய்தான். “இரும்மா. அப்பா உன்ன வண்டியில கூட்டிண்டு போறேன். நாம டாடா போகலாம் சரியா. அம்மாவுக்கு டாடா சொல்லு” என்றதும் என் நல்ல நேரம் எப்போதுமே அடம்பிடிக்கும் என் மகன் சரியென்று அவளுக்கு “பை” சொன்னான். கதவை பூட்டிவிட்டு மறுபடியும் எம்.எஸ்ஸை தொடர இப்போது அவர் “ஸ்ரீபார்வத்யுவாச:- கேநோபாயேந லகுநா”வில் இருந்தார். மிச்சத்தையாவது கேட்போம் என்று அவரை தொடர்ந்தேன். “ஸ்ரீஈச்வர உவாச”வில் என் மகன் பாட்டி ஆத்துக்கு கூட்டி செல்லும்படி என்னை நச்சரித்தான்.
நானும் “நீ தினமும் பெருமாள் கிட்ட நின்னுண்டு சொல்லுவியே அது வரும் பாரு இப்போ” எனும் போது “ஸ்ரீராம ராம ராமேதி” என்று எம்.எஸ் ச்பஷ்டமாக பாடிக்கொண்டிருந்தார்.ஆமாம் அவர் பேசினாலே பாடுவது போல இருக்கும். ஸஹஸ்ரநாமத்தை ஒரு தனி ராகத்தில் சொல்லும்போது நிச்சயம் நம் மனது லயித்துதானே போகும். தான் சொல்லும் ஸ்லோகம் என்றது விரும்பி கேட்ட என் மகன் அது முடிந்தவுடன் மறுபடியும் தொடர்ந்தான். அவனை ஒரி வழியாக சமாதானப்படுத்தி மறுபடியும் ஸஹஸ்ரநாமத்தின் பக்கம் திருப்ப எம்.எஸ் “காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா”வில் மொத்தமும் முடிக்க இருந்தார். இன்னும் மூன்றே வரி, ஸஹஸ்ரநாமம் மொத்தமும் முடிந்துவிடும் என்று நினைத்து முடிப்பதற்குள் கடைசி வரிக்கு வந்துவிட்டார் எம்.எஸ். இப்படியாக ஒருவழியாக ஸஹஸ்ரநாமம் முழுவதையும் கேட்டு முடித்தேன்.
இது மாதிரி தினமும் ஸஹஸ்ரநாமம் சாயங்கலத்துல கேட்டா கோடி புண்ணியம் கேரண்டி. மகாநதியில கூட பூர்ணம் கமல் கிட்ட ஜெயிலுக்குள்ள பெருமாள் ஸ்லோகம் பத்தி சொல்லுவாரே ஞாபகம் இருக்கா?

தலைப்பை பார்த்து நான் ஏதோ அந்த காலத்து மனுஷன், நடிகர் ஸஹஸ்ரநாமத்தை பற்றியோ அல்லது அவருடன் நான் பழகிய நாட்களைப் பற்றியோ எழுதப்போகிறேன் என்று தப்பாக நினைத்துக் கொள்ளவேண்டாம். நான் சொல்ல வரும் ஸஹஸ்ரநாமம் எம்.எஸ் பாடிய, பல பேரின் வீட்டில் மாலைவேளைகளிலும், சில பல வைணவ கோவில்களிலும் ஒலிக்குமே அதை பற்றித்தான். உடனே நான் ஏதோ அதை முழுவதுமாக படித்துவிட்டு உங்களுடன் அதன் அர்த்தத்தை பகிரப்போகிறேன் என்று அடுத்தகட்ட கனவுக் கோட்டையை கட்டியிருந்தால், தயவு செய்து அதை உடனடியாக உடைத்தெறிந்துவிடுங்கள். இது அதை பற்றியும் இல்லை. இது என் அனுபவம். உங்களின் அனுபவமாகவும் இருக்க அநேக வாய்ப்புகள் உள்ளது.

அன்று அலுவலகத்திலிருந்து கண் வலி காரணம் காட்டி கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டேன். எதையும் ஒரு கோணத்தில் (கண் வலியால்) பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குமேல் எதையும் எந்த கோணத்திலும் பார்க்கவேண்டாம் என்று கண்ணில் மருந்துவிட்டு, கம்ப்யூட்டரை மறந்துவிட்டு தூங்கிப்போனேன். எழுந்ததும் ஒரு கப் கும்பகோண காபி. கண்ணாடியில் பார்த்த போது கண் கொஞ்சம் பரவாயில்லை போல தோன்றியது. இருந்தாலும் என் அன்பு மனைவி வலது கண் விஜயகாந்த் கண் போல உள்ளது என்று நக்கலடித்தாள். நாம் ரசித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் நக்கலடிப்பதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது கொண்டு அடிப்பாள். எதற்கு வம்பு? ”அப்படியா” என்று ஒரு சிரிப்பை அவிழ்த்துவிட்டு தப்பித்துக் கொண்டேன். முகம் கழுவி, ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டு, ஐபாடை போஸ் ஸ்பீக்கரில் முடிந்து பஜகோவிந்தமும் ஸஹஸ்ரநாமத்தையும் ஓடவிட்டேன்.

”சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்” என்று ஆரம்மித்தது. ”ஆஹா” என்று எம்.எஸ் குரலையும் ஸஹஸ்ரநாமத்தின் இனிமையையும் ரசிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே என் ப்ராஜக்டில் வேலை செய்யும் ஹரி செல்ஃபோனினான்.

“விஜய், அந்த லைன்ஸ் ஏன் ஸ்ப்லிட்டாகலன்னு பார்த்துட்டேன் விஜய். அது செக் நம்பர் சேமா இருந்திருக்கு” என்று விவரித்து. அதற்கு நான் பதில் கேள்வி சிலவற்றை கேட்க (கேட்கலைன்னா ப்ராஜக்ட் மானேஜர்னு ஒத்துக்க மாட்டாங்களே) சளைக்காமல் அவனும் அதற்கெல்லாம் மிகப் பொறுமையாக அட்சரம் பிசகாமல் ஒவ்வொரு வார்த்தைக்கும் போதுமான இடைவெளி விட்டு பேசினான். சுருங்கச் சொன்னால், ப்ளாக் எழுத எதுவும் தோணாதபோது ஒரு சின்ன விஷயத்தை நீட்டி முழக்கி எழுதுவோமே, அப்போது அதை எழுத எடுத்துக் கொள்ளும் அவகாசத்தை இதற்கு ஒப்பிடலாம். என்ன நாம் உளறுவோம் ஹரி குழப்பினான். ஃபோன் காலை கட் செய்து காதை எம்.எஸ்ஸுக்கு கொடுத்தேன். அப்போது எம்.எஸ் ”கிமேகம் தைவதம் லோகே”வை தொட்டிருந்தார்.

“டேய் இங்க வாடா, வா இன்னும் ஒரு வாய்தான் இருக்கு, குடிச்சு முடிச்சுரு. அப்புறம் பில்டிங் செட்டை பக்கத்தாத்து ஸ்ரீராமுக்கு கொடுத்துருவேன்” என்று என் மகனை மிரட்டினேன். “நேத்து…” என்று என் மனைவி ஏதோ சொல்ல ஆரம்பித்து முடித்தாள். இடைப்பட்ட நேரத்தில் என் மகன் என் பர்ஸை எடுக்க மறுபடியும் “அதெல்லாம் எடுக்காதடா” என்று அதட்டினேன். போஸ் ஸ்பீக்கரில் இப்போது “புண்யோபேதம் புண்டரீகாயதாக்‌ஷம்” ஒலித்துக் கொண்டிருந்தது.

”கொஞ்சம் குழந்தைக்கு ட்ரெஸ் பண்ணிடறீங்களா?” என்று கெஞ்சலாக அதட்டினாள். அது எப்படி கெ.அ ரெண்டும் ஒரே சமயத்தில் என்று திருமணமானவர்கள் கேட்கவே மாட்டார்கள். திருமணமாகாதவர்கள் தற்தம் பெற்றோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். “சரி” என்று ஒத்துக்கொண்ட்டு தேவையான பகுடர், சீப்பு, மாற்று உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு “யாமுனா (அதுதான் என் மகனின் பெயர்) வாம்மா. வந்து ட்ரெஸ் பண்ணிக்கோ வா. ட்ரெஸ் பண்ணிண்டு பாட்டியாத்துக்கு போகணுமில்ல… வா” என்றழைத்தேன்.

வழக்கமான படுத்தல்களுடன் என் மகனும் வந்து ட்ரெஸ் செய்து கொள்ள, முடிக்கும் போது எம்.எஸ் இப்போது “விச்வம் விஷ்ணூர் வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:” என்றார்.

“நான் கடைக்கு கிளம்பட்டுமா? அம்மா ஆத்துக்கு போனா ஞாபகமா சாத்தமுது வாங்கிண்டு வாங்கோ. குழந்தைக்கு சாதத்துக்கு. நான் வெக்கல. மறந்துடாதீங்க என்ன? (அவ்வளவு நம்பிக்கை என் மீது)”. ஆரம்பத்திலிருந்தே ஸஹஸ்ரநாமத்தை உட்கார்ந்து கேட்க வேண்டி எத்தனித்திருந்த நான், அதை காதில் வாங்கிக் கொண்டே “சரி” என்றேன்.

சரி மீதியை கேட்கலாம். கேட்க மட்டும் செய்யலாம் என்ற முடிவோடு உட்கார்ந்தேன். என் மகன் தன் வேலைகளை தொடர்ந்தான். மேஜை மேலிருந்த என் ஐஃபோனை தொட, “டேய் கொஞ்ச நேரம் சும்மாயிருடா. அதெல்லாம் தொடக்கூடாது. ஒரு இடத்துல உட்கார்ந்து ஸஹஸ்ரநாமத்தை கேளு” என்று அதட்டிவிட்டு “மஹா புத்திர் மஹாவீர்யோ”வில் எம்.எஸ்ஸை பிடித்து மறுபடியும் கேட்கத் தொடங்கினேன் அங்கிருந்து.

அந்த ஆர்.எஃப்.பி முடிக்கணுமே. ரொம்ப பெரிசா கொடுத்திருக்காங்க..ச்சே….எந்த வேலைன்னு செய்யறது. அடடே பாஸ்கருக்கு ஸ்கோப் அனுப்பறதா சொன்னோமே. ஃபோன் பண்ணிடுவாரே இப்போ. சரி அத முடிச்சுட்டு குழந்தைய வெளியே கூட்டிப் போகலாம். வீட்டுக்கு வந்தும் வேலை வேலைன்னு ச்சே என்ன பொழப்பு இது. சரி..மைண்ட மாத்தலாம். அடுத்த பதிவு என்ன போடலாம். அந்த ட்ரான்ஸ்லேஷன் பண்ணோமே அத போடலாமா? வாலியை பத்தி ஒண்ணு எழுதினோமே அத போடலாம். புதுசா ஏதாவது எழுதலாம். என்ன எழுதறது? என்று எனக்குள்ளே என்னோடு நானே பேசிக்கொண்டிருந்த நேரத்தில் எதற்குமே காத்திராமல் எம்.எஸ் ரொம்ப தள்ளிப்போய் “வருணோ வாருணோ வ்ருக்‌ஷ: புஷ்கராக்‌ஷோ மஹாமநா:”வில் இருந்தார்.

எந்த நேரத்தில் யோசித்தேனோ தெரியவில்லை பாஸ்..பாஸ்..என்று பாஸ்கர் ஃபோனில் அழைத்தார். “விஜய் உங்க காலுக்குத்தான் வெயிட் பண்றேன்” என்றார். அவரிடம் நான் ஸஹஸ்ரநாமம் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை என்றெல்லாம் சொல்லமுடியுமா அல்லது சொன்னால் புரிந்துகொள்வாரா. “இதோ அனுபிடறேன். உங்க வேலையத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று ஸஹஸ்ரநாமத்தின் இடையே அப்பட்டமான பொய் உரைத்தேன். திரும்பவும் விட்ட இடத்திலிருந்து தொடர முடியாமல் இடையூறுகள் காரணமாய் “சதுர் மூர்ததிஹ்ச் சதுர்பாஹூச் சதுர்வ்யூஹச் சதுர்கதி:”யை பிடித்தேன்.

கிளம்பட்டுமா என்று கேட்ட என் மனைவி அலங்காரங்களை எல்லாம் வெகு(?) சீக்கிரமாக முடித்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து “மறந்துடாதீங்க என்ன. ஒரு சாவி நான் எடுத்துண்டு போறேன். 8 மணிக்குள்ள வந்துடுவீங்க இல்ல? என்று நிஜமாகவே கிளம்பினாள். “சரி” என்று தலையாட்டினேன்.

என் மகன் அவளோடு போவதாக அடம் செய்தான். “இரும்மா. அப்பா உன்ன வண்டியில கூட்டிண்டு போறேன். நாம டாடா போகலாம் சரியா. அம்மாவுக்கு டாடா சொல்லு” என்றதும் என் நல்ல நேரம் எப்போதுமே அடம்பிடிக்கும் என் மகன் சரியென்று அவளுக்கு “பை” சொன்னான். கதவை பூட்டிவிட்டு மறுபடியும் எம்.எஸ்ஸை தொடர இப்போது அவர் “ஸ்ரீபார்வத்யுவாச:- கேநோபாயேந லகுநா”வில் இருந்தார். மிச்சத்தையாவது கேட்போம் என்று அவரை தொடர்ந்தேன். “ஸ்ரீஈச்வர உவாச”வில் என் மகன் பாட்டி ஆத்துக்கு கூட்டி செல்லும்படி என்னை நச்சரித்தான்.

நானும் “நீ தினமும் பெருமாள் கிட்ட நின்னுண்டு சொல்லுவியே அது வரும் பாரு இப்போ” எனும் போது “ஸ்ரீராம ராம ராமேதி” என்று எம்.எஸ் ச்பஷ்டமாக பாடிக்கொண்டிருந்தார்.ஆமாம் அவர் பேசினாலே பாடுவது போல இருக்கும். ஸஹஸ்ரநாமத்தை ஒரு தனி ராகத்தில் சொல்லும்போது நிச்சயம் நம் மனது லயித்துதானே போகும். தான் சொல்லும் ஸ்லோகம் என்றது விரும்பி கேட்ட என் மகன் அது முடிந்தவுடன் மறுபடியும் தொடர்ந்தான். அவனை ஒரு வழியாக சமாதானப்படுத்தி மறுபடியும் ஸஹஸ்ரநாமத்தின் பக்கம் காதைத் திருப்ப எம்.எஸ் “காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா”வில் மொத்தமும் முடிக்க இருந்தார். இன்னும் மூன்றே வரி, ஸஹஸ்ரநாமம் மொத்தமும் முடிந்துவிடும் என்று நினைத்து முடிப்பதற்குள் கடைசி வரிக்கு வந்துவிட்டார் எம்.எஸ். இப்படியாக ஒருவழியாக ஸஹஸ்ரநாமம் முழுவதையும் கேட்டு முடித்தேன்.

இது மாதிரி தினமும் ஸஹஸ்ரநாமம் சாயங்கலத்துல கேட்டா கோடி புண்ணியம் கேரண்டி. மகாநதியில கூட பூர்ணம் கமல் கிட்ட ஜெயிலுக்குள்ள பெருமாள் ஸ்லோகம் பத்தி சொல்லுவாரே ஞாபகம் இருக்கா?

யார் யார் எல்லாம் ஓட்டுப் போடணும்னு திரும்ப திரும்ப சொல்ல போறதில்லை. உங்களுக்கு தெரியும். வாழ்க்கையில ஏற்கனவே பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இதில் இந்தப் பதிவுக்கு ஓட்டு போடலாமா வேண்டாமா என்பதையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டு கஷ்டப்படவேண்டாமே. ஓட்டு போடலாம்னே ஒரே முடிவா இருந்திடலாமே. என்ன சொல்றீங்க?

15 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.