Home » Featured, பொது

தமிழ்மணம் அவார்ட்ஸ் 2009

18 December 2009 6 Comments
பதிவுலகத்துக்கு வந்து இன்னும் ஒரு மாதத்துல எனக்கு ஒரு வருஷம் ஆகப்போகுது. என்னதான் ஆங்கிலத்துல 2006ஆம் வருஷத்திலிருந்து எழுதிட்டு இருந்தாலும், என்னமோ நம்ம தாய்மொழி தமிழ் மேலே உள்ள பற்று, என்னை திடீர்னு ஒரு யு டர்ன் போடவெச்சு, அதன் மூலமா பல பதிவுகளை போட வெச்சிருச்சு. நானும் ஒரு வேகத்துல கிட்டத்தட்ட ஐம்பது பதிவுகளை போட்டிருந்தாலும், எனக்கே ஒரு சுயசந்தோஷத்தை கொடுத்த பதிவுகள்னு பார்த்தால் ரொம்ப குறைவான எண்ணிக்கைதான் வரும்.
ஆரம்பத்தில் சில பல ரம்ப நகைச்சுவைகளிலேயே என் கவனம் இருந்ததில், அதன் வழியிலேயே என் மனமும் சிந்தித்தது. ஐபிஎல் ஜுரம் என்னையும் தாக்க, பரம கிரிக்கெட் விசிறியான நான் அடுத்து கைவைத்தது அந்த வகையில். ஐபிஎல் எல்லோருக்கும் டாட்டா காட்ட, திரும்ப நம் சொந்த சிந்தனைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன்.
என்னுடைய மும்பை பயணக் கட்டுரை கைகொடுத்தது. ஆனாலும் அது கட்டுரையாக இல்லாமல் அனுபவமாக மட்டுமே எழுத்து வடிவில் வந்தது. ஓரிரு வாசகர்கள் அதை சுட்டிக்காட்டியது இன்னும் வித்தியாசமாக எழுத தூண்டியது. என்னுடைய இந்த முயற்சிகளுக்கு ஒரே காரணம் என்றாவது ஒருநாள் நாமும் நம்மால் முடிந்த சில நல்ல படைப்புகளை, வாசகர்களின் மனது  தொடும் பதிவுகளை இடவேண்டுமென்பதே.
தமிழுக்கு வித்திட்டது என் அம்மாவும் தாய் மண்ணும் என்றாலும் அதன்மீதான அதீத ஆசையை ரத்தத்தில் கலந்தவர் அமரர் சுஜாதா என்றால் அது மிகையில்லை. மூலக்காரணத்தை மறப்பவர் முழுமையடைவதில்லை. அந்த மூலக்காரணம் என் மூத்த அண்ணன். பல சமயங்களில் சில்லறைத்(இப்போது நினைத்தால்) தனமான படைப்புகளை படைத்துக் காண்பித்தாலும் “நன்றாக எழுதுகிறாய்” என்று உற்சாகம் கொடுத்தான். இன்னும் சில நண்பர்கள் நான் விடுத்த அழைப்பின் பேரில் என் வலைதளத்திற்கு தற்தம் வேலைகளை கூட ஒதுக்கிவைத்துவிட்டு படித்து எனக்கு மறுமொழியிட்டனர். சிறிய அளவில் தொடங்கி நான் அழைக்காமலே புதிய நண்பர்கள் தாமாகவே வந்து என் பதிவுகளை படித்து அதற்கு கருத்துரையும் இட்டார்கள் என்னுள் உற்சாகத்தை வித்திட்டார்கள். எல்லோரையும் குறிப்பிட முடியாத காரணத்தினால் வலைதளம் மூலம் முதல் நண்பர் ச்சின்னப்பையன். தற்போது, மலர், அன்பு மணிகண்டன், கண்ணா (இன்றிலிருந்து) என்று வளர்ந்துவிட்டிருக்கிறது.
என்னதான் படைப்புகள் ஒரு தனிமனிதனின் தேவையின் அடிப்படையில் உருவாகும் ஒன்று என்றாலும், அது மற்றவர்களை போய்ச்சேரும் போதுதான் அது முழுமை பெறுகிறதாக நான் கருதுகிறேன். அப்படி நானே ரசித்த இரண்டு பதிவுகளை தமிழ்மணம் அவார்டுக்கு அனுப்பியிருக்கிறேன்.
அந்தப் பதிவுகள்:

பதிவுலகத்துக்கு வந்து இன்னும் ஒரு மாதத்துல எனக்கு ஒரு வருஷம் ஆகப்போகுது. என்னதான் ஆங்கிலத்துல 2006ஆம் வருஷத்திலிருந்து எழுதிட்டு இருந்தாலும், என்னமோ நம்ம தாய்மொழி தமிழ் மேலே உள்ள பற்று, என்னை திடீர்னு ஒரு யு டர்ன் போடவெச்சு, அதன் மூலமா பல பதிவுகளை போட வெச்சிருச்சு. நானும் ஒரு வேகத்துல கிட்டத்தட்ட ஐம்பது பதிவுகளை போட்டிருந்தாலும், எனக்கே ஒரு சுயசந்தோஷத்தை கொடுத்த பதிவுகள்னு பார்த்தால் ரொம்ப குறைவான எண்ணிக்கைதான் வரும்.

ஆரம்பத்தில் சில பல ரம்ப நகைச்சுவைகளிலேயே என் கவனம் இருந்ததில், அதன் வழியிலேயே என் மனமும் சிந்தித்தது. ஐபிஎல் ஜுரம் என்னையும் தாக்க, பரம கிரிக்கெட் விசிறியான நான் அடுத்து கைவைத்தது அந்த வகையில். ஐபிஎல் எல்லோருக்கும் டாட்டா காட்ட, திரும்ப நம் சொந்த சிந்தனைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன்.

என்னுடைய மும்பை பயணக் கட்டுரை கைகொடுத்தது. ஆனாலும் அது கட்டுரையாக இல்லாமல் அனுபவமாக மட்டுமே எழுத்து வடிவில் வந்தது. ஓரிரு வாசகர்கள் அதை சுட்டிக்காட்டியது இன்னும் வித்தியாசமாக எழுத தூண்டியது. என்னுடைய இந்த முயற்சிகளுக்கு ஒரே காரணம் என்றாவது ஒருநாள் நாமும் நம்மால் முடிந்த சில நல்ல படைப்புகளை, வாசகர்களின் மனது  தொடும் பதிவுகளை இடவேண்டுமென்பதே.

தமிழுக்கு வித்திட்டது என் அம்மாவும் தாய் மண்ணும் என்றாலும் அதன்மீதான அதீத ஆசையை ரத்தத்தில் கலந்தவர் அமரர் சுஜாதா என்றால் அது மிகையில்லை. மூலக்காரணத்தை மறப்பவர் முழுமையடைவதில்லை. அந்த மூலக்காரணம் என் மூத்த அண்ணன்.

பல சமயங்களில் சில்லறைத்(இப்போது நினைத்தால்) தனமான படைப்புகளை படைத்துக் காண்பித்தாலும் “நன்றாக எழுதுகிறாய்” என்று உற்சாகம் கொடுத்தான். இன்னும் சில நண்பர்கள் நான் விடுத்த அழைப்பின் பேரில் என் வலைதளத்திற்கு தற்தம் வேலைகளை கூட ஒதுக்கிவைத்துவிட்டு படித்து எனக்கு மறுமொழியிட்டனர். சிறிய அளவில் தொடங்கி நான் அழைக்காமலே புதிய நண்பர்கள் தாமாகவே வந்து என் பதிவுகளை படித்து அதற்கு கருத்துரையும் இட்டார்கள் என்னுள் உற்சாகத்தை வித்திட்டார்கள். எல்லோரையும் குறிப்பிட முடியாத காரணத்தினால் வலைதளம் மூலம் முதல் நண்பர் ச்சின்னப்பையன். தற்போது, மலர், அன்பு மணிகண்டன், கண்ணா (இன்றிலிருந்து) என்று வளர்ந்துவிட்டிருக்கிறது.

என்னதான் படைப்புகள் ஒரு தனிமனிதனின் தேவையின் அடிப்படையில் உருவாகும் ஒன்று என்றாலும், அது மற்றவர்களை போய்ச்சேரும் போதுதான் அது முழுமை பெறுகிறதாக நான் கருதுகிறேன். அப்படி நானே ரசித்த இரண்டு பதிவுகளை தமிழ்மணம் அவார்டுக்கு அனுப்பியிருக்கிறேன்.

அந்தப் பதிவுகள்:

இந்தப் பதிவுகளை இதற்கு முன் நீங்கள் படித்திருக்கவில்லையென்றால், படித்துப் பார்த்து நன்றாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களை சொடுக்கி ஒரு ஓட்டு போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பிடிக்கவில்லையென்றால், நீங்கள் எதிர்ப்பார்த்தது என்னவென்றும், பிடிக்காததற்கான காரணத்தையும் மறுமொழியில் சுட்டிகாட்டினால் என் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள தொடுகையை நீங்கள் சொடுக்கியதும், ஒரு பக்கம் திறந்து எல்லாப் படைப்புகளையும் காட்டும். அதில் என் பதிவை “Control+F”  பண்ணி, vijayasarathy என்று டைப் செய்தால் என்னுடைய பதிவை பார்க்கலாம். அங்கே வலப்பக்க கடைசியில் இருக்கும் “VOTE” ஐ கிளிக் செய்துவிட்டு, பக்கத்தின் கடைசியில் கீழே “அனுப்பு பொத்தான்” ஐ சொடுக்கவும்.

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.