Home » Featured, அரசியல், சிந்தனைகள், நாட்டு நடப்பு

ஸ்ப்லிட் இந்தியா மூவ்மெண்ட்

13 December 2009 19 Comments
பிரித்தாளும் வித்தையை முதலில் நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ். பிறகு அதே டெக்னிக்கை வைத்து இந்தியாவுக்குள்ளேயே படுத்திக்கொண்டிருப்பவர்கள் நமது மாண்புமிகு அரசியல்வாதிகள். தம்மால் முடிந்தவரை முயற்சி செய்தாகிவிட்டது. அப்படியொன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை எனற காரணத்தாலும், அவரவர் இருட்டு வேலை குருடர்களுக்கும் கூட வெட்ட வெளிச்சமாகிவிட்ட காரணத்தாலும், ”குட்டிக் குட்டி” பயங்கரவாதங்களில் ஆரம்பித்து ”அதெல்லாம் எங்களிடம் நடக்காது” என்று நாமிருந்ததினால் வேறு பல யுத்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர் போலும்.
இதற்குமேல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நாட்டைக்காக்கும்(?) ஒரே வெறியோடு ”குட்டி” கொஞ்சம் பெரிதாக, வெடிகுண்டு சம்பவங்களை நமக்கு காண்பித்து பயத்தை அதிகரித்தனர். இப்போது அதுவும் சர்வ சாதரணமாகிப் போக, இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்றெண்ணியபோது சீனா கைகொடுக்கிறது போலும். கொஞ்ச நாள் முன் எனக்கு அலுவலக நண்பர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். அதில் சீனாவை சார்ந்த ஒருவர்(பீஜிங்கை சேர்ந்த சான் ல்யூ) பகிரங்கமாக இந்தியாவை துண்டு துண்டாக பிரித்து, கிட்டத்தட்ட 20-30 குட்டி மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்றும், அந்த மாநிலங்களுக்கு தனித்தனி நாட்டுரிமை தரப்படவேண்டுமென்றும் கூறுகிறார்.
குறிப்பாக அந்த உரையின் ஆசிரியர் சீனா அசாம், தமிழ்நாடு மற்றும் காஷ்மீருடன் சேர்ந்து அந்தந்த மாநிலத்துக்கு தனி குடியுரிமையை ஸ்தாபிக்க உதவ வேண்டும் என்கிறார். மேலும் பீஜிங் அரசு அரசியல் ரீதியாக நட்பு நாடான வங்காள்தேசத்துக்கு உதவி, இந்தியாவில் இருக்கும் பெங்காலிகளை வங்காளதேசத்தின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சுருங்கச் சொன்னால் இந்தியாவை ஐரோப்பாவை போல மாற்றவேண்டும் என்கிறார்.
இந்த உரையை சீனா அரசும் கூட தடை செய்யாததையும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம் அரசியல் தலைவர்கள் இதை கேட்ட பின்பும் இந்தியா-சீனா உறவு நல்லுறவாகவே இருக்கிறது என்கிறது. மேலும் சீன ராணுவம் எல்லையில் செய்த அட்டூழியத்தையும் கூட அப்படியே அன்று இரவு தான் சாப்பிட்ட சாப்பாட்டில் மூடி மறைத்துவிட்டது காங்கிரஸ் அரசு. நாம் அந்த செய்தியை அதிகபட்சமாக ஒரு ரெண்டு வாரம் பேசியிருப்போமா? அரசியல் தலைவர்களுக்கென்ன, ஆளுங்கட்சியோ எதிர் கட்சியோ மூக்கு ஆப்ரேஷன் செய்துகொண்டு சீனாவில் சென்று செட்டில் ஆகிவிடுவார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் ஒருவேளை ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கிறார்களோ என்னவோ.
நம் (இமெயில்) ஃபார்வார்ட் யுகத்தில் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நடந்து கொண்டிருக்கும் தனி மாநில கலாட்டாக்களையும் அமைதிப் போராட்டங்களையும் (ஆந்திராவில் அமைதிப் போராட்டம் என்றால் ஆளுக்கொரு பஸ்ஸை கொளுத்துவது, கடைகளை உடைப்பதுதான் போலும்) பார்க்கையில் சீனா சைலண்டாக வேலையில் இறங்கியிருக்குமோ என்று தோன்றுகிறது. சத்தியமாக இதில் இந்திய மகானுபாவர்களின் கை இருக்கும் என்பது என் எண்ணம். மற்றவைகளை (அவர்கள் செய்யும் ஊழல்களையும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும்) மறக்கடிக்க நம் அரசியல்வாதிகள் உபயோகப்படுத்தும் இன்னொரு அஸ்திரமாக இருக்கலாம்.
இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் நம் மக்களின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் என் உள்மனது இந்த தனிமாநில முயற்சி தோல்வியையே தழுவும் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாடாக வளர்ந்துவிட்டதற்கு சாட்சியாக பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகரமாக சந்தித்ததை நாம் அனைவருமே அறிவோம். அப்படியிருக்க இது ஏன் நம்மை பல பிரச்சனைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப ”நம் நாட்டிலேயே நம்முடனே மக்களோடு மக்களாக இருக்கும் புல்லுருவிகளின் வேலையாக இருக்காது” என்று யோசிக்க வைக்கிறது.
நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்லவே. புதிது யுத்திதானே ஒழிய நோக்கம் அல்ல. எந்த செய்தித் தொலைக்காட்சியை திருப்பினாலும் சந்திரசேகர் ராவ் முகத்தில் ஆக்ஸிஜன் வைத்து காட்சியளிக்கிறார், உடைந்த பேருந்துகள், திரும்பி ஆந்திராவுக்கு போக முடியாமல், வருமானமும் இல்லாமல், செலவுக்கும் போதிய பணம் இல்லாமல் வாடும் ஓட்டுனர்கள் என்று எந்த யுக்தியானாலும் பாதிப்பை நமக்கே கொடுக்கிறது நம் இந்திய திருநாட்டின் அரசியல்.
தெலுங்கானாவில் ஆரம்பித்து இப்போது நம் ஐயா அவர்கள் தன்னிசையாக தமிழ்நாட்டை பிரிப்பதை வரவேற்கிறேன் என்று அறிக்கை விடுவதெல்லாம் பார்த்தால் அடுத்து தமிழகத்திலும்  ஜாதிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆந்திராவைப் போலவே நம் தமிழகத்திலும் அமைதிப்போராட்டங்கள் ஆரம்பித்துவிடும்.
அங்கே மேற்கே மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் கோரிக்கை இப்போதுவரை புரிலா, பங்கு்ரா மற்றும் மித்னாபூரின் மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுமே. அது நம் கம்யூனிஸத் தோழர்களின் உசுப்பலில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்றாலும், என்றைக்கு அவர்கள் அவைகளை தனி மாநிலங்களாக கேட்பார்கள் என்ற பீத்யில்தான் அம்மாநில அரசும் மத்திய அரசும் இருக்கும்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே ஆந்திராவில் இன்னொரு கூட்டம் வேறு ஒரு மாநிலத்துக்கு அடிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகளால் நாம் பலவற்றை மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். அவைகளில் என் ஞாபகத்திற்கு வரும் சில மறந்துபோனவைகள்:
1. சத்தியம் ராஜு சொத்துக் குவிப்பு
2. சமீபத்தில் மெயிலில் வந்த இறந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி சொத்துகுவிப்பு
3. ஆளுங்கட்சியின் நதிகள் இணைப்புத் திட்டம் இயலாமை
4. இலங்கை அகதிகளின் நிலைமையில் நம் அரசின் நிலைப்பாடு
5. பாபர் மசூதி வழக்கு அறிக்கை
6. உழவர்களுக்கு தலா ரெண்டு ஏக்கர் நிலம்
7. செல்வி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு
8. ஆருஷி கொலை வழக்கின் தற்போதைய நிலை
9. பெங்களூர், அஹமதாபாத், டெல்லி தொடர் குண்டு வெடிச்சம்பவங்கள்
10. தினகரன் ஆபீஸ் எரிப்பு
11. போபர்ஸ் ஊழல் விவகாரம்
12. சேதுக்கால்வாய் திட்டம்
13. 75 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கிப் பணம் (100 நாட்களில் மீட்போம் என்று சொல்லி 100 நாள் மேலே படத்தை ஓட்டிட்டாங்கய்யா….ஓட்டிட்டாங்கய்யா!!! அவ்வ்வ்வ்வ்வ்…)
14. இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் அட்டூழியங்கள்
இந்த தனி மாநில கோரிக்கைகளை பற்றியெல்லாம் படிக்கும் போது சீன மாணாக்கர் சொன்னதை சீனா ந்ம நாட்டுப் புல்லுருவிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வெற்றிகரமாக செய்துவருகிறதா என்று சந்தேகம் எழுகிறது. இல்லை இது நம் அரசியவாதிகளின் கூத்தே என்பதற்கு தகுந்த சான்று வெளிவந்தால் மனது கொஞ்சம் நிம்மதி அடையும். ஆங்கிலத்தின் ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல். அதற்காக சீனாவை தேவதை என்று சொல்வதாக நினைக்கவேண்டாம். பிசாசு யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா என்ன?
இந்த ஸ்ப்லிட் இண்டியா மூவ்மெண்ட்டிலிருந்து நம் நாட்டைக் காக்க இன்னொரு க்விட் இண்டியா மூவ்மெண்ட் தேவைப்ப்டுகிறது. ஆனால் யாரை க்விட் செய்யச் சொல்லவேண்டும்?
ஒருவேளை இந்த தனிமாநில கோரிக்கைகள் சாத்தியமாகிப் போனால், வடிவேலுவின் ஒரு நகைச்சுவைக் காட்சியில் வருவது போல ஆண்டிப்பட்டியிலிருந்து அரசம்பட்டிக்கு வர விசா எடுத்திருக்கவேண்டும். தனிமாநிலங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவுகளை நகைச்சுவைக் கோணத்தில் அடுத்த பதிவில் பார்க்க முயற்சிப்போம்.

பிரித்தாளும் வித்தையை முதலில் நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ். பிறகு அதே டெக்னிக்கை வைத்து இந்தியாவுக்குள்ளேயே படுத்திக்கொண்டிருப்பவர்கள் நமது மாண்புமிகு அரசியல்வாதிகள். தம்மால் முடிந்தவரை முயற்சி செய்தாகிவிட்டது. அப்படியொன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை எனற காரணத்தாலும், அவரவர் இருட்டு வேலை குருடர்களுக்கும் கூட வெட்ட வெளிச்சமாகிவிட்ட காரணத்தாலும், ”குட்டிக் குட்டி” பயங்கரவாதங்களில் ஆரம்பித்து ”அதெல்லாம் எங்களிடம் நடக்காது” என்று நாமிருந்ததினால் வேறு பல யுத்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர் போலும்.

இதற்குமேல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நாட்டைக்காக்கும்(?) ஒரே வெறியோடு ”குட்டி” கொஞ்சம் பெரிதாக, வெடிகுண்டு சம்பவங்களை நமக்கு காண்பித்து பயத்தை அதிகரித்தனர். இப்போது அதுவும் சர்வ சாதரணமாகிப் போக, இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்றெண்ணியபோது சீனா கைகொடுக்கிறது போலும். கொஞ்ச நாள் முன் எனக்கு அலுவலக நண்பர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். அதில் சீனாவை சார்ந்த ஒருவர்(பீஜிங்கை சேர்ந்த சான் ல்யூ) பகிரங்கமாக இந்தியாவை துண்டு துண்டாக பிரித்து, கிட்டத்தட்ட 20-30 குட்டி மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்றும், அந்த மாநிலங்களுக்கு தனித்தனி நாட்டுரிமை தரப்படவேண்டுமென்றும் கூறுகிறார்.

குறிப்பாக அந்த உரையின் ஆசிரியர் சீனா அசாம், தமிழ்நாடு மற்றும் காஷ்மீருடன் சேர்ந்து அந்தந்த மாநிலத்துக்கு தனி குடியுரிமையை ஸ்தாபிக்க உதவ வேண்டும் என்கிறார். மேலும் பீஜிங் அரசு அரசியல் ரீதியாக நட்பு நாடான வங்காள்தேசத்துக்கு உதவி, இந்தியாவில் இருக்கும் பெங்காலிகளை வங்காளதேசத்தின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

சுருங்கச் சொன்னால் இந்தியாவை ஐரோப்பாவை போல மாற்றவேண்டும் என்கிறார்.

இந்த உரையை சீனா அரசும் கூட தடை செய்யாததையும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம் அரசியல் தலைவர்கள் இதை கேட்ட பின்பும் இந்தியா-சீனா உறவு நல்லுறவாகவே இருக்கிறது என்கிறது. மேலும் சீன ராணுவம் எல்லையில் செய்த அட்டூழியத்தையும் கூட அப்படியே அன்று இரவு தான் சாப்பிட்ட சாப்பாட்டில் மூடி மறைத்துவிட்டது காங்கிரஸ் அரசு. நாம் அந்த செய்தியை அதிகபட்சமாக ஒரு ரெண்டு வாரம் பேசியிருப்போமா? அரசியல் தலைவர்களுக்கென்ன, ஆளுங்கட்சியோ எதிர் கட்சியோ மூக்கு ஆபரேஷன் செய்துகொண்டு சீனாவில் சென்று செட்டில் ஆகிவிடுவார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் ஒருவேளை ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கிறார்களோ என்னவோ.

நம் (இமெயில்) ஃபார்வார்ட் யுகத்தில் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நடந்து கொண்டிருக்கும் தனி மாநில கலாட்டாக்களையும் அமைதிப் போராட்டங்களையும் (ஆந்திராவில் அமைதிப் போராட்டம் என்றால் ஆளுக்கொரு பஸ்ஸை கொளுத்துவது, கடைகளை உடைப்பதுதான் போலும்) பார்க்கையில் சீனா சைலண்டாக வேலையில் இறங்கியிருக்குமோ என்று தோன்றுகிறது. சத்தியமாக இதில் இந்திய மகானுபாவர்களின் கை இருக்கும் என்பது என் எண்ணம். மற்றவைகளை (அவர்கள் செய்யும் ஊழல்களையும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும்) மறக்கடிக்க நம் அரசியல்வாதிகள் உபயோகப்படுத்தும் இன்னொரு அஸ்திரமாக இருக்கலாம்.

இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் நம் மக்களின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் என் உள்மனது இந்த தனிமாநில முயற்சி தோல்வியையே தழுவும் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாடாக வளர்ந்துவிட்டதற்கு சாட்சியாக பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகரமாக சந்தித்ததை நாம் அனைவருமே அறிவோம். அப்படியிருக்க இது ஏன் நம்மை பல பிரச்சனைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப ”நம் நாட்டிலேயே நம்முடனே மக்களோடு மக்களாக இருக்கும் புல்லுருவிகளின் வேலையாக இருக்காது” என்று யோசிக்க வைக்கிறது.

நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்லவே. புதிது யுத்திதானே ஒழிய நோக்கம் அல்ல. எந்த செய்தித் தொலைக்காட்சியை திருப்பினாலும் சந்திரசேகர் ராவ் முகத்தில் ஆக்ஸிஜன் வைத்து காட்சியளிக்கிறார், உடைந்த பேருந்துகள், திரும்பி ஆந்திராவுக்கு போக முடியாமல், வருமானமும் இல்லாமல், செலவுக்கும் போதிய பணம் இல்லாமல் வாடும் ஓட்டுனர்கள் என்று எந்த யுக்தியானாலும் பாதிப்பை நமக்கே கொடுக்கிறது நம் இந்திய திருநாட்டின் அரசியல்.

தெலுங்கானாவில் ஆரம்பித்து இப்போது நம் ஐயா அவர்கள் தன்னிசையாக தமிழ்நாட்டை பிரிப்பதை வரவேற்கிறேன் என்று அறிக்கை விடுவதெல்லாம் பார்த்தால் அடுத்து தமிழகத்திலும்  ஜாதிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆந்திராவைப் போலவே நம் தமிழகத்திலும் அமைதிப்போராட்டங்கள் ஆரம்பித்துவிடும்.

அங்கே மேற்கே மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் கோரிக்கை இப்போதுவரை புரிலா, பங்கு்ரா மற்றும் மித்னாபூரின் மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுமே. அது நம் கம்யூனிஸத் தோழர்களின் உசுப்பலில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்றாலும், என்றைக்கு அவர்கள் அவைகளை தனி மாநிலங்களாக கேட்பார்கள் என்ற பீத்யில்தான் அம்மாநில அரசும் மத்திய அரசும் இருக்கும்.

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே ஆந்திராவில் இன்னொரு கூட்டம் வேறு ஒரு மாநிலத்துக்கு அடிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகளால் நாம் பலவற்றை மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். அவைகளில் என் ஞாபகத்திற்கு வரும் சில மறந்துபோனவைகள்:

 • சத்தியம் ராஜு சொத்துக் குவிப்பு
 • சமீபத்தில் மெயிலில் வந்த இறந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி சொத்துகுவிப்பு
 • ஆளுங்கட்சியின் நதிகள் இணைப்புத் திட்டம் இயலாமை
 • இலங்கை அகதிகளின் நிலைமையில் நம் அரசின் நிலைப்பாடு
 • பாபர் மசூதி வழக்கு அறிக்கை
 • உழவர்களுக்கு தலா ரெண்டு ஏக்கர் நிலம்
 • செல்வி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு
 • ஆருஷி கொலை வழக்கின் தற்போதைய நிலை
 • பெங்களூர், அஹமதாபாத், டெல்லி தொடர் குண்டு வெடிச்சம்பவங்கள்
 • தினகரன் ஆபீஸ் எரிப்பு
 • சேதுக்கால்வாய் திட்டம்
 • 75 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கிப் பணம் (100 நாட்களில் மீட்போம் என்று சொல்லி 100 நாள் மேலே படத்தை ஓட்டிட்டாங்கய்யா….ஓட்டிட்டாங்கய்யா!!! அவ்வ்வ்வ்வ்வ்…)
 • இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் அட்டூழியங்கள்

இந்த தனி மாநில கோரிக்கைகளை பற்றியெல்லாம் படிக்கும் போது சீன மாணாக்கர் சொன்னதை சீனா ந்ம நாட்டுப் புல்லுருவிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வெற்றிகரமாக செய்துவருகிறதா என்று சந்தேகம் எழுகிறது. இல்லை இது நம் அரசியவாதிகளின் கூத்தே என்பதற்கு தகுந்த சான்று வெளிவந்தால் மனது கொஞ்சம் நிம்மதி அடையும். ஆங்கிலத்தின் ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல். அதற்காக சீனாவை தேவதை என்று சொல்வதாக நினைக்கவேண்டாம். பிசாசு யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா என்ன?

இந்த ஸ்ப்லிட் இண்டியா மூவ்மெண்ட்டிலிருந்து நம் நாட்டைக் காக்க இன்னொரு க்விட் இண்டியா மூவ்மெண்ட் தேவைப்ப்டுகிறது. ஆனால் யாரை க்விட் செய்யச் சொல்லவேண்டும்?

ஒருவேளை இந்த தனிமாநில கோரிக்கைகள் சாத்தியமாகிப் போனால், வடிவேலுவின் ஒரு நகைச்சுவைக் காட்சியில் வருவது போல ஆண்டிப்பட்டியிலிருந்து அரசம்பட்டிக்கு வர விசா எடுத்திருக்கவேண்டும். தனிமாநிலங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவுகளை நகைச்சுவைக் கோணத்தில் அடுத்த பதிவில் பார்க்க முயற்சிப்போம்.

வழக்கம் போல பிடிச்சிருக்கோ இல்லையோ உங்களின் நாட்டுப்பற்றை காண்பிக்க இன்னொரு அருமையான சந்தர்ப்பம்…அதாங்க…ஓட்டுப் போடறது…கூடவே மறுமொழிகளும்.

19 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.