Home » தொ(ல்)லைக்காட்சி, நகைச்சுவை

ரகஸியாவின் ரகசியங்களும் சர்ஃப் எக்ஸல் கறையும்

6 December 2009 23 Comments
என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டைய உடைச்சிக்காத குறையா பேப்பர், புத்தகம் அது இதுன்னு தேடி ஒண்ணுமே கிடைக்காத போது மத்தவங்கள நக்கலடிச்சு எதையாவது எழுதறதுதானே தமிழன் பண்பாடு. நான் பக்கா தமிழன். அந்தக் காத்து என்னைய விட்டுவெக்குமா? புறப்பட்டுட்டேன்…
சன் டிவியில் ஃபெஃப்ஸி நடத்திய பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி பாகம் 3 ஓடிக்கொண்டிருந்தது. ரகஸியா தன் அனைத்து ரகசியங்களையும் அந்த பலவிளக்கு வெளிச்சத்தில் ஊருக்கே காட்டிக்கொண்டிருந்தார். டிவியை பார்த்துக் கொண்டிருந்த என் 3 வயதும் நிரம்பாத மகன் ரொம்ப அக்கறையோடு, “அந்த மாமி ஏன் ட்ரெஸ் போட்டுகலப்பா…அவ அப்பா வாங்கித்தரலையா…மாமி ஹார்லிக்ஸ் சாப்பிட அடம்பிடிச்சாளா. அதனால வாங்கித் தரமாட்டேன்னு சொல்லிட்டாளா” என்று கொஞ்சம் மழலை குறையாமல் கேட்டான். என்ன பதில் சொல்வது அவனுக்கு.
26 அழகிகள்
அதே சன் டிவியில் டீலா(அட..பீலா இல்லீங்க) நோடீலா நிகழ்ச்சி வந்தது. அதில் இதுவரை கவனிக்காத இரண்டு விஷயங்களை இன்று கவனித்தேன் (ஆமா அந்த 26 பேர் வந்தவுடனே கண்ணு அங்கே போயிட்டா வேற எத கவனிக்க?). சராசரியா இவங்க ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசா வழங்குவாங்களாம், அத மாதிரி பல மடங்கு ரூபாய சிமசே மூலமா முழுங்குவாங்களாம்.
ஒன்று: நட்சத்திரங்கள் ஆட வந்தால் மட்டும்..”வெல்கம் ப்யூட்டிஃபுல் லேடீஸ்”னு சொல்ற ரிஷி, நம்மள்ள ஒருவர் ஆட வந்தால், அந்த 26 லேடீஸுக்கு வெறும் வெல்காம் தான். ஏன் எங்களுக்கு அவங்க ப்யூட்டிஃபுல் இல்லையா?
இரண்டு:ஒவ்வொரு முறையும் பெட்டியை திறக்க அந்த 26 ப்யூ.லேடீஸையும் ”ரெடியா..ரெடியா”ன்னு கேட்கறத பார்த்தா அவங்க என்னமோ அங்க அரிசி களைஞ்சுகிட்டு இருக்கிறா மாதிரியும், இதுக்காக பாத்திரத்தை ஓரங்கட்டி வெச்சுட்டு பெட்டியை திறக்கறாமாதிரியும் இருக்கு. நிக்கறதே அதுக்குத்தான். ஒண்ணு கேட்கணுங்க…சர்ஃப் கற நல்லதுன்னு சொல்லுதே..அந்த 26 அழகிகள் போட்டிருக்குற உடையளவை பார்த்தா கறை படியறா மாதிரி தெரியுதா உங்களுக்கு?
சமீபத்துல நான் ரசித்து பார்த்த சில விளம்பரங்கள்:
1. பிடிலைட்டின் ஒட்டு மீசை. அந்தப் பெண் இறந்து மறுபிறப்பிலும் ஒட்டிக் கொண்டிருப்பதாக காண்பித்திருப்பது டாப்.
2. அடுத்தது ஏர்டெல்லில் ஒரு சிறுவன் தன் சக பள்ளித் தோழர்கள் அனைவரிடத்திலும் தன் அப்பாவின் மொபைல் நம்பரை கொடுத்துவிட அவன் அம்மா யாருக்கு கொடுத்தே என்று கேட்க “எல்லாருக்கும்” என்று அழகான சிரிப்புடன் சொல்வது ஒரு வார்த்தையில் ஓராயிரம் கவிதை.
3. அடுத்து ஃபெவிக்விக் விளம்பரம். கார் கண்ணாடியை உடைத்தவரை பார்த்து…”காஸ்ட்லி காருடா, மரியாதையா எடு..பணத்தை எடு” என்று கேப் விட, உடைத்தவர் கண் முழி பிதுங்கி நிற்க கார் சொந்தக்காரர் அதே கோபத்துடன் “5 ரூபாய எடு” என்று முடிப்பது பாக்கியராஜை நினைவூட்டுகிறது.
4. புரூ காபி: புரூ காலின்னு பெண்டாட்டி வந்து கேட்க, நம்ம ஆளு நாலு கப்புக்கு கணக்கு காண்பிக்க, பெண்டாட்டி “அப்ப உன் பேப்பருக்கு கீழ இருக்குற அஞ்சாவது கப்பு” என்று கையும் காப்பியுமாக பிடிக்க, நம்ம ஆளு அந்த கப்பை நைஸாக அவள் பக்கம் தள்ளுவது ஹைக்கூ காதல். இதுக்காக நான் மயங்கி போய் நிதமும் குடிக்கிற கும்பகோண காபியை மாத்துவேன்னு நினைக்காதிங்க.
ஒண்ணு ரெண்டு போட்டு எழுதினா 10லயோ அல்லது 5லயோ முடிக்கணும்னு சாஸ்திரமும் இல்ல சம்பிரதாயமும் இல்லை. நமக்கு எவ்ளோ தோணுதோ அவ்ளோதான் கணக்கு. ஏன் படிக்கும் உங்களுக்கு இந்த  பொறுப்புணர்ச்சி கூட இல்லையா? ஐந்தாவதாக நீங்கள் ரசித்த விளம்பரத்தை கமெண்ட் காலம்ல போடுங்க. அப்படி போடறவங்களுக்கு அஞ்சாவது கப் புரூ. போடாதவங்களுக்கு வேட்டைக்காரன் ட்ரையலரோட யூ ட்யூப் லிங்க்.
இந்த வார “செம காமெடி மச்சி”
வேட்டைக்காரன் ட்ரையிலர் போடறாங்க. அது படத்தோட ட்ரையலரா அல்லது  நம்ம பொறுமைய சோதிக்க ட்ரையலான்னு சந்தேகம் வரும் அளவுக்கு க்ளிப்பிங்கல நம்ம இ.தளபதி ஒரு பாட்டுல பங்க் விட்டு தலைமுடிக்கு வீட்டுக்கு அடிச்சிட்டு மிச்சம் வெச்சிருந்த பெயிண்ட அடிச்சிக்குட்டு கேப் போட்டுகிட்டு வர்றார்….பாருங்க…காமெடில தான் ஒரு ”ஒன்மேன் ஆர்மி”ன்னு மிரட்டுறார்.
புலி உறுமுது…புலி உறுமுது
பொறி பறக்குது..பொறி பறக்குது
வரான்பாரு வேட்டைக்காரன்…
அப்பாவி அனந்து:சார் புலி உறுமட்டும், பொறியும் பறக்கட்டும்…ஆல் ஓகே…நீங்க எப்ப நடிப்பீங்க?
இந்த வார ஹைக்கூகள்:
வெய்யிலும் மழையும்
வானமும் நிறமும்
சங்கமிக்கும் தருணம்
வானவில்
இந்திய அன்னையின்
ஆயுத வெற்றி
இலங்கைப்போர்
இலங்கைப் போரில்
புதைந்தது சதைகளல்ல
விதைகள்

என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டைய உடைச்சிக்காத குறையா பேப்பர், புத்தகம் அது இதுன்னு தேடி ஒண்ணுமே கிடைக்காத போது மத்தவங்கள நக்கலடிச்சு எதையாவது எழுதறதுதானே தமிழன் பண்பாடு. நான் பக்கா தமிழன். அந்தக் காத்து என்னைய விட்டுவெக்குமா? புறப்பட்டுட்டேன்…

ஃபெஃப்ஸி கலை நிகழ்ச்சி

சன் டிவியில் ஃபெஃப்ஸி நடத்திய பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி பாகம் 3 ஓடிக்கொண்டிருந்தது. ரகஸியா தன் அனைத்து ரகசியங்களையும் அந்த வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் ஊருக்கே வெட்டி வெட்டி காட்டியதை சன் தொலைக்காட்சி கொஞ்சமும் வெட்டாமல் காட்டிக் கொண்டிருந்தது. டிவியை பார்த்துக் கொண்டிருந்த என் 3 வயதும் நிரம்பாத மகன் ரொம்ப அக்கறையோடு என் பதிலுக்கு காத்திராமல் தொடுத்த கேள்விக்கனைகள், “அந்த மாமி ஏன் ட்ரெஸ் போட்டுகலப்பா…அவ அப்பா வாங்கித்தரலையா…மாமி ஹார்லிக்ஸ் சாப்பிட அடம்பிடிச்சாளா. அதனால வாங்கித் தரமாட்டேன்னு சொல்லிட்டாளா” என்று கொஞ்சம் மழலை குறையாமல் கேட்டான். என்ன பதில் சொல்வது அவனுக்கு? மாமி…என்று ஆரம்பித்து ரகஸியாவை பார்க்க ஆரம்பித்து ஜோள்ளு விட, நல்லவேளை இதை என் மனைவி பார்க்கவில்லை. இல்லாவிட்டால் இன்னொரு மிகப்பெரிய கேள்விக்கு பதில் சொல்லவேண்டியதாயிருக்கும். அந்தக் கேள்வி என்னாவாயிருக்கும் என்று உங்களுக்கு தெரியாத என்ன? தெரியாதவர்கள் மனைவியை பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு, ரகஸியாவின் ஏதாவது ஒரு நடனத்தை பார்க்க.

26 அழகிகள்

அதே சன் டிவியில் டீலா(அட..பீலா இல்லீங்க) நோடீலா நிகழ்ச்சி வந்தது. அதில் இதுவரை கவனிக்காத இரண்டு விஷயங்களை இன்று கவனித்தேன் (ஆமா அந்த 26 பேர் வந்தவுடனே கண்ணு அங்கே போயிட்டா வேற எத கவனிக்க?). சராசரியா இவங்க ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசா வழங்குவாங்களாம், அத மாதிரி பல மடங்கு ரூபாய சிமசே மூலமா முழுங்குவாங்களாம்.

ஒன்று: நட்சத்திரங்கள் ஆட வந்தால் மட்டும்..”வெல்கம் ப்யூட்டிஃபுல் லேடீஸ்”னு சொல்ற ரிஷி, நம்மள்ள ஒருவர் ஆட வந்தால், அந்த 26 லேடீஸுக்கு வெறும் வெல்காம் தான். ஏன் எங்களுக்கு அவங்க ப்யூட்டிஃபுல் இல்லையா?

இரண்டு:ஒவ்வொரு முறையும் பெட்டியை திறக்க அந்த 26 ப்யூ.லேடீஸையும் ”ரெடியா..ரெடியா”ன்னு கேட்கறத பார்த்தா அவங்க என்னமோ அங்க அரிசி களைஞ்சுகிட்டு இருக்கிறா மாதிரியும், இதுக்காக பாத்திரத்தை ஓரங்கட்டி வெச்சுட்டு பெட்டியை திறக்கறாமாதிரியும் இருக்கு. நிக்கறதே அதுக்குத்தான். ஒண்ணு கேட்கணுங்க…சர்ஃப் கற நல்லதுன்னு சொல்லுதே..அந்த 26 அழகிகள் போட்டிருக்குற உடையளவை பார்த்தா கறை படியறா மாதிரி தெரியுதா உங்களுக்கு?

சமீபத்தில் நான் ரசித்து பார்த்த சில விளம்பரங்கள்:

  1. பிடிலைட்டின் ஒட்டு மீசை. அந்தப் பெண் இறந்து மறுபிறப்பிலும் ஒட்டிக் கொண்டிருப்பதாக காண்பித்திருப்பது டாப்.
  2. அடுத்தது ஏர்டெல்லில் ஒரு சிறுவன் தன் சக பள்ளித் தோழர்கள் அனைவரிடத்திலும் தன் அப்பாவின் மொபைல் நம்பரை கொடுத்துவிட அவன் அம்மா யாருக்கு கொடுத்தே என்று கேட்க “எல்லாருக்கும்” என்று அழகான சிரிப்புடன் சொல்வது ஒரு வார்த்தையில் ஓராயிரம் கவிதை.
  3. அடுத்து ஃபெவிக்விக் விளம்பரம். கார் கண்ணாடியை உடைத்தவரை பார்த்து…”காஸ்ட்லி காருடா, மரியாதையா எடு..பணத்தை எடு” என்று கேப் விட, உடைத்தவர் கண் முழி பிதுங்கி நிற்க கார் சொந்தக்காரர் அதே கோபத்துடன் “5 ரூபாய எடு” என்று முடிப்பது பாக்கியராஜை நினைவூட்டுகிறது.
  4. புரூ காபி: புரூ காலின்னு பெண்டாட்டி வந்து கேட்க, நம்ம ஆளு நாலு கப்புக்கு கணக்கு காண்பிக்க, பெண்டாட்டி “அப்ப உன் பேப்பருக்கு கீழ இருக்குற அஞ்சாவது கப்பு” என்று கையும் காப்பியுமாக பிடிக்க, நம்ம ஆளு அந்த கப்பை நைஸாக அவள் பக்கம் தள்ளுவது ஹைக்கூ காதல். இதுக்காக நான் மயங்கி போய் நிதமும் குடிக்கிற கும்பகோண காபியை மாத்துவேன்னு நினைக்காதிங்க.
  5. ஒண்ணு ரெண்டு போட்டு எழுதினா 10லயோ அல்லது 5லயோ முடிக்கணும்னு சாஸ்திரமும் இல்ல சம்பிரதாயமும் இல்லை. நமக்கு எவ்ளோ தோணுதோ அவ்ளோதான் கணக்கு. ஏன் படிக்கும் உங்களுக்கு இந்த  பொறுப்புணர்ச்சி கூட இல்லையா? ஐந்தாவதாக நீங்கள் ரசித்த விளம்பரத்தை கமெண்ட் காலம்ல போடுங்க. அப்படி போடறவங்களுக்கு அஞ்சாவது கப் புரூ. போடாதவங்களுக்கு வேட்டைக்காரன் ட்ரையலரோட யூ ட்யூப் லிங்க்.

இந்த வார “செம காமெடி மச்சி”

வேட்டைக்காரன் ட்ரையிலர் போடறாங்க. அது படத்தோட ட்ரையலரா அல்லது  நம்ம பொறுமைய சோதிக்க ட்ரையலான்னு சந்தேகம் வரும் அளவுக்கு க்ளிப்பிங்கல நம்ம இ.தளபதி ஒரு பாட்டுல பங்க் விட்டு தலைமுடிக்கு வீட்டுக்கு அடிச்சிட்டு மிச்சம் வெச்சிருந்த பெயிண்ட அடிச்சிக்குட்டு கேப் போட்டுகிட்டு வர்றார்….பாருங்க…காமெடில தான் ஒரு ”ஒன்மேன் ஆர்மி”ன்னு மிரட்டுறார்.

புலி உறுமுது…புலி உறுமுது
பொறி பறக்குது..பொறி பறக்குது
வரான்பாரு வேட்டைக்காரன்…

அப்பாவி அனந்து:சார் புலி உறுமட்டும், பொறியும் பறக்கட்டும்…ஆல் ஓகே…நீங்க எப்ப நடிப்பீங்க?

இந்த வார ஹைக்கூகள்:

வெய்யிலும் மழையும்
வானமும் நிறமும்
சங்கமிக்கும் தருணம்
வானவில்

இந்திய அன்னையின்
ஆயுத வெற்றி
இலங்கைப்போர்

இலங்கைப் போரில்
புதைந்தது சதைகளல்ல
விதைகள்

படிச்சிட்டு புடிச்சிருந்தா ஒரு ஓட்டையும் போட்டுதான் பாருங்களேன். ஓட்டுப் போட்டா உங்களுக்கு என்ன கிடைக்கும்னு தெரியாது, நிச்சயமா என்னோட பதிவு டமிலிஷ்ல பாப்புலர் ஆகும். நம்ம நண்பர் ஒருத்தரோட படைப்பு பிரபலமடைவது நமக்கெல்லாம் பெருமைதானே? என்ன சொல்றீங்க?

23 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.