Home » Headline, தொ(ல்)லைக்காட்சி, தொடர், நகைச்சுவை

அரட்டை அரங்கம் – பாகம் 1

24 December 2009 6 Comments
இன்னும் யாரையுமே காணோமே என்று வீட்டெதிரில் இருக்கும் சுவற்றில் நெடுநாள் முன் ஒட்டியிருந்த டிஆரின் வீராசாமி போஸ்டரையே பார்த்து மனமுடைந்து போயிருந்தான். அவனை ஆச்சரியபட வைத்தது இந்த மழையிலும் போஸ்டரில் டிஆர் கொஞ்சமும் மக்காமல் போயிருந்ததுதான். மாடு ஏன் சாப்பிடவில்லை, மற்ற படங்களின் போஸ்டரை ஏன் இன்னும் ஒட்டவில்லை போன்ற ஆராய்ச்சியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் முன் நல்ல வேளையாக அவனை காப்பாற்ற ஜக்கி வந்து சேர்ந்தான்.
ஜக்கி: என்னடா இன்னும் ச்சக்கி வரலையா?
பக்கி: இல்லடா, ஃபோன் கூட பண்ணலை. பாரு குடும்பஸ்தன் நீயே வந்துட்ட…
ஜக்கி: ஏன்? குடும்பஸ்தன்னா வரக்கூடாதா? ஏதாவது அவசர வேலையா இருப்பான், வந்துருவான்
பக்கி: ஓஹ்..வீட்ல தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க போலிருக்கு. ச்சக்கிக்கு ஒரே அவசர வேலை ”அது” மட்டும்தான். சரி சொல்லு உனக்கு இன்னிக்கு டே எப்படி போச்சு?
ஜக்கி: அதை ஏன் கேக்கற? கார்டு வேணம்னா வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே. அதவிட்டுட்டு புடிச்சு தாளிச்சிட்டான் ஒருத்தன். கிட்டத்தட்ட அவன அடிக்க போறளவுக்கு
கோவம் வந்துச்சு. திரும்ப கடிச்சுடுவானோன்ற பயத்துல வந்த கோவத்த கட்டுப்படுத்திக் கொண்டு கிளம்பிட்டேன்.
பக்கி: உனக்கென்னடா இதெல்லாம் புதுசா. விடு, அவனுக்கு வீட்ல என்ன பிரச்சனையோ.
ஜக்கி: அதுசரி. சரி உனக்கு எப்படி போச்சு?
பக்கி: பெரிசா ஒண்ணுமில்லைடா. வழக்கம் போலதான். இரண்டு காபி, ஒரு ப்ரேக் ஃபாஸ்ட், லஞ்ச், ரெண்டு தம், நாலு ஃபார்வார்டு, நடுவுல ரெண்டு க்ளையண்ட் கால்..முடிஞ்சுது…
ஜக்கி: வாழ்வுடா உங்கள மாதிரி ஆளுங்களுக்கு. ஏண்டா வேலையே இருக்காதா? எனக்கும் கூட ஒரு வேலை பார்த்துகுடு மச்சி…
பக்கி: டேய், என்ன நக்கலா? இதுமாதிரி தினமும் இருக்காது. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி…
ஜக்கி: ஓஹ்..நான் கூட தப்பா நினைச்சு லைட்டா கலாய்ச்சுட்டேன்…
பக்கி: நீ வேற…நான் சொன்ன அந்த காபி, கால், தம் இத மட்டும் கூட்டிக் குறைச்சுக்கோ. அவ்ளோதான்…நான் சொன்னத சீரியஸா எடுத்துக்கிட்டியா?
ஜக்கி: நீ சொல்றதையெல்லாம் கணக்கில வெச்சு பேசறேன் பாரு…என்ன சொல்லணும்
ச்சக்கி: ஹாய் மச்சான்ஸ்……
பக்கி: வாடா… மாமு, என்னவோ நமீதா மாதிரி இண்ட்ரோ கொடுக்கறா..என்னடா லேட்
ச்சக்கி: வீட்ல கொஞ்சம் வேலைடா…திடீர்னு ஹோட்டல்லேர்ந்து டிபன் வாங்கிவரச் சொல்லிட்டாங்க…என்னவோ புது சீரியல் “தென்றல்”னு ஆரம்பிக்குதாம், அதற்கு தயாராகறாங்களாம்..அதுதான் இன்னிக்கு ஹோட்டல் சாப்பாடு….
ஜக்கி: எல்லார் வீட்லையும் இந்த டிவி சீரியல் படுத்தும்பாடு தாங்கலைடா
பக்கி: எனக்கு ஒண்ணு புரியலடா, எங்கம்மா அதுக்கு காட்டற பொறுமையில் கால் வி கூட எங்கப்பா கிட்ட காட்டுறது கிடையாது. சில நாள் எங்கப்பா ஆபீஸ்லேர்ந்து வந்து காபி கேட்டு காத்திருப்பார். எங்கம்மா சீரியல விட்டு நகர மாட்டாங்க. பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, கோவம் ஜாஸ்தியாகி ஒரு அளவுக்கு மேலே…
ச்சக்கி: டேய், அவ்ளோ கோவம் வருமாடா உங்கப்பாவுக்கு..கத்தி பார்த்திருக்கேன்…அடிப்பாரா..
பக்கி: நீ வேறே மச்சான்..ஒரு அளவுக்கு மேலே எங்கப்பாவே எழுந்து போய் காபி போட்டு குடிச்சுட்டு வந்துடுவார்…
ஜக்கி: (மைண்ட் லாங்குவேஜில்) இங்கயும் இதே கதைதானா…நம்ம வீடு எவ்வளவோ பரவாயில்லை..அம்மா அட்லீஸ்ட் ப்ரேக்கில நம்மையும் அப்பாஅவையும் கவனிப்பாங்க..
ஜக்கி: உங்க வீட்ல எப்படிடா ச்சக்கி?
ச்சக்கி: எங்க வீட்ல இதெல்லாம் சகஜம்டா. எங்கம்மா டைம் டேபிள் போட்டு டிவி பக்கதுலையே ஒட்டி வெச்சிருக்காங்க, எந்த டைம்ல என்ன சீரியல்னு..
பக்கி: டூ மச்…சரியா போச்சு போ..
ச்சக்கி: சீரியல பத்தி பேசறப்போ, கோலங்கள் ஞாபகம் வருது…ரொம்ப சடன்னா முடிச்சுட்டாங்களாமே, நீ பார்த்தியா பக்கி, இல்ல உங்கம்மா ஏதாவது புலம்பினாங்களா?
ஜக்கி: நான் கூட கேள்விப்பட்டேண்டா…இருந்தாலும் மாவ குழைய குழைய அரைச்சி அரைச்சி, கிரைண்டர்ல மாவே இல்லாம போயும், மக்கா திருச்செல்வன் வெறும் கிரைண்டரையே 6 வருஷமா ஓட்டியிருக்காண்டா. ஒரு வேளை அவன் அந்த “வீடு” படத்துல வர தாத்தாவோட ஏதோ ஒரு வழி பேரனா இருப்பானோன்னு சந்தேகம் வருது. அவர் கூட படத்துல கொஞ்சம் வேகமா சாலைய கடந்துடுவாரு..
பக்கி: ஆமாம், நானும் கூட கேள்விப்பட்டேன். ஆறு வருஷமா ஆட்டம் காண்பிச்ச ஆதி, ஒரே வாரத்துல ஆதிஅந்தமெல்லாம் அடங்கி போய் கோமாவுல படுத்துட்டான். ஸோ, இனி அவன் நினைச்சாலும் அபிக்கு அபச்சாரம் நினைக்க முடியாது. அபியை அழிக்கறதுதான் தன்னோட ஒரே வேலையா மெனக்கெட்டு இருந்த மேனகா சடனா மேக மார்க்கமா பறந்துட்டாங்க…அம்மா கூட சொன்னாங்க சொத்தை முழுக்க இலவசமா அபிக்கு கொடுத்துட்டு போயிட்டாளாம்.
தன் பங்குக்கு தான் வீட்ல கேட்டு வெச்சிருந்த (கேட்கலைன்னா அப்பளாத்து கட்டை பேசறத கேட்கணுமே) அப்டேட்டையும் ஜக்கி சொன்னான்.
ஜக்கி: கடைசியில கடல் கிட்ட தொல்ஸும், அபியும் செந்தமிழ்ல பேசிட்டு, அபி ஆறு வருஷமா கழட்டாம வெச்சிருந்த ஹேண்ட் பேக்கை தொல்ஸ் வாங்கியதும் கதை முடிஞ்சுபோச்சாம், என் மனைவி ரொம்ப கவலைப்பட்டா
பக்கி: என்னன்னு? பேக்கை அவங்களுக்கு குலுக்கல் பரிசா கொடுக்கலைன்னா?
ஜக்கி: ச்சீய்ய்..இல்லைடா..ஆறே வருஷத்துல இப்படி சட்டுனு முடிச்சிட்டான்னு…
ச்சக்கி: டேய்..அவன் இன்னும் அடங்கவும் இல்லை முடிக்கவும் இல்லை…திரும்ப வர்றான்…மாதவின்னு ஒரு சீரியல் வருதாம்…அதே புடவை கட்டிய ஹீரோயின்…அதே பழைய வீடு…அப்பா, அம்மா, தங்கை…அங்க விட்டத இங்க பிடிச்சிருவான் பாரு…
பக்கி இதை கேட்டுவிட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு…அவனோட நிஜமான பேரே தொல்லைக்காப்பியன்னு வெச்சிருக்கலாம்டா என்றான்.
ஜக்கி: சரி மச்சான்ஸ்..நான் கிளம்பறேன்..இதுக்கு மேலே லேட்டா போன..சிவசக்தி கத கேட்கலைன்னு, நைட்டு பூராவும் என்னை தூங்கவிடாம முதல் எபிசோட்லேர்ந்து சொல்ல ஆரம்பிச்சுடுவா…இப்ப போனேன்னா..இந்த எபிசோட் மட்டும்தான்..வரட்டுமா..
பக்கி: நான் கூட கிளம்பறேன் டா ஜக்கி. ச்சக்கி நாம நாளைக்கு பஸ் ஸ்டாண்டுல பார்ப்போம்.
ச்சக்கி: அப்ப நானும் ஜூட்..வரட்டா..பை மாம்ஸ்..போன தடவை உங்களுக்கு வசதியா இருக்கட்டுமேன்னு

டமிலிஷுல ஓட்டு போட லிங்க் கொடுத்த ஒருத்தரும் பயன்படுத்திக்கவே இல்லை..இந்த முறையாவது முறையா பயன்படுத்துங்க…ஓட்டளிக்காமல் இருப்பது சட்ட விரோதமானதுன்னு நீங்க படிச்சதில்லையா..

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.