Home » நகைச்சுவை

எங்கக்கிட்டேயும் பேர் இருக்குல்ல

8 November 2009 6 Comments

சத்தியமூர்த்தி தன் லேட்டஸ்ட் பதிவான அப்பிடி போடு அருவாள – தமிழ் பேராமுல்லவில் உத்தியோகத்தை வைத்து ஓர் பேர்சூட்டு விழாவே நடத்தியிருக்காரு. சும்மா போட்டுட்டு போகாம பதிவு கடைசியில பெண்கள் பேர்சூட்டும் விழாவுக்கு சைலண்டா ரிப்பன் வெட்பண்ணிட்டு போயிட்டாரு.

இது போதாதுன்னு தேசிய பெண்கள் நலசங்கத்துலேர்ந்து பர்சனலா “இத நீங்கதான் எங்களுக்கு செய்துதரணும், எங்க மருவாதி இப்ப உங்க கையில”ன்னு ரொம்ப உருக்கமா கடிதம் போட்டாமாதிரி மத்தியான தூக்கத்துல ஒரு கனவு. சரி வந்ததுதான் வந்தது, அந்த சங்கத்துலேர்ந்து ஒரு நல்ல,அழகான, இளமையான (எல்லாம் ஒரு சேர அமைவது கஷடம்தான்) பெண்மணி வந்தாளான்னா…இந்தியன் ஏர்லைன்ஸ் மு(த்)திய பணிப்பெண் மாதிரி ஒருவர் அரிவாளோடு வந்து மென்மையா மிரட்டிட்டு போறார்.

ஓஹ்..பாட்டாவே படிச்சிட்டியா..அப்ப நானும்..நடுநடுவுல…மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கனும்னு கமல் சொல்றாப்ல அப்ப நானும் என் பங்குக்கு பெண்களுக்கு பேர் வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்கமாட்டேன் (ச்சின்னப்பையன் மனசுக்குள்ள “நீ உன் பொண்டாட்டி பே(ச்)ச கேட்கிறவன்றது உலகதுக்கே தெரியுமே”னு ஒரு செண்டென்ஸ் ஃபார்ம் பண்ணியிருப்பாரு இந்நேரத்துக்கு)

மருத்துவர் – சுகந்தா (பெண் மருத்துவர் பேரு, அதனால மருந்த மட்டும் கேளுங்க. அப்புறம் ஈவ்டீசிங்ல பிடிச்சு உள்ள தள்ளிட போறாங்க)
பல் மருத்துவர் – பல்லவி
வழக்கறிஞர் – அறச்செல்வி
நிதி நிறுவனர் – தனலட்சுமி (எங்கக்கிட்டேயும் பேர் இருக்குல்ல)
இதய மருத்துவர் – இருதயராணி (இருதயராஜ்னு பேர் இருக்கும் போது இருதயராணின்னு இருக்கக் கூடாதா?)
குழந்தை மருத்துவர் – பேபி
மன நல மருத்துவர் – மனோரமா
”அந்த” மருத்துவர் – காமாட்சி
கல்யாண தரகர் – கல்யாணி
கண் மருத்துவர் – கண்மணி (கண்ணாம்பா ரொம்ப ஓல்டுபா..அதான்..)
காது, மூக்கு, தொண்டை – மூக்காயி, பார்வதி
சர்க்கரை வியாதிக்கு – இனியவள்
சத்துணவு அதிகாரி – சுகவனம்
ஹிப்னாடிச நிபுணர் – சொக்கம்மாள்
பேயோட்டுபவர் – பேயே பேய ஓட்டுமா…(எழுதும் போது பக்கத்துல என் வீட்டு பேய் இல்லை…படிக்கும் போது ”பேய்கள் ஜாக்கிரதை”)
மாஜிக் நிபுணர் – மாயாஆண்ட்டி (இது ரீமிக்ஸ்)
கட்டிடக்கலை வல்லுநர் – செங்கல்மலம் (’ல்’ சைலண்டு)
ஓவியர் – ஓவியா
வானிலை நிபுணர் – மேகலா (இந்த மழை தொடருமா மேகலா?)
உழவர் – பச்சைக்கொடி
பூ வியாபாரி – புஷ்பவனம் / பூஞ்சோலை
சிகை அலங்காரர் – முடியரசி (சத்தியமா இப்படி ஒரு பெயர் இருக்குங்கண்ணா)
பிச்சைக்காரர் – பிச்சை (ரொம்ப யோசிக்க வேண்டாத பெயர், அதுமட்டுமில்லாமல் இது இரு பாலாருக்கும் பொருந்தும் பெயர்)
ஒயின் ஷாப் – மதுமிதா
குடிகாரி – ’ரம்’பா
மேக்கப் நிபுணர் – அழகரசி
பால்காரி – பாலசரஸ்வதி, பால்நிலா
பாம்பு வளர்ப்பவர் / பிடிப்பவர் – நாகம்மாள்
தங்க வியாபாரி – தங்கம்மாள்
மயிலாட்டாக்காரி – மயிலு (16 வயதினிலே மயிலுதான்…இப்பக் கொஞ்சம் வயசான மயிலு)
ஒயிலாட்டக்காரி – ஒயிலம்மாள்
நாய் வளர்ப்பவர் – பெரியநாயகி (ராஜபாளையத்து நாயோ?)
ஈட்டி எறிபவர் – வேலம்மாள்
சுமோ மல்யுத்த வீரர் – குண்டாலினி (இது ஒரு மலரின் பெயர். பிடிக்கலைன்னா குணவடிவுன்னு போட்டு இடை பெருத்தவங்க இடையில் ‘ட’ணாவ போட்டு குண்டாவடிவுன்னு படிச்சிக்கங்க)
கிக் பாக்சர் – உடையாள் (ஆங்கிலத்துல போட்டுப் பார்த்து படிக்கும் போது உதையாள்னு தான் வருது)
பவுலர் – பாலாமணி
ஸ்பின் பவுலர் – திருபுரசுந்தரி
பளு தூக்குபவர் – பவுலரோட ஒரு கால ஒடச்சிட்டா அவங்க இந்த ப்ரொஃபஷனுக்கு மாறிடலாம் (ச்சே..ஒரு குறுக்கெழுத்து போட்டி கேள்வி மாதிரி போட்டிருக்கியே சாரதி….என்னவோ போ)
கிளி ஜோசியர் – செல்லக்கிளி (இவரோட தங்கை பெயர் “சின்னக்கிளி”. கூடுதல் விவரம்: அவர் ஜூனியர் கிளி ஜோஸியர்).
ஓட்டுநர் – ’கார்’குழலி
நாடகம் போடுபவர் – கலையரசி
டான்ஸ் மாஸ்டர் – ஆடலரசி
பாடகி – குயிலி (பாடிக்கிட்டே ஆடுவாங்களா? மூச்சு வாங்குமா?)
ஒளிப்பதிவாளர் – ஒளியரசி (இத நீங்க சின்ன ‘லி’ போட்டு – இரண்டு இடத்துலயும், இன்னொரு வரி கூட்டிக்கலாம்)
பட்டு வியாபாரி – பட்டம்மாள்
நில ப்ரோக்கர் – பூமா
ப்யூட்டிஷியன் – எழிலரசி

உதிரி:

நாட்டின் அரசி – அரசி
அவரின் புதல்வி – இளவரசி
சிலம்பாட்டக்காரி – சிலம்பரசி (அதுக்காக நம்ம சிம்புவுக்கு இதெல்லாம் தெரியுமான்னு கேட்கக்கூடாது)
குமுதான்னு பேரு வெச்சிருந்தா அவங்க குமுதம் பத்திரிகையின் ஓனரா இருக்கணும்னு அவசியமில்லை.

சரி பொழப்ப வெச்சு பேர்கள  போட்டாச்சு….அடுத்து பேருக்கு நேரெதிர் குணாதிசயமோ அல்லது தொழிலோ செய்யறத ஒரு போ(லி)ஸ்ட்டா போட்டுரலாமா? என்ன சொல்றீங்க…பொழப்ப பார்க்கணுமே.

என் கடமைய நான் செஞ்சாச்சு, இப்ப ஒங்க கடமைக்கு போயி ஓட்டு போடுங்க (பணம் வாங்காம நீங்க போடற ஒரே ஓட்டு இதுதான?)

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.