Articles Archive for November 2009
கற்றதும் பெற்றதும் »
இப்போதெல்லாம் குழந்தைகளின் வளர்ப்பில் பெரிதும் பங்கு வகிப்பது பெற்றோர்களோ, வீட்டிலிருக்கும் பெரியோர்களோ இல்லை. தொலைக்காட்சியில் வரும் ஊட்டச்சத்து பான விளம்பரங்கள்தான். இது அதை கொடுக்கும், அது இதை வளர்க்கும், அர்ஜுனை விளையாட்டு, படிப்பு எல்லாவற்றிலும் முதன்மை பெறச் செய்யும் என்று ஆளாளுக்கு ஒரு அர்ஜுனை ஓடச்சொல்லி, குதிக்கச் சொல்லி (படிப்பதைத் தவிர) காண்பிக்கிறார்கள்.
நம் தமிழ்நாட்டு அர்ஜுன்கள் கொஞ்சம் பரவாயில்லை. நம் தமிழ்நாட்டு அர்ஜுன்கள் இதையெல்லாம் பார்த்து விளம்பர மயக்கத்தில் ”நான் உயரமாகணும்”, ”எனக்கு சச்சினோட சீக்ரெட் எனர்ஜி வேணும்”, ”எனக்கு செஸ் ஆனந்த் போல மூளை வளரணும்” என்று கேட்டு சகட்டு மேனிக்கு வாங்கித்தர சொல்லி ஸ்ட்ரைக் பண்ணுவதில்லை. (அந்த ஸ்ட்ரைக்கெல்லாம் செய்வது அர்ஜூன்களின் அம்மாக்கள்தான் என்பது வேறு விஷயம்). ஒன்றில் விட்டமின் டி இருக்கிறது. இன்னொன்றில் விட்டமின் ஈ இருக்கிறது. அப்போ நாம் …
