Home » Featured, சிறுகதை

பழைய ரெக்கார்ட்ஸ்

27 November 2009 8 Comments
இன்றைக்கு என்றுமில்லாமல் மகிழ்ச்சியாக இருந்தேன். கூடவே ஒரு சின்ன பதட்டம். மதியம் வரச் சொல்லியிருக்கிறார்கள். யார் வரச்சொன்னார்கள்? உங்களுக்கு தெரியவேண்டியது அவசியம். கல்யாணத்திற்கு பெண் பார்க்க போகிறேன். இது முதல் அனுபவம் அல்ல. இதற்கு முன் இரண்டு பெண்களை பார்த்தேன். எனக்கு பிடிக்காதது எதுவுமே அவர்களிடத்தில் இல்லை. இருந்தும் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை போலும். ஒருவர் தனியாக பேசவேண்டும் என்றார். தேவையொன்றுமில்லை என்று நிராகரித்துவிட்டேன். அதனாலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாம். அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சார், இதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள். அவர்களுக்கும் ரசனை ஆசை எல்லாம் இருக்குமல்லவா. அதை மதிக்கிறேன். அதை விடுங்கள். இன்று ஒரு பெண் பார்க்கப் போகிறோம். நிச்சயம் நான் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், இது என் கதை, என்னை பற்றிய கதை.
தொலைக்காட்ச்சியை பார்த்துக் கொண்டிருந்ததிலும், வெட்டியாக மெயில் செக் பண்ணிக்கொண்டிருந்ததிலும் நேரம் அன்று வேகமாகத்தான் ஓடியது. கடிகாரம் இரண்டை தொட்டபோது இன்பப்பதட்டத்தில் இருந்தேன். எப்படி இருப்பாள் இந்தப் பெண்? வங்கியில் வேலையில் இருப்பதாக அப்பா கூறியிருந்தார். போட்டோவில் பார்த்தது போலவே இருப்பாளா? அதிரடியாக இது போல வண்ணக் எண்ணங்கள் வந்து மோதி உள்ளே சுக்கு நூறாகிப் போயிருந்தாலும், வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல், சாதரணமாக காட்சியளித்தேன். மேலே வி.வெ எல்லாம் கிடையாது என்று வியாக்கியானம் செய்துவிட்டு இப்படி பேசுகிறானே என்று நீங்கள் கவலையோ ஆத்திரமோ படவேண்டிய அவசியமில்லை. ஏன்? ஏனென்றால் இது முழுக்க முழுக்க என் கதை.
மதியம் சுமார் மூன்று மணியளவில் நான் என் அப்பா, அம்மா மற்றும் என் மாமி நால்வரும் எனக்கு பெண் பார்க்க சென்றோம். அப்பாவிற்கு பெண்ணின் தந்தையை மிகவும் பிடித்திருந்தது. அவரும் என் அப்பாவை போலவே வெற்றிலை பாக்கு போடுபவர் என்பதாலா என்று தெரியவில்லை. பெண்ணுக்கு என்னை பிடித்திருப்பதாகவும், எனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டார்கள். நான் என் அப்பாவிடம் வீட்டிற்கு சென்று முடிவுசெய்து தெரிவிக்கலாம் என்றேன். ”சரி” என்றார்.
சாயங்காலம் வீட்டு வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருந்தார் அப்பா எங்களுடன் உரையாடிக்கொண்டே. இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் வழக்கம் போல தன்னால் ஆன பெரிய பெரிய வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தார். இரவு ”கவுன் பனேகா க்ரோர் பதி” நிகழ்ச்சியை என் ஒரு அண்ணனின் மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று அண்ணன் மகன் உரத்தக் குரலில் பதட்டமாக ”பாட்டி” என்று அழைக்க அடுத்த அறையில் வேறு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அங்கு வர, அப்பா மூச்சு விட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நான் அப்பாவின் அருகில் சென்று அவரின் மார்பை தடவிக் கொடுத்தேன். ஏதோ மாத்திரையை செய்கையால் கேட்டார். எல்லாவற்றையும் காண்பிக்க அவர் சுட்டிக் காட்டிய மாத்திரையை கொடுத்தோம். நான் அவரை மருத்தவமனைக்கு போகலாம் என்றழைத்தேன். வழக்கமாக வேண்டாம் தேவையில்லை என்று சொல்லும் அவர், கூப்பிட்ட உடனேயே கிளம்பியது ஆச்சரியத்தை அளித்தது. அப்பா இன்னும் மூச்சு விட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு அண்ணன் வேகமாக சென்று ஆட்டோ பிடித்து வந்தான்.
நான் ஆட்டோவில் செல்லும்போது அப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தேன். அவருக்கு இன்னும் மூச்சு முட்டிக்கொண்டுதான் இருந்தது. மார்பை அழுந்த தடவிக் கொடுத்தேன், கன்னத்தை தடவிக் கொடுத்தேன். எத்தனை முறை எனக்கு அவர் இதையெல்லாம் செய்திருப்பார். நான் இருமுவதற்கே நெஞ்சை தடவிக் கொடுக்கும் அந்த பாசமிகு தந்தை இன்று மூச்சுத் திணறலில். ஒன்றும் ஆகாது என்று என்மனது சொல்லியது. ஆகக்கூடாது என்று என் பாசம் ஆசைப்பட்டது. அம்மாவை நினைத்தேன். ஒன்றும் ஆகாது என்று மறுபடியும் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன். புத்தகங்களில் படித்திருக்கிறேன், இண்டெர்நெட்டில் படித்திருக்கிறேன். இதுபோல மூச்சுத் திணறல் வரும்போது இரும வேண்டும், நன்றாக மூச்சு இழுத்து விடவேண்டும். அப்பா செய்து கொண்டிருந்தார் இருமுவதைத் தவிர. அவரால் முயற்சித்து முடியவில்லை.
ஏன் இப்படி திடீரென்று? அதிகப்படியான வேலைகள் அப்பாவிற்கு அயர்ச்சியை கொடுத்திருக்கும். அப்பா, உயரத்தில் குள்ளம் உள்ளத்தில் வானளவு உயரம். மெலிந்த தேகம், வங்கி வேலையிலிருந்து ரிட்டையர் ஆகும் வரை, அயராத உழைப்பு. ஊருக்கு ஊருக்கு மாற்றப்பட்டவர். அவரின் தலைமையின் கீழ் கிளைகள் நன்கு செயல்படுவதால் அவரை அப்படி மாற்றினார்கள்.
அப்பா பிள்ளைகள் படிப்பிலும் சரி அவர்களின் எதிர்காலத்திலும் சரி குறுக்கிடவே இல்லை. அவர்கள் விருப்பப்படியே விட்டு வைத்தார். அதிகம் கண்டிக்கத் தெரியாதவர். அம்மா பாசத்தினால் தன் மனையிடமும், மனைவியின் மீதான் அன்பினால் தன் தாயிடமும் வசை வாங்கிக் கொள்வார். வசையென்றாலும், அவர்கள் இவரின் அன்புக்கு ஏங்கியே இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு மறுகோபம் காட்டதவர். என்னை ஒரே ஒரு முறைதான் அடித்திருக்கிறார். அண்ணன்களை அடித்ததில்லை என்று நினைக்கிறேன். கேட்கவேண்டும். அப்பா; ஈடு இணையில்லாத, இந்த பிறப்பில் எனக்கு கிடைத்த சொத்து. காலையில் வீட்டு வேலைகள் செய்து முடித்து, வெறும் மோர் மட்டுமே குடித்து, என் சகோதரர்களின் வங்கி கணக்கு வழக்குகள் சம்பத்தப்பட்ட வெளிவேலைகளை முடித்து வீடு திரும்ப மணி மூன்றாகும். அதற்கு பிறகு குளித்து, தன் தந்தை தாயார் மற்றும் தெய்வங்களை வணங்கிவிட்டுதான் சாப்பிடுவார் தினமும்.
இப்படி மற்றவர்களுக்காகவே வாழ்ந்த இந்த ஜீவனுக்கு இன்று மூச்சுத் திணறல். சாகக்கூடாது என்ற வைராக்கியத்துடன், ஆட்டோவில் என் பக்கத்தில். மருத்துவமனை வந்தடைந்தோம். மாஸ்க் பொருத்தினார்கள். சரியாக பொருந்தவில்லை. கையாலேயே பிடித்துக் கொண்டு உள்ளே கூட்டிச் சென்றார்கள். நேராக ஐசியூவிற்கு போயிருக்க வேண்டும். மாறாக சாதரணமாக ஈசிஜி எடுக்க இருக்கும் படுக்கைக்கு கூட்டிச் சென்றார்கள். அந்த தருணத்தில் இதெல்லாம் எனக்கு தவறாக தெரியவில்லை. என் அப்பா மட்டுமே, மூச்சுவிட அவரின் போரட்டங்கள் மட்டுமே தெரிந்தன. அவரை வேலை நிமித்தமாக நான் இருக்கும் நொய்டாவிற்கு கூட்டி செல்லப்போகிறேன். வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அங்கு நானும் அவரும் மட்டும். வீடு பார்க்கவேண்டும். ஒரு சிங்கிள் பெட்ரூம் தேவைப்படும். கல்யாணம் ஆனால் இரண்டு தேவைப்படும். இரண்டாகவே பார்ப்போம் என்று மாலையில் பேசும்போது முடிவு செய்தோம். அப்பா நன்றாகவே சமைப்பார். அவர் வேலை பார்க்கும் நாட்களில் ட்ரான்ஸ்ஃபரில் பல ஊர்களில் தனியாக தானே சமைத்துக் கொண்ட அனுபவம் இருக்கிறது. ஒரளவிற்கு இந்தி பேசுவார். எனக்கு சமைத்துப் போடுவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்.
அவர் குணமடைய வேண்டும். எவ்வளவு செலவானாலும். ஈசிஜி எடுக்க அவர் உள்பனியனை கழட்ட வேண்டியிருந்தது. முரளி முயற்சித்தான். அந்த மூச்சுத்திணறலிலும் அப்பா, என் அப்பா, மற்றவர்களுக்கு உதவியே பழக்கப்பட்ட என் அப்பா முதுகை நிமித்திக் கொடுத்து அவன் கழட்ட உதவினார். டாக்டர் வந்தார். ஈசிஜி ஓடியது. பழைய ரெக்கார்ட்ஸ் கேட்டார். எடுத்து வரவில்லை. எடுத்து வரும் நிலையிலும் அப்போது நாங்கள் இல்லை. அது அப்போது தேவையா? ஒருவர் மூச்சுவிடவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு என்னவாக இருந்தால் என்ன? ஏன் இந்த டாக்டர் ரெக்கார்ட்ஸ் கேட்கிறார்? ஏன் இன்னும் ஐசியூ அழைத்து செல்லவில்லை. அப்பாவிற்கு அப்படியொன்றும் ஆபத்து இல்லையா? இது சாதரண மூச்சுச் திணறலா? மூச்சிக் குழாய் அடைத்துக் கொள்ளுமா? கொண்டிருக்குமா? இந்த மருத்தவமனையின் பெரிய டாக்டரிடம் தானே கிசிச்சை பெற்றுவருகிறார்? இந்த டாக்டருக்கும் பூர்வீகம் சொல்ல வேண்டுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் இல்லை. கேள்வி கேட்கும் நிலையிலும் நாங்களும் இல்லை. அவருக்கு பழைய ரிப்போர்ட் வேண்டும். எனக்கு அந்த ரிப்போர்ட் வீட்டில் எங்கிருக்கிறது என்று தெரியும்.
நான் சென்று எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு, பைக்கை கிளப்பினேன். பல ஆண்டுகளாக ஓட்டிய அனுபவம், அவ்வளவாக கவனம் தேவையிருக்கவில்லை. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, மணி 10க்கு மேல் இருக்கும். பீச் ரோடு நிசப்தமாக போக்குவரத்தே இல்லாமல். எனக்கு வழிவிட்டது. கால் கியரை போட்டது, கை வேகத்தை கூட்டியது, மனது அப்பாவை நினைத்து. மறு நொடி அம்மாவை நினைத்தது. அப்பா, அம்மா, அப்பாவின் மூச்சுத்திணறல், இன்று பார்த்த அந்த பெண் எல்லாம் மாறி மாறி மனதில் வந்துபோனது. சரி சொல்வதாக இருந்தேன். எல்லாம் முடியட்டும் அப்பாவை சொல்லச் சொல்லலாம். கல்யாணத்தை வேண்டுமானால் கொஞ்ச நாள் தள்ளிவைத்து, அப்பாவை நன்றாக தேற்றிவிடலாம். கொஞ்சநாள் அப்பாவை நொய்டாவிற்கு கூப்பிட்டுக் கொண்டு போகப்போகிறேன். எதிரே சாலை மங்கலாகிப் போனது. அழுவதற்கு இது நேரமல்ல. இன்னும் வேகத்தைக் கூட்டு. முரளியிருக்கிறான். நான் வரும்வரை பார்த்துக் கொள்வான். ஸ்ரீகாந்த்தை போனில் கூப்பிட்டு அப்பாவை ஐசியு வார்டுக்கு கூட்டிச் செல்ல சொல்ல சொல்ல வேண்டும். போ..வேகமாக போ..உன் தேவையற்ற பயங்களுக்கும், சிந்தனைகளுக்கு இது  நேரமில்லை என்று மனது சொல்லியது. இந்த நேரம் முழுவதும் உன் ஆசை அப்பாவுக்காக மட்டுமே. அம்மாவிடம் பயப்படாமல் இருக்கச் சொல்லவேண்டும். அம்மா தைரியமானவள்தான். இருந்தாலும் தைரியம் கொடுக்க வேண்டும். வீடு சென்றடைந்தேன். அதுவரை நான் திறந்திராத அந்த பச்சை மரபீரோவில்தான் அப்பா அவர் ஃபைலை வைத்திருந்தார். ஒருமுறை அவர் வைத்ததை பார்த்திருக்கிறேன்.
இதுவரை ஒரு முறை கூட அதை பிரித்துப் பார்த்ததில்லை. அப்பாவிடம் கூட உட்கார்ந்து கலந்தாலோசித்ததில்லை. ஏன் தோன்றவில்லை? அப்பாவின் உடல்நிலை சம்பதப்பட்ட ஒன்று ஏன் இதுநாள் வரையில் எனக்கு முக்கியமாக படவில்லை. தினத்தந்தியில் வரும் பெரிய மனிதர்களின் உடல் நலக்குறைச்சல் செய்திகளை ஒண்ணுக்கு அடக்கிக் கொண்டு படித்தேனே? பெற்ற தந்தையின் ரிப்போர்ட்டை ஏன் பிரிக்கக் கூட இல்லை.
அம்மாவின் முகத்தில் பயமில்லை, பதற்றம் மட்டுமே தெரிந்தது. நான் ஒன்றிரண்டு ஃபைல்களை புரட்டியதில் அப்பாவின் ரெக்கார்ட்ஸ் கிடைத்துவிட்டது. இதோ இன்னும் சரியாக ஐந்தாவது நிமிடத்தில் நான் மருத்துவமனை சென்றுவிடுவேன். சென்று டாக்டரிடம் கொடுப்பேன். நினைத்துக் கொண்டே அனைவரிடமும் பயப்படாமல் இருக்கச் சொல்லிவிட்டு பைக்கை கிளப்பினேன்.
மீண்டும் எண்ண அலைகள். அப்பா என்னை அருகில் அழைப்பார், வழக்கம் போல தனக்கு ஒன்றுமில்லை இது வயசானாலே வரும் ஒன்றுதான் என்பார். அப்பாவிற்கு சர்க்கரை குறைந்திருக்குமோ. சர்க்கரை தான் இருக்கும். டாக்டர் இந்நேரத்திற்கு குளூகோஸ் ஏற்றியிருப்பார். சர்க்கரை குறைந்தால் மூச்சுத் திணறல் வருமா என்ன? தெரியவில்லை. டாக்டரிடம் எல்லாம் பதட்டம் அடங்கியதும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். முரளியோடும் ஸ்ரீகாந்த்தோடும் இந்நேரத்திற்கு அப்பா பேசவே ஆரம்பித்திருப்பார். ஏன் இது முதலில் தோன்றவில்லை? சற்று நிம்மதியடைந்தேன். அப்பாடா என்பது போல பெருமூச்சு விட்டுக் கொண்டேன். இப்போது பைக்கின் வேகம் அதிகரித்தது. அப்பாவிற்கு ஒன்றுமில்லை. எல்லாம் அந்த சர்க்கரை படுத்தும்பாடு. முதலில் இந்த வேலைகளையெல்லாம் செய்வதை நிறுத்தச் சொல்லவேண்டும்.
டாக்டர் அவருக்கு இந்நேரம் குளூகோஸ் கொடுத்திருப்பார். ஏதோ ஒரு உடனடி நிவராணி இண்ஜக்‌ஷன் போட்டிருப்பார். அப்பா மயக்க நிலையில் இருப்பார். வெளியே ஹாலில் இரு அண்ணன்களும் சன்னமாக பேசிக் கொண்டிருப்பார்கள். எப்படியும் இரவு தங்க சொல்லிவிடுவார் டாக்டர். நாளை பெரிய டாக்டர் வந்து பார்த்த பிறகுதான் டிஸ்சார்ஜ் எல்லாம். நாம் தங்கிவிடுவோம் அப்பாவுடன். அண்ணன்கள் இருவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ச்ச்..சே.. சுஜாதா புக் ஏதாவது எடுத்து வந்திருக்கலாமே? பல விஷயங்கள் அன்று தோன்றாமல் போனது. அதில் இதுவும் ஒன்று. மருத்துவமனையை நெருங்கிவிட்டேன், இன்னும் சில வினாடிகள்தான். வந்துவிட்டேன்.
நான் நினைத்தது போலவே அங்கு என் அண்ணிகள் இருவர் வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்ரீகாந்தும் முரளியும் உள்ள இருக்கா போலிருக்கு. நான் ஓடினேன். என் அண்ணி தடுத்து நிறுத்தினார். எனக்கு முதலில் அப்பாவை பார்த்தாக வேண்டும், பிறகு டாக்டரிடம் இந்த ரிப்போர்ட்டை கொடுக்கவேண்டும். அண்ணி ”அப்பாவிற்கு” என்று முழுதாக சொல்லி முடிப்பதற்குள் நான் புரிந்துகொண்டேன். சர்க்கரை இல்லை..இது வேறு ஏதோ. அப்பாவை ஐசியுவிற்கு கூட்டிச்சென்றிருப்பார்கள்.
நான் மேலும் தாமதிக்க விரும்பவில்லை. அப்பா படுத்திருந்த அறையை நோக்கி ஓடினேன். முரளி தடுத்து இழுத்தான். நான் திமிறிக் கொண்டு ஓடினேன். அங்கே அப்பா படுத்திருந்தார். நான் அப்பாவை கூப்பிட்டேன், பதிலில்லை. கன்னத்தை தடவிக்கொடுத்தேன், எந்தவித சலனமுமில்லை. தோளை பிடித்து உலுக்கினேன் உலுக்கியதினால் ஏற்பட்டதைவிட அவரிடம் வேறு எந்த அசைவுமில்லை.
அப்பா இருக்கும் போது அந்த ரெக்கார்ட்ஸை பார்க்காத நான் அன்று பார்த்தபோது அப்பா இல்லை.
அப்பா கடைசியாக செய்த வேலை என் பெரிய அண்ணனுக்கு ஈமெயில் அனுப்பியது. அந்த ஈமெயிலை என் அண்ணன் எனக்கு ஃபார்வார்டு செய்தான். அதில் எனக்கு அன்று பெண் பார்த்தைப் பற்றியும், எல்லாம் ஒத்துப்போகும் பட்சத்தில் கல்யாணத்தை எல்லாம் வல்ல அந்த இறைவன் நல்லபடியாக நடத்திக் கொடுப்பார் என்று எழுதியிருந்தார். ஈமெயில் அனுப்பிய தேதி ஆகஸ்ட் 20, இரவு நேரம் மணி சுமார் 8:50 இருக்கும். ஏப்ரல் 30, 2006ஆம் ஆண்டு அம்மா, அண்ணன் சகிதம் எல்லா உறவினர்களின் வாழ்த்துக்களுடன் அப்பா சொன்ன அந்த இறைவனின் அருளால் நல்லபடியாக கல்யாணம் நடந்தேறியது என் அப்பாவுடன் அன்று நான் பார்த்த அதே பெண்ணுடன்.

இன்றைக்கு என்றுமில்லாமல் மகிழ்ச்சியாக இருந்தேன். கூடவே ஒரு சின்ன பதட்டம். மதியம் வரச் சொல்லியிருக்கிறார்கள். யார் வரச்சொன்னார்கள்? உங்களுக்கு தெரியவேண்டியது அவசியம். கல்யாணத்திற்கு பெண் பார்க்க போகிறேன். இது முதல் அனுபவம் அல்ல. இதற்கு முன் இரண்டு பெண்களை பார்த்தேன். எனக்கு பிடிக்காதது எதுவுமே அவர்களிடத்தில் இல்லை. இருந்தும் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை போலும். ஒருவர் தனியாக பேசவேண்டும் என்றார். தேவையொன்றுமில்லை என்று நிராகரித்துவிட்டேன். அதனாலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாம். அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சார், இதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள். அவர்களுக்கும் ரசனை ஆசை எல்லாம் இருக்குமல்லவா. அதை மதிக்கிறேன். அதை விடுங்கள். இன்று ஒரு பெண் பார்க்கப் போகிறோம். நிச்சயம் நான் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், இது என் கதை, என்னை பற்றிய கதை.

தொலைக்காட்ச்சியை பார்த்துக் கொண்டிருந்ததிலும், வெட்டியாக மெயில் செக் பண்ணிக்கொண்டிருந்ததிலும் நேரம் அன்று வேகமாகத்தான் ஓடியது. கடிகாரம் இரண்டை தொட்டபோது இன்பப்பதட்டத்தில் இருந்தேன். எப்படி இருப்பாள் இந்தப் பெண்? வங்கியில் வேலையில் இருப்பதாக அப்பா கூறியிருந்தார். போட்டோவில் பார்த்தது போலவே இருப்பாளா? அதிரடியாக இது போல வண்ணக் எண்ணங்கள் வந்து மோதி உள்ளே சுக்கு நூறாகிப் போயிருந்தாலும், வெளியே எதையும் காண்பித்துக் கொள்ளாமல், சாதரணமாக காட்சியளித்தேன். மேலே வி.வெ எல்லாம் கிடையாது என்று வியாக்கியானம் செய்துவிட்டு இப்படி பேசுகிறானே என்று நீங்கள் கவலையோ ஆத்திரமோ படவேண்டிய அவசியமில்லை. ஏன்? ஏனென்றால் இது முழுக்க முழுக்க என் கதை.

மதியம் சுமார் மூன்று மணியளவில் நான் என் அப்பா, அம்மா மற்றும் என் மாமி நால்வரும் எனக்கு பெண் பார்க்க சென்றோம். அப்பாவிற்கு பெண்ணின் தந்தையை மிகவும் பிடித்திருந்தது. அவரும் என் அப்பாவை போலவே வெற்றிலை பாக்கு போடுபவர் என்பதாலா என்று தெரியவில்லை. பெண்ணுக்கு என்னை பிடித்திருப்பதாகவும், எனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டார்கள். நான் என் அப்பாவிடம் வீட்டிற்கு சென்று முடிவுசெய்து தெரிவிக்கலாம் என்றேன். ”சரி” என்றார்.

சாயங்காலம் வீட்டு வேலைகளையெல்லாம் செய்து கொண்டிருந்தார் அப்பா எங்களுடன் உரையாடிக்கொண்டே. இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் வழக்கம் போல தன்னால் ஆன பெரிய பெரிய வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தார். இரவு ”கவுன் பனேகா க்ரோர் பதி” நிகழ்ச்சியை என் ஒரு அண்ணனின் மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று அண்ணன் மகன் உரத்தக் குரலில் பதட்டமாக ”பாட்டி” என்று அழைக்க அடுத்த அறையில் வேறு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அங்கு வர, அப்பா மூச்சு விட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நான் அப்பாவின் அருகில் சென்று அவரின் மார்பை தடவிக் கொடுத்தேன்.

ஏதோ மாத்திரையை செய்கையால் கேட்டார். எல்லாவற்றையும் காண்பிக்க அவர் சுட்டிக் காட்டிய மாத்திரையை கொடுத்தோம். நான் அவரை மருத்தவமனைக்கு போகலாம் என்றழைத்தேன். வழக்கமாக வேண்டாம் தேவையில்லை என்று சொல்லும் அவர், கூப்பிட்ட உடனேயே கிளம்பியது ஆச்சரியத்தை அளித்தது. அப்பா இன்னும் மூச்சு விட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு அண்ணன் வேகமாக சென்று ஆட்டோ பிடித்து வந்தான்.

நான் ஆட்டோவில் செல்லும்போது அப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தேன். அவருக்கு இன்னும் மூச்சு முட்டிக்கொண்டுதான் இருந்தது. மார்பை அழுந்த தடவிக் கொடுத்தேன், கன்னத்தை தடவிக் கொடுத்தேன். எத்தனை முறை எனக்கு அவர் இதையெல்லாம் செய்திருப்பார். நான் இருமுவதற்கே நெஞ்சை தடவிக் கொடுக்கும் அந்த பாசமிகு தந்தை இன்று மூச்சுத் திணறலில். ஒன்றும் ஆகாது என்று என்மனது சொல்லியது. ஆகக்கூடாது என்று என் பாசம் ஆசைப்பட்டது. அம்மாவை நினைத்தேன். ஒன்றும் ஆகாது என்று மறுபடியும் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன். புத்தகங்களில் படித்திருக்கிறேன், இண்டெர்நெட்டில் படித்திருக்கிறேன். இதுபோல மூச்சுத் திணறல் வரும்போது இரும வேண்டும், நன்றாக மூச்சு இழுத்து விடவேண்டும். அப்பா செய்து கொண்டிருந்தார் இருமுவதைத் தவிர. அவரால் முயற்சித்து முடியவில்லை.

ஏன் இப்படி திடீரென்று? அதிகப்படியான வேலைகள் அப்பாவிற்கு அயர்ச்சியை கொடுத்திருக்கும். அப்பா, உயரத்தில் குள்ளம் உள்ளத்தில் வானளவு உயரம். மெலிந்த தேகம், வங்கி வேலையிலிருந்து ரிட்டையர் ஆகும் வரை, அயராத உழைப்பு. ஊருக்கு ஊருக்கு மாற்றப்பட்டவர். அவரின் தலைமையின் கீழ் கிளைகள் நன்கு செயல்படுவதால் அவரை அப்படி மாற்றினார்கள்.

அப்பா பிள்ளைகள் படிப்பிலும் சரி அவர்களின் எதிர்காலத்திலும் சரி குறுக்கிடவே இல்லை. அவர்கள் விருப்பப்படியே விட்டு வைத்தார். அதிகம் கண்டிக்கத் தெரியாதவர். அம்மா பாசத்தினால் தன் மனையிடமும், மனைவியின் மீதான் அன்பினால் தன் தாயிடமும் வசை வாங்கிக் கொள்வார். வசையென்றாலும், அவர்கள் இவரின் அன்புக்கு ஏங்கியே இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு மறுகோபம் காட்டதவர். என்னை ஒரே ஒரு முறைதான் அடித்திருக்கிறார். அண்ணன்களை அடித்ததில்லை என்று நினைக்கிறேன். கேட்கவேண்டும். அப்பா; ஈடு இணையில்லாத, இந்த பிறப்பில் எனக்கு கிடைத்த சொத்து. காலையில் வீட்டு வேலைகள் செய்து முடித்து, வெறும் மோர் மட்டுமே குடித்து, என் சகோதரர்களின் வங்கி கணக்கு வழக்குகள் சம்பத்தப்பட்ட வெளிவேலைகளை முடித்து வீடு திரும்ப மணி மூன்றாகும். அதற்கு பிறகு குளித்து, தன் தந்தை தாயார் மற்றும் தெய்வங்களை வணங்கிவிட்டுதான் சாப்பிடுவார் தினமும்.

இப்படி மற்றவர்களுக்காகவே வாழ்ந்த இந்த ஜீவனுக்கு இன்று மூச்சுத் திணறல். சாகக்கூடாது என்ற வைராக்கியத்துடன், ஆட்டோவில் என் பக்கத்தில். மருத்துவமனை வந்தடைந்தோம். மாஸ்க் பொருத்தினார்கள். சரியாக பொருந்தவில்லை. கையாலேயே பிடித்துக் கொண்டு உள்ளே கூட்டிச் சென்றார்கள். நேராக ஐசியூவிற்கு போயிருக்க வேண்டும். மாறாக சாதரணமாக ஈசிஜி எடுக்க இருக்கும் படுக்கைக்கு கூட்டிச் சென்றார்கள். அந்த தருணத்தில் இதெல்லாம் எனக்கு தவறாக தெரியவில்லை. என் அப்பா மட்டுமே, மூச்சுவிட அவரின் போரட்டங்கள் மட்டுமே தெரிந்தன. அவரை வேலை நிமித்தமாக நான் இருக்கும் நொய்டாவிற்கு கூட்டி செல்லப்போகிறேன். வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அங்கு நானும் அவரும் மட்டும். வீடு பார்க்கவேண்டும். ஒரு சிங்கிள் பெட்ரூம் தேவைப்படும். கல்யாணம் ஆனால் இரண்டு தேவைப்படும். இரண்டாகவே பார்ப்போம் என்று மாலையில் பேசும்போது முடிவு செய்தோம். அப்பா நன்றாகவே சமைப்பார். அவர் வேலை பார்க்கும் நாட்களில் ட்ரான்ஸ்ஃபரில் பல ஊர்களில் தனியாக தானே சமைத்துக் கொண்ட அனுபவம் இருக்கிறது. ஒரளவிற்கு இந்தி பேசுவார். எனக்கு சமைத்துப் போடுவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்.

அவர் குணமடைய வேண்டும். எவ்வளவு செலவானாலும். ஈசிஜி எடுக்க அவர் உள்பனியனை கழட்ட வேண்டியிருந்தது. முரளி முயற்சித்தான். அந்த மூச்சுத்திணறலிலும் அப்பா, என் அப்பா, மற்றவர்களுக்கு உதவியே பழக்கப்பட்ட என் அப்பா முதுகை நிமித்திக் கொடுத்து அவன் கழட்ட உதவினார். டாக்டர் வந்தார். ஈசிஜி ஓடியது. பழைய ரெக்கார்ட்ஸ் கேட்டார். எடுத்து வரவில்லை. எடுத்து வரும் நிலையிலும் அப்போது நாங்கள் இல்லை. அது அப்போது தேவையா? ஒருவர் மூச்சுவிடவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு என்னவாக இருந்தால் என்ன? ஏன் இந்த டாக்டர் ரெக்கார்ட்ஸ் கேட்கிறார்? ஏன் இன்னும் ஐசியூ அழைத்து செல்லவில்லை. அப்பாவிற்கு அப்படியொன்றும் ஆபத்து இல்லையா? இது சாதரண மூச்சுச் திணறலா? மூச்சிக் குழாய் அடைத்துக் கொள்ளுமா? கொண்டிருக்குமா? இந்த மருத்தவமனையின் பெரிய டாக்டரிடம் தானே கிசிச்சை பெற்றுவருகிறார்? இந்த டாக்டருக்கும் பூர்வீகம் சொல்ல வேண்டுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் இல்லை. கேள்வி கேட்கும் நிலையிலும் நாங்களும் இல்லை. அவருக்கு பழைய ரிப்போர்ட் வேண்டும். எனக்கு அந்த ரிப்போர்ட் வீட்டில் எங்கிருக்கிறது என்று தெரியும்.

நான் சென்று எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு, பைக்கை கிளப்பினேன். பல ஆண்டுகளாக ஓட்டிய அனுபவம், அவ்வளவாக கவனம் தேவையிருக்கவில்லை. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, மணி 10க்கு மேல் இருக்கும். பீச் ரோடு நிசப்தமாக போக்குவரத்தே இல்லாமல். எனக்கு வழிவிட்டது. கால் கியரை போட்டது, கை வேகத்தை கூட்டியது, மனது அப்பாவை நினைத்து. மறு நொடி அம்மாவை நினைத்தது. அப்பா, அம்மா, அப்பாவின் மூச்சுத்திணறல், இன்று பார்த்த அந்த பெண் எல்லாம் மாறி மாறி மனதில் வந்துபோனது. சரி சொல்வதாக இருந்தேன். எல்லாம் முடியட்டும் அப்பாவை சொல்லச் சொல்லலாம். கல்யாணத்தை வேண்டுமானால் கொஞ்ச நாள் தள்ளிவைத்து, அப்பாவை நன்றாக தேற்றிவிடலாம். கொஞ்சநாள் அப்பாவை நொய்டாவிற்கு கூப்பிட்டுக் கொண்டு போகப்போகிறேன். எதிரே சாலை மங்கலாகிப் போனது. அழுவதற்கு இது நேரமல்ல. இன்னும் வேகத்தைக் கூட்டு. முரளியிருக்கிறான். நான் வரும்வரை பார்த்துக் கொள்வான். ஸ்ரீகாந்த்தை போனில் கூப்பிட்டு அப்பாவை ஐசியு வார்டுக்கு கூட்டிச் செல்ல சொல்ல சொல்ல வேண்டும். போ..வேகமாக போ..உன் தேவையற்ற பயங்களுக்கும், சிந்தனைகளுக்கு இது  நேரமில்லை என்று மனது சொல்லியது. இந்த நேரம் முழுவதும் உன் ஆசை அப்பாவுக்காக மட்டுமே. அம்மாவிடம் பயப்படாமல் இருக்கச் சொல்லவேண்டும். அம்மா தைரியமானவள்தான். இருந்தாலும் தைரியம் கொடுக்க வேண்டும். வீடு சென்றடைந்தேன். அதுவரை நான் திறந்திராத அந்த பச்சை மரபீரோவில்தான் அப்பா அவர் ஃபைலை வைத்திருந்தார். ஒருமுறை அவர் வைத்ததை பார்த்திருக்கிறேன்.

இதுவரை ஒரு முறை கூட அதை பிரித்துப் பார்த்ததில்லை. அப்பாவிடம் கூட உட்கார்ந்து கலந்தாலோசித்ததில்லை. ஏன் தோன்றவில்லை? அப்பாவின் உடல்நிலை சம்பதப்பட்ட ஒன்று ஏன் இதுநாள் வரையில் எனக்கு முக்கியமாக படவில்லை. தினத்தந்தியில் வரும் பெரிய மனிதர்களின் உடல் நலக்குறைச்சல் செய்திகளை ஒண்ணுக்கு அடக்கிக் கொண்டு படித்தேனே? பெற்ற தந்தையின் ரிப்போர்ட்டை ஏன் பிரிக்கக் கூட இல்லை.

அம்மாவின் முகத்தில் பயமில்லை, பதற்றம் மட்டுமே தெரிந்தது. நான் ஒன்றிரண்டு ஃபைல்களை புரட்டியதில் அப்பாவின் ரெக்கார்ட்ஸ் கிடைத்துவிட்டது. இதோ இன்னும் சரியாக ஐந்தாவது நிமிடத்தில் நான் மருத்துவமனை சென்றுவிடுவேன். சென்று டாக்டரிடம் கொடுப்பேன். நினைத்துக் கொண்டே அனைவரிடமும் பயப்படாமல் இருக்கச் சொல்லிவிட்டு பைக்கை கிளப்பினேன்.

மீண்டும் எண்ண அலைகள். அப்பா என்னை அருகில் அழைப்பார், வழக்கம் போல தனக்கு ஒன்றுமில்லை இது வயசானாலே வரும் ஒன்றுதான் என்பார். அப்பாவிற்கு சர்க்கரை குறைந்திருக்குமோ. சர்க்கரை தான் இருக்கும். டாக்டர் இந்நேரத்திற்கு குளூகோஸ் ஏற்றியிருப்பார். சர்க்கரை குறைந்தால் மூச்சுத் திணறல் வருமா என்ன? தெரியவில்லை. டாக்டரிடம் எல்லாம் பதட்டம் அடங்கியதும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். முரளியோடும் ஸ்ரீகாந்த்தோடும் இந்நேரத்திற்கு அப்பா பேசவே ஆரம்பித்திருப்பார். ஏன் இது முதலில் தோன்றவில்லை? சற்று நிம்மதியடைந்தேன். அப்பாடா என்பது போல பெருமூச்சு விட்டுக் கொண்டேன். இப்போது பைக்கின் வேகம் அதிகரித்தது. அப்பாவிற்கு ஒன்றுமில்லை. எல்லாம் அந்த சர்க்கரை படுத்தும்பாடு. முதலில் இந்த வேலைகளையெல்லாம் செய்வதை நிறுத்தச் சொல்லவேண்டும்.

டாக்டர் அவருக்கு இந்நேரம் குளூகோஸ் கொடுத்திருப்பார். ஏதோ ஒரு உடனடி நிவராணி இண்ஜக்‌ஷன் போட்டிருப்பார். அப்பா மயக்க நிலையில் இருப்பார். வெளியே ஹாலில் இரு அண்ணன்களும் சன்னமாக பேசிக் கொண்டிருப்பார்கள். எப்படியும் இரவு தங்க சொல்லிவிடுவார் டாக்டர். நாளை பெரிய டாக்டர் வந்து பார்த்த பிறகுதான் டிஸ்சார்ஜ் எல்லாம். நாம் தங்கிவிடுவோம் அப்பாவுடன். அண்ணன்கள் இருவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ச்ச்..சே.. சுஜாதா புக் ஏதாவது எடுத்து வந்திருக்கலாமே? பல விஷயங்கள் அன்று தோன்றாமல் போனது. அதில் இதுவும் ஒன்று. மருத்துவமனையை நெருங்கிவிட்டேன், இன்னும் சில வினாடிகள்தான். வந்துவிட்டேன்.

நான் நினைத்தது போலவே அங்கு என் அண்ணிகள் இருவர் வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்ரீகாந்தும் முரளியும் உள்ள இருக்கா போலிருக்கு. நான் ஓடினேன். என் அண்ணி தடுத்து நிறுத்தினார். எனக்கு முதலில் அப்பாவை பார்த்தாக வேண்டும், பிறகு டாக்டரிடம் இந்த ரிப்போர்ட்டை கொடுக்கவேண்டும். அண்ணி ”அப்பாவிற்கு” என்று முழுதாக சொல்லி முடிப்பதற்குள் நான் புரிந்துகொண்டேன். சர்க்கரை இல்லை..இது வேறு ஏதோ. அப்பாவை ஐசியுவிற்கு கூட்டிச்சென்றிருப்பார்கள்.

நான் மேலும் தாமதிக்க விரும்பவில்லை. அப்பா படுத்திருந்த அறையை நோக்கி ஓடினேன். முரளி தடுத்து இழுத்தான். நான் திமிறிக் கொண்டு ஓடினேன். அங்கே அப்பா படுத்திருந்தார். நான் அப்பாவை கூப்பிட்டேன், பதிலில்லை. கன்னத்தை தடவிக்கொடுத்தேன், எந்தவித சலனமுமில்லை. தோளை பிடித்து உலுக்கினேன் உலுக்கியதினால் ஏற்பட்டதைவிட அவரிடம் வேறு எந்த அசைவுமில்லை.

அப்பா இருக்கும் போது அந்த ரெக்கார்ட்ஸை பார்க்காத நான் அன்று பார்த்தபோது அப்பா இல்லை.

அப்பா கடைசியாக செய்த வேலை என் பெரிய அண்ணனுக்கு ஈமெயில் அனுப்பியது. அந்த ஈமெயிலை என் அண்ணன் எனக்கு ஃபார்வார்டு செய்தான். அதில் எனக்கு அன்று பெண் பார்த்தைப் பற்றியும், எல்லாம் ஒத்துப்போகும் பட்சத்தில் கல்யாணத்தை எல்லாம் வல்ல அந்த இறைவன் நல்லபடியாக நடத்திக் கொடுப்பார் என்று எழுதியிருந்தார். ஈமெயில் அனுப்பியது மாரடைப்பு வந்த அதே நாள் அப்பாவிற்கு மூச்சுத் திணறல் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு.

இந்தக் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் இங்கே அமுக்கி ஒரு ஓட்டு போடுங்க…பிடிக்கலைன்னாலும் ஓட்டு போடுங்க..நான் நீங்க திட்டினதா நினைச்சு அடுத்த கதைய ஒழுங்கா எழுதறேன்..

8 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.