Home » Featured, கற்றதும் பெற்றதும், பொது

ஜிலேபி – வாழ்க்கை (சிறு)வரலாறு

13 November 2009 5 Comments
பி.கு.: சர்க்கரை வியாதியஸ்தர்கள் இந்தப் பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது படித்த பிறகோ, ஒரு இன்சூலின் போட்டுக் கொள்ளும்படி தாழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அலுவலகத்தில் அன்று அதிகமான (அன்று மட்டும்தானா?) வேலையில்லாததால் என்னுடைய <a href=”http://www.manalkayiru.com/>”(ப)நடிக்கலாம் வாங்க”</a> கதையில் வந்த கதாநாயகனை போல் அல்லாமல், அன்று சீகிரமே வீடு வந்து சேர்ந்துவிட்டேன். இன்று என்ன எழுதலாம்/படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு வந்தபோது, பாக்கெட்டில் பொறியில் மாட்டிக்கொண்ட எலியை போல என் 4 மாசக் குழந்தை ஐஃபோன் கத்த ஐ! ஃபோனு என்று வண்டியை ஓரங்கட்டி எடுத்து பார்த்து, ப்ரியா என்று கத்த ஹலோவளாவினேன். காலையில் அலுவலகம் கிளம்பும் போது எனக்கும் அவளுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம்.
“வந்துண்டிருக்கீங்களா? ரொம்ப பசிக்கறது”
“ஹும்!, வரும்போது ஏதாவது வாங்கிண்டு வரேன். என்ன வாங்கட்டும்?”
“ஆனந்தபவன்லேர்ந்து சமோசா வாங்கிண்டு வறீங்களா?…இருக்குமா?”
“இருக்கும்…பார்க்கறேன்…சரி. இல்லைன்னா?”
”இல்லைன்னா……..நீங்களே வேற ஏதாவது நல்ல காரமா வாங்கிண்டு வாங்களேன்.”
”சரி”.
வண்டியை மறுபடி கிளப்பி, நான் திரும்ப வேண்டிய வலதுக்கு முன்னாடி வலதான வாலாஜா ரோட்டில் திரும்பி புதிதாய் திறந்திருக்கும் ஆனந்தபவனுக்கு சென்றேன். சமோசாவும் இருந்தது. கூடவே பல அயிட்டங்கள். நம் நாக்கில் எச்சிலை பக்கெட் கணக்கில் ஊறவைக்க பல ரகங்களில் ஸ்வீட் மற்றும் கார வகைகள். போதா குறைக்கு அங்கேயே சப்பு கொட்டி உண்டு கொண்டிருந்த எனதருமை சகதோர சகோதரிகளின் ஒவ்வொரு வாய் பலகாரத்துக்கும் காட்டும் முகபாவங்கள். சாதரணமாகவே என் கை கொஞ்சம் பெரியது. இதுபோல கடைகள் எல்லாம் வந்துவிட்டால், மனதில் நாட்டின் ரிச்ர்வ் பேங்கே நம் பாக்கெட்டுக்குள்ளதான் என்ற நினைப்பு.
மிக்ஸர், உருளைக்கிழங்கு சிப்ஸ், சமோசா, அந்த முறுக்கு பாக்கெட் என்று அடிக்கிக் கொண்டே வந்தேன். இவ்வளவு காரம் சாப்பிட்டால் என்ன ஆறது என்று ஸ்வீட் பக்கம் என் நாக்கு சுழல, கண்ணில் முதலில் பட்டது என்னவோ அல்வாதான். ஆனால் வாங்கத் தூண்டியது நெய்யில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஜிலேபிதான். நான் ஜிலேபி ஒரு 1/2கி போடுப்பா என்றதும், என்னை பக்கத்திலிருந்தவர் “இவன் மனுஷனே இல்லை” என்ற ரேஞ்சில் பார்த்தார். இது மாதிரியான தருணங்களுக்கென்றே தனியாக கர்ச்சிப் எடுத்து போவது வழக்கம்தானே. சர்வ சாதாரணமாக முகத்தை துடைத்துக் கொண்டு, பில்லை செட்டில் செய்துவிட்டு பல்லை காட்டிவிட்டு வெளியே வந்தேன்.
அவர் பார்த்ததின் காரணமோ என்னவோ, அந்த ஜிலேபி (ஜிலேபி ஜுரம்?) என் மனதை விட்டு அகலவேயில்லை. நாம் காலையில் கேட்ட ஒரு நல்ல பாடலை அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டிருப்போமே அதுபோல, வீடு வரும்வரை அ.வில்லை. வீடு வந்தால் தான் வேறு பாட்டுக்கள் கேட்க ஆரம்பித்துவிடுமே.
வண்டியை ஸ்டாண்டு போடும்போது, இப்படி யோசிக்க வைக்கும் இந்த பண்டத்தின் வரலாறு என்னவாக இருக்கும்? பள்ளிகூடத்து வரலாறு பாடங்களைதான் சரியாக படிக்கவில்லை, இதையாவது இன்று கூகிள் செய்து பார்க்கவேண்டும் என்று முடிவு செய்தேன். கேட்டரிங் பட்டப்பா மாமாவோட கைவண்ணத்துல ஜாங்கிரி எப்பவுமே ஸ்பெஷல்தான் என்று என் மனைவி என்றோ ஒருநாள் (வாயில்) ஜாங்கிரியும் (கையில் மீந்துபோன) நெய்யுமாக உருகிச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஜாங்கிரியா? ஜிலேபியா? அவளிடம் கேட்கத் தோன்றி கேட்காமல் விட்ட பல கேள்விகளில் இதுவும் ஒன்று.
மும்பை பயணத்தின் போதுகூட நிறைய கடைகளில் பார்த்திருக்கிறேன். பாரிஸ் கார்னரில் சாயங்கால வேளைகளில் சில தெருவோர கடைகளிலும், அகர்வாலிலும் இருக்கும். ஆனால் மும்பையிலும் அகர்வாலிலும் அதை ஜிலேபி என்று அழைத்தார்கள். வேறு சில வெளிநாடுகளில் ஜலேபி என்றும் அழைத்தார்கள். இதற்கு எத்தனை பெயர்? எந்த ஊரின் சுவை இது? இதன் ஆதாரம் என்னவாக இருக்கும்? எது சரியான பெயர்? போன்றவற்றையும் கூகிள வேண்டும்.
பட்டப்பா மாமா போடும் ஜாங்கிரியில் அவ்வளவாக பளபளப்பு இருக்காது. ஆனால் ஜிலேபி என்றழைக்கப்படும் ஜாங்கிரி பளபளவென இருக்கும். நம் நாட்டில் சர்க்கரைபாகில் மிதக்கும்  ஜாங்கிரியானது ஈரான் நாட்டில் தேனில் தவழும் என்று என் நண்பர் சரவணன் சொல்லிக் கேள்வி. அங்கே அதற்கு பெயர் ஜூலாபியாவாம். அதற்கு இன்னொரு பேர் நிலவுகிறது;ஜுலுபியா. இது சாதரணமாக ரம்ஜான் நாட்களில் ஏழைபாழைகளுக்கு இலவசமாக கொடுப்பார்களாம். ”நீங்கள் அங்கே போனீர்களா சரவணன்” என்று கேட்கத் தோன்றியது. மீசைக்கார சரவணன் கோவக்காரர் என்பதால் எழுந்த கேள்வியை எழுந்த நொடியிலேயே நல்லடக்கம் செய்து மலர்வளையம் வைத்துவிட்டேன்.
கூகிள் செய்தபோது ஹாப்சன் – ஜாப்சன் என்பவர் இந்த ஜிலேபியானது அரபியர்களின் ஜலாபியாவோ அல்லது பெர்ஷியாவின் ஜிலாபியாவோ, இரண்டில் ஏதோ ஒன்றின் தழுவல் என்கிறார். இந்தப் பேரிலிருந்து தழுவி (தேனும் நெய்யும் ஊற்றி செய்வதால்) நழுவி ஜிலேபியாகியிருக்கலாம். விக்கி இதை 13ஆம் நூற்றாண்டின் ”அல்-பாக்தாதி”யின் சமையற்குறிப்பில் இருப்பதாக தெரிவித்தது.
ஆக ஜிலேபியோ ஜாங்கிரியோ நம் நாட்டின் பண்டமல்ல. மேற்காசிய நாடுகளிலிருந்து வந்த தத்துப்பிள்ளை என்று ஒரு முடிவுக்கு வந்தேன். எங்கிருந்து வந்தாலென்ன, நெய்யோ தேனோ சொட்ட சொட்ட, தங்க நிறத்தில் மிதக்க வைத்து வாயருகில் கொண்டுவந்து நீட்டினால் நா ஊறாதாரும் உண்டோ இப்பூவலகில். இந்தப் பண்டம் துருக்கி, க்ரீஸ் போன்ற நாடுகளிலும் பிரசித்தம். எப்போதோ எந்தகாலத்திலோ அரபியர்கள் பண்டமாற்றுகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அங்கு பாஸ்போர்ட் வீசா எதுவுமில்லாமல் கஜா அண்ணன் படகில் சென்று வணிகம் செய்த கரீம்பாயோ மோத்திலால் சேட்டோ இறக்குமதி செய்திருக்கவேண்டும். சரி இன்னும் தேடுவோம்.
பி.கே.கோடேயின் ஆராய்ச்சி ஒன்று கிடைத்தது. கோடே பண்டர்கர் ஓரியண்டல் ரிசெர்ச் இன்ஸ்டிட்யூடுடன் பல வருடகாலம் பணிபுரிந்திருக்கிறார். அவர் ஜிலேபியை பற்றி குண்யகுணபோதினி என்ற சமையற்குறிப்பில் இருப்பதாக கூறுகிறார். இது கி.பி 1600க்கு முன்னதாகவே சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட ஒன்று என்றும், அந்த குறிப்பில் ஜிலேபியை செய்வதற்கான முழு குறிப்பு இருப்பதாகவும் சொல்கிறார். மேலே சொன்ன அல்-பாக்தாதியும் சரி குண்யகுணபோதினியும் சரி இரண்டிலும் செய்முறை கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறது என்கிறது கூகிள். இந்த குறிப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜிலேபியோடுவும் ஒத்துபோகிறது.
கோடே மேலும் ஜெய்னர்களின் “ப்ரியம்கர்ன்பக்கதா”வில் ஜிலேபியை பற்றி சுட்டி(டு)க்காட்டியிருப்பதாக கோடிட்டு, அது கிபி 1450 ஆண்டில் ஜினசுரா என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார். பின்னர் 17ஆம் நுற்றாண்டுகளில் ரகுனாதா என்பவரால் இதையே போஜன்குடுஹலா என்ற சமையற்குறிப்பிலும் இருப்பதாக கோடேயின் ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது. இதையெல்லாம் வைத்து பார்த்தால் ஜலேபி என்கிற ஜிலேபி என்கிற ஜாங்கிரி சுமார் 500 வருடப் பழையது எனலாம்.
இந்தியாவிலும் இதற்கு பேர் பஞ்சம் இல்லை போலும். ஜில்பி,ஜிலிபி,ஜிலாபிபாக், இம்ராட்டி, ஜஹாங்கிரி என்று பல பெயர்கள்.  இன்று பல ஐய்யங்கார் கல்யாணங்களில் ஜாங்கிரி பரிமாறப்படுகிறது. இந்தியாவில் மைதா, கோதுமை, அரிசி போன்ற பல மாவுகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஜிலேபியின் ஸ்பெஷாலிட்டி சாப்பிட்டால் சாப்பிடுவதற்கு முன்னால் ஊறியதைவிட சாப்பிட்டப்பின் அதிகமாக ஊறும். வாலி பாஷையில்:
கையில் கிடைத்த
ஜிலேபியை சாப்பிட்டு
சுவையை ரசிப்போமா
அதை விட்டுவிட்டு
கோதுமை மாவா
அரிசி மாவா
உளுத்தம்பருப்பு மாவா
என்று ஆராயலாமா?
ஜொள்ளு ஊறவைக்கும் ஜிலேபிக்கு ஏன் இந்தியாவில் ஜொள்ளுபி என்று பெயர் வரவில்லை என்று தெரியவில்லை. நான் வைத்ததாக இருக்கட்டுமே. நாளைய சந்ததியினர்களில் எவரேனும் ஒருவர் ஜிலேபியை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஈடுபட்டால் “இந்த கட்டுரை எழுதிய விஜயசாரதி, இதற்கு ஏன் ஜொள்ளுபி என்று வைக்கவில்லை என்றும் கேட்கிறார்” என்று எழுதுவார்களே.
காலையில் தோன்றிய மனஸ்தாபதுக்கு சமோசாவால் சமரசமாகி, ஜிலேபியில் இனிப்பானோம். எழுதியதை பாதி படித்துக் காட்டும்போது முகத்தை குழந்தை போல் வைத்துக் கொண்டு என் மனைவி சொன்னாள் “ஜிலேபி வேற ஜாங்கிரி வேற”. அப்ப இத்தனை நேரம் செலவழித்து படித்தது எழுதியதெல்லாம்?

மு.கு.: சர்க்கரை வியாதியஸ்தர்கள் இந்தப் பதிவை படிப்பதற்கு முன்போ அல்லது படித்த பிறகோ, ஒரு இன்சூலின் போட்டுக் கொள்ளும்படி தாழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அலுவலகத்தில் அன்று அதிகமான (அன்று மட்டும்தானா?) வேலையில்லாததால் என்னுடைய <a href=”http://www.manalkayiru.com/2009/10/you-are-the-hero/>”(ப)நடிக்கலாம் வாங்க”</a> கதையில் வந்த கதாநாயகனை போல் அல்லாமல், அன்று சீகிரமே வீடு வந்து சேர்ந்துவிட்டேன். இன்று என்ன எழுதலாம்/படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டு வந்தபோது, பாக்கெட்டில் பொறியில் மாட்டிக்கொண்ட எலியை போல என் 4 மாசக் குழந்தை ஐஃபோன் கத்த ஐ! ஃபோனு என்று வண்டியை ஓரங்கட்டி எடுத்து பார்த்து, ப்ரியா என்று கத்த ஹலோவளாவினேன். காலையில் அலுவலகம் கிளம்பும் போது எனக்கும் அவளுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம்.

“வந்துண்டிருக்கீங்களா? ரொம்ப பசிக்கறது”

“ஹும்!, வரும்போது ஏதாவது வாங்கிண்டு வரேன். என்ன வாங்கட்டும்?”

“ஆனந்தபவன்லேர்ந்து சமோசா வாங்கிண்டு வறீங்களா?…இருக்குமா?”

“இருக்கும்…பார்க்கறேன்…சரி. இல்லைன்னா?”

”இல்லைன்னா……..நீங்களே வேற ஏதாவது நல்ல காரமா வாங்கிண்டு வாங்களேன்.”

”சரி”.

வண்டியை மறுபடி கிளப்பி, நான் திரும்ப வேண்டிய வலதுக்கு முன்னாடி வலதான வாலாஜா ரோட்டில் திரும்பி புதிதாய் திறந்திருக்கும் ஆனந்தபவனுக்கு சென்றேன். சமோசாவும் இருந்தது. கூடவே பல அயிட்டங்கள். நம் நாக்கில் எச்சிலை பக்கெட் கணக்கில் ஊறவைக்க பல ரகங்களில் ஸ்வீட் மற்றும் கார வகைகள். போதா குறைக்கு அங்கேயே சப்பு கொட்டி உண்டு கொண்டிருந்த எனதருமை சகதோர சகோதரிகளின் ஒவ்வொரு வாய் பலகாரத்துக்கும் காட்டும் முகபாவங்கள். சாதரணமாகவே என் கை கொஞ்சம் பெரியது. இதுபோல கடைகள் எல்லாம் வந்துவிட்டால், மனதில் நாட்டின் ரிச்ர்வ் பேங்க்கே நம் பாக்கெட்டுக்குள்ளதான் என்ற நினைப்பு.

மிக்ஸர், உருளைக்கிழங்கு சிப்ஸ், சமோசா, அந்த முறுக்கு பாக்கெட் என்று அடிக்கிக் கொண்டே வந்தேன். இவ்வளவு காரம் சாப்பிட்டால் என்ன ஆறது என்று ஸ்வீட் பக்கம் என் நாக்கு சுழல, கண்ணில் முதலில் பட்டது என்னவோ அல்வாதான். ஆனால் வாங்கத் தூண்டியது நெய்யில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஜிலேபிதான். நான் ஜிலேபி ஒரு 1/2கி போடுப்பா என்றதும், என்னை பக்கத்திலிருந்தவர் “இவன் மனுஷனே இல்லை” என்ற ரேஞ்சில் பார்த்தார். இது மாதிரியான தருணங்களுக்கென்றே தனியாக கர்ச்சிப் எடுத்து போவது வழக்கம்தானே. சர்வ சாதாரணமாக முகத்தை துடைத்துக் கொண்டு, பில்லை செட்டில் செய்துவிட்டு பல்லை காட்டிவிட்டு வெளியே வந்தேன்.

அவர் பார்த்ததின் காரணமோ என்னவோ, அந்த ஜிலேபி (ஜிலேபி ஜுரம்?) என் மனதை விட்டு அகலவேயில்லை. நாம் காலையில் கேட்ட ஒரு நல்ல பாடலை அன்று முழுவதும் முணுமுணுத்துக் கொண்டிருப்போமே அதுபோல, வீடு வரும்வரை அ.வில்லை. வீடு வந்தால் தான் வேறு பாட்டுக்கள் கேட்க ஆரம்பித்துவிடுமே.

வண்டியை ஸ்டாண்டு போடும்போது, இப்படி யோசிக்க வைக்கும் இந்த பண்டத்தின் வரலாறு என்னவாக இருக்கும்? பள்ளிகூடத்து வரலாறு பாடங்களைதான் சரியாக படிக்கவில்லை, இதையாவது இன்று கூகிள் செய்து பார்க்கவேண்டும் என்று முடிவு செய்தேன். கேட்டரிங் பட்டப்பா மாமாவோட கைவண்ணத்துல ஜாங்கிரி எப்பவுமே ஸ்பெஷல்தான் என்று என் மனைவி என்றோ ஒருநாள் (வாயில்) ஜாங்கிரியும் (கையில் மீந்துபோன) நெய்யுமாக உருகிச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஜாங்கிரியா? ஜிலேபியா? அவளிடம் கேட்கத் தோன்றி கேட்காமல் விட்ட பல கேள்விகளில் இதுவும் ஒன்று.

மும்பை பயணத்தின் போதுகூட நிறைய கடைகளில் பார்த்திருக்கிறேன். பாரிஸ் கார்னரில் சாயங்கால வேளைகளில் சில தெருவோர கடைகளிலும், அகர்வாலிலும் இருக்கும். ஆனால் மும்பையிலும் அகர்வாலிலும் அதை ஜிலேபி என்று அழைத்தார்கள். வேறு சில வெளிநாடுகளில் ஜலேபி என்றும் அழைத்தார்கள். இதற்கு எத்தனை பெயர்? எந்த ஊரின் சுவை இது? இதன் ஆதாரம் என்னவாக இருக்கும்? எது சரியான பெயர்? போன்றவற்றையும் கூகிள வேண்டும்.

பட்டப்பா மாமா போடும் ஜாங்கிரியில் அவ்வளவாக பளபளப்பு இருக்காது. ஆனால் ஜிலேபி என்றழைக்கப்படும் ஜாங்கிரி பளபளவென இருக்கும். நம் நாட்டில் சர்க்கரைபாகில் மிதக்கும்  ஜாங்கிரியானது ஈரான் நாட்டில் தேனில் தவழும் என்று என் நண்பர் சரவணன் சொல்லிக் கேள்வி. அங்கே அதற்கு பெயர் ஜூலாபியாவாம். அதற்கு இன்னொரு பேர் நிலவுகிறது;ஜுலுபியா. இது சாதரணமாக ரம்ஜான் நாட்களில் ஏழைபாழைகளுக்கு இலவசமாக கொடுப்பார்களாம். ”நீங்கள் அங்கே போனீர்களா சரவணன்” என்று கேட்கத் தோன்றியது. மீசைக்கார சரவணன் கோவக்காரர் என்பதால் எழுந்த கேள்வியை எழுந்த நொடியிலேயே நல்லடக்கம் செய்து மலர்வளையம் வைத்துவிட்டேன்.

கூகிள் செய்தபோது ஹாப்சன் – ஜாப்சன் என்பவர் இந்த ஜிலேபியானது அரபியர்களின் ஜலாபியாவோ அல்லது பெர்ஷியாவின் ஜிலாபியாவோ, இரண்டில் ஏதோ ஒன்றின் தழுவல் என்கிறார். இந்தப் பேரிலிருந்து தழுவி (தேனும் நெய்யும் ஊற்றி செய்வதால்) நழுவி ஜிலேபியாகியிருக்கலாம். விக்கி இதை 13ஆம் நூற்றாண்டின் ”அல்-பாக்தாதி”யின் சமையற்குறிப்பில் இருப்பதாக தெரிவித்தது.

ஆக ஜிலேபியோ ஜாங்கிரியோ நம் நாட்டின் பண்டமல்ல. மேற்காசிய நாடுகளிலிருந்து வந்த தத்துப்பிள்ளை என்று ஒரு முடிவுக்கு வந்தேன். எங்கிருந்து வந்தாலென்ன, நெய்யோ தேனோ சொட்ட சொட்ட, தங்க நிறத்தில் மிதக்க வைத்து வாயருகில் கொண்டுவந்து நீட்டினால் நா ஊறாதாரும் உண்டோ இப்பூவலகில். இந்தப் பண்டம் துருக்கி, க்ரீஸ் போன்ற நாடுகளிலும் பிரசித்தம். எப்போதோ எந்தகாலத்திலோ அரபியர்கள் பண்டமாற்றுகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அங்கு பாஸ்போர்ட் வீசா எதுவுமில்லாமல் கஜா அண்ணன் படகில் சென்று வணிகம் செய்த கரீம்பாயோ மோத்திலால் சேட்டோ இறக்குமதி செய்திருக்கவேண்டும். சரி இன்னும் தேடுவோம்.

பி.கே.கோடேயின் ஆராய்ச்சி ஒன்று கிடைத்தது. கோடே பண்டர்கர் ஓரியண்டல் ரிசெர்ச் இன்ஸ்டிட்யூடுடன் பல வருடகாலம் பணிபுரிந்திருக்கிறார். அவர் ஜிலேபியை பற்றி குண்யகுணபோதினி என்ற சமையற்குறிப்பில் இருப்பதாக கூறுகிறார். இது கி.பி 1600க்கு முன்னதாகவே சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட ஒன்று என்றும், அந்த குறிப்பில் ஜிலேபியை செய்வதற்கான முழு குறிப்பு இருப்பதாகவும் சொல்கிறார். மேலே சொன்ன அல்-பாக்தாதியும் சரி குண்யகுணபோதினியும் சரி இரண்டிலும் செய்முறை கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறது என்கிறது கூகிள். இந்த குறிப்புகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜிலேபியோடுவும் ஒத்துபோகிறது.

கோடே மேலும் ஜெய்னர்களின் “ப்ரியம்கர்ன்பக்கதா”வில் ஜிலேபியை பற்றி சுட்டி(டு)க்காட்டியிருப்பதாக கோடிட்டு, அது கிபி 1450 ஆண்டில் ஜினசுரா என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார். பின்னர் 17ஆம் நுற்றாண்டுகளில் ரகுனாதா என்பவரால் இதையே போஜன்குடுஹலா என்ற சமையற்குறிப்பிலும் இருப்பதாக கோடேயின் ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது. இதையெல்லாம் வைத்து பார்த்தால் ஜலேபி என்கிற ஜிலேபி என்கிற ஜாங்கிரி சுமார் 500 வருடப் பழையது எனலாம்.

இந்தியாவிலும் இதற்கு பேர் பஞ்சம் இல்லை போலும். ஜில்பி,ஜிலிபி,ஜிலாபிபாக், இம்ராட்டி, ஜஹாங்கிரி என்று பல பெயர்கள்.  இன்று பல ஐய்யங்கார் கல்யாணங்களில் ஜாங்கிரி பரிமாறப்படுகிறது. இந்தியாவில் மைதா, கோதுமை, அரிசி போன்ற பல மாவுகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஜிலேபியின் ஸ்பெஷாலிட்டி சாப்பிட்டால் சாப்பிடுவதற்கு முன்னால் ஊறியதைவிட சாப்பிட்டப்பின் அதிகமாக ஊறும். வாலி பாஷையில்:

“கையில் கிடைத்த
ஜிலேபியை சாப்பிட்டு
சுவையை ரசிப்போமா
அதை விட்டுவிட்டு
கோதுமை மாவா
அரிசி மாவா
உளுத்தம்பருப்பு மாவா
என்று ஆராயலாமா?”

ஜொள்ளு ஊறவைக்கும் ஜிலேபிக்கு ஏன் இந்தியாவில் ஜொள்ளுபி என்று பெயர் வரவில்லை என்று தெரியவில்லை. நான் வைத்ததாக இருக்கட்டுமே. நாளைய சந்ததியினர்களில் எவரேனும் ஒருவர் ஜிலேபியை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஈடுபட்டால் “இந்த கட்டுரை எழுதிய விஜயசாரதி, இதற்கு ஏன் ஜொள்ளுபி என்று வைக்கவில்லை என்றும் கேட்கிறார்” என்று எழுதுவார்களே.

காலையில் தோன்றிய மனஸ்தாபதுக்கு சமோசாவால் சமரசமாகி, ஜிலேபியில் இனிப்பானோம். எழுதியதை பாதி படித்துக் காட்டும்போது முகத்தை குழந்தை போல் வைத்துக் கொண்டு என் மனைவி சொன்னாள் “ஜிலேபி வேற ஜாங்கிரி வேற”. அப்ப இத்தனை நேரம் செலவழித்து படித்தது எழுதியதெல்லாம்?

ஜிலேபி / ஜாங்கிரி செய்முறையை தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்குங்கள்

இந்த ஜிலேபி உங்களுக்கு பிடித்திருந்தால், இங்கே க்ளிக்கி ஒரு வோட்டு போடுங்கள். போடலைன்னா ஊறும் வாய்க்கு பிற்காலத்தில் ஜிலேபி கிடைக்காமல் திண்டாடுவீர்கள்.

5 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.