Home » அனுபவம்

சுமைதாங்கி

22 November 2009 17 Comments
நர்ஸ் நான் உள்ள இருக்கலாமா?
நீங்க அவங்க ஹஸ்பண்டா? அப்படீன்னா இருக்கலாம்.
”அப்பாடா ஹஸ்(பெ)பண்டா இருந்ததற்கு தகுந்த சன்மானம் இங்கதான் கிடைச்சிருக்கு” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.
அங்கு என் மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. என் அம்மாவும் அவள் அம்மாவும் என்கூடவே உள்ளே வர முற்பட, நர்ஸ் தடுத்தார். வாயிற்கதவும் என் மனைவி படுத்திருந்த படுக்கையும் பக்கத்திலேயே இருந்ததால் என் மனைவு அதை கவனித்தாள்.
உள்ளே சென்றதும் ”வேணும்னா அம்மாவை இருக்கச் சொல்லுங்கோ. எங்கம்மா என்னையும் சேர்த்து பயமுறுத்திடுவா. நீங்க வேணும்னா போய் குளிச்சிட்டு எதாவது சாப்பிட்டு வாங்களேன்” என்ற போது சத்தியமாக நான் புல்லரித்துப் போனேன். அந்த வலியிலும் என்னைப் பற்றின அவளின் கவலைகள் என்னை நீரில் கலந்த சர்க்கரையை விட மிகவேகமாக கரைத்துவிட்டது. மனைவியாகப்பட்டவள் அடுத்த தாய் என்பது எவ்வளவு உண்மை என்று உணர்ந்த தருணம் அது.
”பரவாயில்லை ப்ரியா, எனக்கு பசிக்கல. இப்பத்தான் ஒரு காபி குடிச்சேன்”.
முதல் பிரசவம் என்பது பெண்ணிற்கு மறுஜென்மம் என்று படித்திருக்கிறேன். என் நண்பன் தன் மனைவியின் முதல் பிரசவம் சுகமாக அமையவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறான். என்றோ இணையத்தில் ஒரு கவிதை படித்த ஞாபகம்.
தானே இறைவனாகித்
தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
மரணத்தைத் தொட்டு,
ஜனனத்தைத் தந்திடும் சாகஸம்!! (நன்றி ஜேகே சந்தர்).
அதற்குள் நர்ஸ் உள்ளே வந்து இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் வேண்டுமென்றால் நான் போய்விட்டு வர நேரம் இருக்கும் என்றும் அறிவுருத்தினார். நான் அடக்கமாக அவரின் அறிவுரையை மறுத்தேன். நர்ஸ் என்றாலே மேரியோ அல்லது ஃபிளோமினாவாகவோவாகத்தான் இருக்கவேண்டும் என்ற என் நீண்டநாள் அபிப்ராயத்தை மாற்றியவர். தன் பெயர் ”புவனேஸ்வரி” என்றார்.
என் மனைவியின் அருகில் சென்றேன். அவள் என் கையை பிடித்தாள். அவளின் வலியின் பத்தில் ஒரு மடங்கு என் கையைப் பிடித்து அழுத்தியதில் உணர்ந்தேன். அவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு, அவளுக்காக, எனக்காக, என் குடும்பத்திற்கு வாரிசு தரவேண்டி பொறுத்துக் கொண்டிருந்தாள். வெளியே வரப்போகும் அந்த உயிர் தன் தாய் பட்ட இந்த வலியை உணர பல வருடங்களாகலாம்; உணராமலேயும் போகலாம். பெண் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது நிச்சயம் தெரிந்து கொள்ளும்; ஆண் என்றால் தன் மனைவி பெற்றுக்கொள்ளும் அருகில் இருந்தால் மட்டுமே தெரிய வாய்ப்பு. அதுவரை சொல்லித் தெரியவைக்கக் கூடிய வலியல்ல அது.
ஒருமுறை என் சிறுநீரகத்தில் கல் சிக்கிக் கொண்டு நான்கு நாட்கள் வலியால் துடித்தேன். மருத்துவரிடம் சென்ற போது, கல் சிறுநீர்ப்பையில் வந்திறங்கியிருப்பதாகவும், இந்த வலி பிரசவ வலி போன்றது, திடீரென்று வலிக்கும், ஒரு சில நிலையில் படுத்தால் வலிக்காது என்றார். நான்கு நாட்கள்தான். அதுவும் வலி நிவராணி ஏதும் எடுத்துக் கொண்டால், வலி குறைய தூங்கிவிடலாம். அதற்கே நான் அப்படி துடித்தேன். சில நேரங்களில் அழுதேவிட்டேன். ஒரு நான்கு நாள் வலிக்கே நான் அடித்த கூத்து கொஞ்சநஞ்சமில்லை. இன்னும் அவர்களைப்போல் பத்து மாதமெல்லாம் அனுபவித்தால், குதிக்கும் குதி பூமி தாங்கியிருக்காது.
நான் பலருக்காக, பலமுறை மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறேன். அன்றுதான் முதல் முறையாக என் மனைவிக்காக, அவள் பெற்றெடுக்கப்போகும் எங்கள் குழந்தைக்காக. அந்த ஹாஸ்பிடல் வாசம் முதல் முறையாக பிடித்தது. முதல் முறையாக என் ஒரு சில நிமிஷ சந்தோஷத்துக்காக இரண்டு ஜீவன் தவிப்பதை பார்த்து என்னை நானே கடிந்துகொண்டேன். அதே சமயத்தில் அப்பாவாகும் அந்த இனம்புரியாத சந்தோஷத்தை அனுபவித்தேன்.
அந்த சந்தோஷம் மற்றவைகளை போன்றதல்ல. நண்பர்களுடன் சிரித்து பேசி கும்மாளம் அடிக்கும்போது வரும் சந்தோஷமல்ல. பரிட்சையில் தேறி குதித்து ஆட்டம் போட்டு காட்டும் சந்தோஷமல்ல. இது எல்லாவறிற்கும் மேல். என் அம்மாவை முதல் முறையாக “மா” என்று அழைத்தபோது அவள் அனுபவித்திருப்பாளே அந்த சந்தோஷத்தைப் போல. மற்றவர்களிடத்தில் பெருமை அடித்துக் கொள்ளும் சந்தோஷம். அப்பாவாகப் போகிறேன். இன்னும் இரண்டு மணி நேரத்தில் நான் அப்பா.
என் மனைவியின் கையை பிடித்துக் கொண்டிருக்கும் போது டாக்டர் வந்தார். ஏதோ செக் பண்ணவேண்டி என்னை வெளியே இருக்கச் சொன்னார். செய்தேன். அவர் (செர்விகல் டைலேஷன்) கருப்பைக் கழுத்தின் விரிவை அளந்திருப்பார் என்று யூகித்தேன். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு பெயர் செர்விக்ஸ் என்று படித்திருக்கிறேன். பிரசவ வலி தொடங்கி முதலில் இந்த செர்விக்ஸ் விரிவடையவேண்டும். 10 செண்டிமீட்டர் வரை கர்ப்பப்பையின் வாய் திறக்கவேண்டும். ஆச்சர்யமான விஷ்யம் என்னவென்றால், செர்விக்ஸ் வாய் விரிய விரிய அதன் நீளம் குறையும்.
நான் கடவுளை ப்ரார்த்தித்தேன். பெருமாளே! சீக்கிரம் செர்விக்ஸ் போதிய அளவு திறக்க வேண்டும், அதற்கு நீதான் கண் திறக்க வேண்டும். ப்ரியா வலியில் துடிக்கிறாள். கடவுளே!.
நேற்று பிறந்து வாழ ஆரம்பித்தது போலத்தான் இருக்கிறது. காலம் வெகு வேகமாக சென்றுவிட்டது. அந்த வேகத்தை நம்மால் கணக்கிடவும் முடியாது, எதை வைத்தும் உதாரணம் காட்டமுடியாது. அது அதன் வேகத்தில் செல்வது. அதற்கு அணை போடவும் முடியாது. நான் இன்னும் கொஞ்ச நாள் என் பள்ளி பருவத்தை நீட்டித்துக் கொள்கிறேன் என்று கேட்கவும் முடியாது.
என் குழந்தை பருவம் முழுவதுமாக மறந்துவிட்டது. பள்ளிப் பருவம் முழுவதுமாக ஞாபகமில்லை. கல்லூரி அனுபவிக்கவில்லை. பேச்சிலர் காலம் அவ்வளவு இனியதாக இருக்கவில்லை அதே சமயத்தில் கசப்பாகவுமில்லை. நினைவில் நின்றவைகள் கொஞ்சமே. இருந்தும் அனைத்தையும் கடந்துவிட்டேன். இன்று அப்பாவாகும் சந்தோஷத் துடிப்பிலிருந்தேன். அந்தத் தருணத்தில் நான் பிறக்கும் தருவாயில் என் அப்பா எப்படி இருந்திருப்பாரோ அதே ஆனந்த நிலையை எய்தியிருந்தேன். ஒரு சிறு வித்தியாசம் எனக்கு இது முதல், என் அப்பாவுக்கு நான் ஆறாவது. யோசித்துக் கொண்டிருந்த போது டாக்டர் வெளியே வந்தார். இன்னும் வலி அதிகமாக ஊசிப் போட்டிருப்பதாகவும், நேரம் எடுக்கும் என்றும் கூறினார். அவரும் நர்ஸ் கொடுத்த அதே அறிவுரையை கொடுத்தார். நான் நர்ஸுக்கு சொன்ன அதே பதிலை சொன்னேன். சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். அங்கே என் மனைவி இப்போது ஏற்றிய மருந்தால் இன்னும் வலி அதிகமாகி முனகிக் கொண்டிருந்தாள்.
திரும்பிப் படுக்கக் கூடாது. வயிற்றை தொடக்கூடாது. சுருங்கச் சொன்னால், அவளுக்கு அப்போது இடப்பட்டிருந்த பணி, வலியை அனுபவிக்க வேண்டியது மட்டுமே. அவள் செய்து கொண்டிருந்தாள். எனக்கு தாங்கவில்லை.
”ரொம்ப வலிக்குது. தாங்கமுடியல”.
“பொறுத்துக்கோ ப்ரியா இன்னும் கொஞ்ச நேரந்தானே. குழந்தைய பார்த்தா பட்ட வலியெல்லாம் பஞ்சா பறந்திடும்” என்று நான் தத்துவம் பேசினேன். ஏன் வராது? இது மனித இயல்பு. இன்னொருத்தர் வலியை நாம் புரிந்துகொள்ளவே முடியாது. சினிமா டயலாகில் மட்டுமே முடியும்.
“அம்மா” என்று அவள் அனற்றியபோது எனக்கு அந்த வார்த்தையின் மீது இன்னும் பன்மடங்கு கூடியது.
என்னால் முடிந்தவரை தைரியம் ஊட்டினேன் அவளுக்கு. முடிந்த அளவிற்கு நகைச்சுவையாக பேசி அவள் வலியை உணர்வதை முடிந்தவரை கட்டுப்படுத்தினேன். என்னால் இவ்வளவு தான் முடியும். வலியை பகிர்ந்து கொள்ளமுடியாது.
பிரசவ வலி என்பது சாதாரண வலியல்ல. வலி வந்தது, குழந்தை பிறந்தது என்று முடிந்துவிடாது. நார்மல் பிரசவத்திற்கு 12 மணி நேரத்திற்கு மேல் ஆகும். சிசேரியன் என்றாலும் நார்மலாக குழந்தை வரக்கூடிய நிலையில் இருக்கிறதா, செர்விக்ஸ் போதிய அளவி திறந்திருக்கிறதா என்று பார்த்து இல்லை என்றால் மட்டுமே சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. முதல் பிரசவம் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஒரி செண்டிமீட்டர் அளவே செர்விக்ஸ் விரியும். என் மனைவிக்கு வலி வராததால் இண்ஜக்‌ஷன் கொடுத்து வலியை உண்டாக்கியிருந்தார்கள். என்றோ இணையத்தில் ஒரு கவிதை படித்த ஞாபகம்.
தானே இறைவனாகித்
தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
மரணத்தைத் தொட்டு,
ஜனனத்தைத் தந்திடும் சாகஸம்!! (நன்றி ஜேகே சந்தர்)
நீங்க வேணும்னா போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வாங்க”
”இல்ல ப்ரியா நீ கவலைப்படாதே..நான் பாத்துக்கறேன்”
”அதான் அம்மா இருக்காளே, அம்மா இருப்பா”
“வேணாம், நான் இருக்கேன்”
அதற்கு மேல் என்னுடன் தொடர்ந்து பேச அவள் வலி அவளை அனுமதிக்கவில்லை. நர்ஸ் டாக்டருடன் உள்ளே வந்தார்.
”கொஞ்சம் அப்படி நில்லுங்க சார்”
“ஓகே” என்று தள்ளி நின்றேன். திரையிடப்பட்டது. ஒன்று..இரண்டு…மூன்று…நா….நான்காவது நிமிடத்தில் திரை விலகியது. நர்ஸ் விருட்டென்று வெளியே சென்றாள். நான் அதே வேகத்தில் என் மனைவியின் அருகில் சென்றேன்.
இன்னொரு இண்ஜக்‌ஷன். வலியை இன்னும் அதிகப்படுத்த, அதன் மூலமாக செர்விக்ஸின் அகலத்தை அதிகப்படுத்த. என் மனைவி முன்பைவிட இப்போது அதிகமாக துடிக்க ஆரம்பித்தாள். என்னால் அந்த வலியை உடல் ரீதியாக உணரமுடியாவிட்டாலும், மன ரீதியாக முழுவதுமாக உணர்ந்தேன். டாக்டர் வெளியே வந்தார். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்று விளக்கினார். நான் என் மனைவியின் அருகில் சென்றேன்.
”ரொம்ப வலிக்குதா”. நான் என் வாழ்க்கையில் கேட்ட கேள்விகளில் மடத்தனமான கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
துடித்துக்கொண்டிருப்பவளை பார்த்து வலிக்குதா என்பதா?
மீண்டும் ஒரு முறை அவள் என்னை போய் குளித்துவிட்டு வரச் சொன்னாள். நான் திரும்ப கேட்டேன்:
“என்ன என்மேல அவ்வளவு ஸ்மெல்லா வருது. குளிச்சிட்டு வா, குளிச்சிட்டு வான்னு சொல்லறியே”.
நான் புரிந்துகொண்டதை நினைத்து சிரித்தாளா அல்லது ஜோக் அடித்ததாக நினைத்து சிரித்தாளா என்று தெரியவில்லை. ஆனால் அவள் சிரித்தாள் அந்த வலியிலும், நான் அழுதேன் கண்ணில் நீர் மல்க அவள் வலியை பார்த்து தாங்கமாட்டாமல்.

”நர்ஸ் நான் உள்ள இருக்கலாமா?”

”நீங்க அவங்க ஹஸ்பண்டா? அப்படீன்னா இருக்கலாம்”

”அப்பாடா ஹஸ்(பெ)பண்டா இருந்ததற்கு தகுந்த சன்மானம் இங்கதான் கிடைச்சிருக்கு” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.

அங்கு என் மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. என் அம்மாவும் அவள் அம்மாவும் என்கூடவே உள்ளே வர முற்பட, நர்ஸ் தடுத்தார். வாயிற்கதவும் என் மனைவி படுத்திருந்த படுக்கையும் பக்கத்திலேயே இருந்ததால் என் மனைவு அதை கவனித்தாள்.

உள்ளே சென்றதும் ”வேணும்னா அம்மாவை இருக்கச் சொல்லுங்கோ. எங்கம்மா என்னையும் சேர்த்து பயமுறுத்திடுவா. நீங்க வேணும்னா போய் குளிச்சிட்டு எதாவது சாப்பிட்டு வாங்களேன்” என்ற போது சத்தியமாக நான் புல்லரித்துப் போனேன். அந்த வலியிலும் என்னைப் பற்றின அவளின் கவலைகள் என்னை நீரில் கலந்த சர்க்கரையை விட மிகவேகமாக கரைத்துவிட்டது. மனைவியாகப்பட்டவள் அடுத்த தாய் என்பது எவ்வளவு உண்மை என்று உணர்ந்த தருணம் அது.

”பரவாயில்லை ப்ரியா, எனக்கு பசிக்கல. இப்பத்தான் ஒரு காபி குடிச்சேன்”.

முதல் பிரசவம் என்பது பெண்ணிற்கு மறுஜென்மம் என்று படித்திருக்கிறேன். என் நண்பன் தன் மனைவியின் முதல் பிரசவம் சுகமாக அமையவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறான். என்றோ இணையத்தில் ஒரு கவிதை படித்த ஞாபகம்.

தானே இறைவனாகித்
தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
மரணத்தைத் தொட்டு,
ஜனனத்தைத் தந்திடும் சாகஸம்!! (நன்றி ஜேகே சந்தர்).

அதற்குள் நர்ஸ் உள்ளே வந்து இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் வேண்டுமென்றால் நான் போய்விட்டு வர நேரம் இருக்கும் என்றும் அறிவுருத்தினார். நான் அடக்கமாக அவரின் அறிவுரையை மறுத்தேன். நர்ஸ் என்றாலே மேரியோ அல்லது ஃபிளோமினாவாகவோவாகத்தான் இருக்கவேண்டும் என்ற என் நீண்டநாள் அபிப்ராயத்தை மாற்றியவர். தன் பெயர் ”புவனேஸ்வரி” என்றார்.

என் மனைவியின் அருகில் சென்றேன். அவள் என் கையை பிடித்தாள். அவளின் வலியின் பத்தில் ஒரு மடங்கு என் கையைப் பிடித்து அழுத்தியதில் உணர்ந்தேன். அவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு, அவளுக்காக, எனக்காக, என் குடும்பத்திற்கு வாரிசு தரவேண்டி பொறுத்துக் கொண்டிருந்தாள். வெளியே வரப்போகும் அந்த உயிர் தன் தாய் பட்ட இந்த வலியை உணர பல வருடங்களாகலாம்; உணராமலேயும் போகலாம். பெண் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளும்போது நிச்சயம் தெரிந்து கொள்ளும்; ஆண் என்றால் தன் மனைவி பெற்றுக்கொள்ளும் அருகில் இருந்தால் மட்டுமே தெரிய வாய்ப்பு. அதுவரை சொல்லித் தெரியவைக்கக் கூடிய வலியல்ல அது.

ஒருமுறை என் சிறுநீரகத்தில் கல் சிக்கிக் கொண்டு நான்கு நாட்கள் வலியால் துடித்தேன். மருத்துவரிடம் சென்ற போது, கல் சிறுநீர்ப்பையில் வந்திறங்கியிருப்பதாகவும், இந்த வலி பிரசவ வலி போன்றது, திடீரென்று வலிக்கும், ஒரு சில நிலையில் படுத்தால் வலிக்காது என்றார். நான்கு நாட்கள்தான். அதுவும் வலி நிவராணி ஏதும் எடுத்துக் கொண்டால், வலி குறைய தூங்கிவிடலாம். அதற்கே நான் அப்படி துடித்தேன். சில நேரங்களில் அழுதேவிட்டேன். ஒரு நான்கு நாள் வலிக்கே நான் அடித்த கூத்து கொஞ்சநஞ்சமில்லை. இன்னும் அவர்களைப்போல் பத்து மாதமெல்லாம் அனுபவித்தால், குதிக்கும் குதி பூமி தாங்கியிருக்காது.

நான் பலருக்காக, பலமுறை மருத்துவமனைக்கு சென்று வந்திருக்கிறேன். அன்றுதான் முதல் முறையாக என் மனைவிக்காக, அவள் பெற்றெடுக்கப்போகும் எங்கள் குழந்தைக்காக. அந்த ஹாஸ்பிடல் வாசம் முதல் முறையாக பிடித்தது. முதல் முறையாக என் ஒரு சில நிமிஷ சந்தோஷத்துக்காக இரண்டு ஜீவன் தவிப்பதை பார்த்து என்னை நானே கடிந்துகொண்டேன். அதே சமயத்தில் அப்பாவாகும் அந்த இனம்புரியாத சந்தோஷத்தை அனுபவித்தேன்.

அந்த சந்தோஷம் மற்றவைகளை போன்றதல்ல. நண்பர்களுடன் சிரித்து பேசி கும்மாளம் அடிக்கும்போது வரும் சந்தோஷமல்ல. பரிட்சையில் தேறி குதித்து ஆட்டம் போட்டு காட்டும் சந்தோஷமல்ல. இது எல்லாவறிற்கும் மேல். என் அம்மாவை முதல் முறையாக “மா” என்று அழைத்தபோது அவள் அனுபவித்திருப்பாளே அந்த சந்தோஷத்தைப் போல. மற்றவர்களிடத்தில் பெருமை அடித்துக் கொள்ளும் சந்தோஷம். அப்பாவாகப் போகிறேன். இன்னும் இரண்டு மணி நேரத்தில் நான் அப்பா.

என் மனைவியின் கையை பிடித்துக் கொண்டிருக்கும் போது டாக்டர் வந்தார். ஏதோ செக் பண்ணவேண்டி என்னை வெளியே இருக்கச் சொன்னார். செய்தேன். அவர் (செர்விகல் டைலேஷன்) கருப்பைக் கழுத்தின் விரிவை அளந்திருப்பார் என்று யூகித்தேன். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு பெயர் செர்விக்ஸ் என்று படித்திருக்கிறேன். பிரசவ வலி தொடங்கி முதலில் இந்த செர்விக்ஸ் விரிவடையவேண்டும். 10 செண்டிமீட்டர் வரை கர்ப்பப்பையின் வாய் திறக்கவேண்டும். ஆச்சர்யமான விஷ்யம் என்னவென்றால், செர்விக்ஸ் வாய் விரிய விரிய அதன் நீளம் குறையும்.

நான் கடவுளை ப்ரார்த்தித்தேன். பெருமாளே! சீக்கிரம் செர்விக்ஸ் போதிய அளவு திறக்க வேண்டும், அதற்கு நீதான் கண் திறக்க வேண்டும். ப்ரியா வலியில் துடிக்கிறாள். கடவுளே!.

நேற்று பிறந்து வாழ ஆரம்பித்தது போலத்தான் இருக்கிறது. காலம் வெகு வேகமாக சென்றுவிட்டது. அந்த வேகத்தை நம்மால் கணக்கிடவும் முடியாது, எதை வைத்தும் உதாரணம் காட்டமுடியாது. அது அதன் வேகத்தில் செல்வது. அதற்கு அணை போடவும் முடியாது. நான் இன்னும் கொஞ்ச நாள் என் பள்ளி பருவத்தை நீட்டித்துக் கொள்கிறேன் என்று கேட்கவும் முடியாது.

என் குழந்தை பருவம் முழுவதுமாக மறந்துவிட்டது. பள்ளிப் பருவம் முழுவதுமாக ஞாபகமில்லை. கல்லூரி அனுபவிக்கவில்லை. பேச்சிலர் காலம் அவ்வளவு இனியதாக இருக்கவில்லை அதே சமயத்தில் கசப்பாகவுமில்லை. நினைவில் நின்றவைகள் கொஞ்சமே. இருந்தும் அனைத்தையும் கடந்துவிட்டேன். இன்று அப்பாவாகும் சந்தோஷத் துடிப்பிலிருந்தேன். அந்தத் தருணத்தில் நான் பிறக்கும் தருவாயில் என் அப்பா எப்படி இருந்திருப்பாரோ அதே ஆனந்த நிலையை எய்தியிருந்தேன். ஒரு சிறு வித்தியாசம் எனக்கு இது முதல், என் அப்பாவுக்கு நான் ஆறாவது. யோசித்துக் கொண்டிருந்த போது டாக்டர் வெளியே வந்தார். இன்னும் வலி அதிகமாக ஊசிப் போட்டிருப்பதாகவும், நேரம் எடுக்கும் என்றும் கூறினார். அவரும் நர்ஸ் கொடுத்த அதே அறிவுரையை கொடுத்தார். நான் நர்ஸுக்கு சொன்ன அதே பதிலை சொன்னேன். சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். அங்கே என் மனைவி இப்போது ஏற்றிய மருந்தால் இன்னும் வலி அதிகமாகி முனகிக் கொண்டிருந்தாள்.

திரும்பிப் படுக்கக் கூடாது. வயிற்றை தொடக்கூடாது. சுருங்கச் சொன்னால், அவளுக்கு அப்போது இடப்பட்டிருந்த பணி, வலியை அனுபவிக்க வேண்டியது மட்டுமே. அவள் செய்து கொண்டிருந்தாள். எனக்கு தாங்கவில்லை.

”ரொம்ப வலிக்குது. தாங்கமுடியல”.

“பொறுத்துக்கோ ப்ரியா இன்னும் கொஞ்ச நேரந்தானே. குழந்தைய பார்த்தா பட்ட வலியெல்லாம் பஞ்சா பறந்திடும்” என்று நான் தத்துவம் பேசினேன். ஏன் வராது? இது மனித இயல்பு. இன்னொருத்தர் வலியை நாம் புரிந்துகொள்ளவே முடியாது. சினிமா டயலாகில் மட்டுமே முடியும்.

“அம்மா” என்று அவள் அனற்றியபோது எனக்கு அந்த வார்த்தையின் மீது இன்னும் பன்மடங்கு கூடியது.

என்னால் முடிந்தவரை தைரியம் ஊட்டினேன் அவளுக்கு. முடிந்த அளவிற்கு நகைச்சுவையாக பேசி அவள் வலியை உணர்வதை முடிந்தவரை கட்டுப்படுத்தினேன். என்னால் இவ்வளவு தான் முடியும். வலியை பகிர்ந்து கொள்ளமுடியாது.

பிரசவ வலி என்பது சாதாரண வலியல்ல. வலி வந்தது, குழந்தை பிறந்தது என்று முடிந்துவிடாது. நார்மல் பிரசவத்திற்கு 12 மணி நேரத்திற்கு மேல் ஆகும். சிசேரியன் என்றாலும் நார்மலாக குழந்தை வரக்கூடிய நிலையில் இருக்கிறதா, செர்விக்ஸ் போதிய அளவி திறந்திருக்கிறதா என்று பார்த்து இல்லை என்றால் மட்டுமே சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. முதல் பிரசவம் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஒரி செண்டிமீட்டர் அளவே செர்விக்ஸ் விரியும். என் மனைவிக்கு வலி வராததால் இண்ஜக்‌ஷன் கொடுத்து வலியை உண்டாக்கியிருந்தார்கள்.

”நீங்க வேணும்னா போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வாங்க”

”இல்ல ப்ரியா நீ கவலைப்படாதே..நான் பாத்துக்கறேன்”

”அதான் அம்மா இருக்காளே, அம்மா இருப்பா”

“வேணாம், நான் இருக்கேன்”

அதற்கு மேல் என்னுடன் தொடர்ந்து பேச அவள் வலி அவளை அனுமதிக்கவில்லை. நர்ஸ் டாக்டருடன் உள்ளே வந்தார்.

”கொஞ்சம் அப்படி நில்லுங்க சார்”

“ஓகே” என்று தள்ளி நின்றேன். திரையிடப்பட்டது. ஒன்று..இரண்டு…மூன்று…நா….நான்காவது நிமிடத்தில் திரை விலகியது. நர்ஸ் விருட்டென்று வெளியே சென்றாள். நான் அதே வேகத்தில் என் மனைவியின் அருகில் சென்றேன்.

இன்னொரு இண்ஜக்‌ஷன். வலியை இன்னும் அதிகப்படுத்த, அதன் மூலமாக செர்விக்ஸின் அகலத்தை அதிகப்படுத்த. என் மனைவி முன்பைவிட இப்போது அதிகமாக துடிக்க ஆரம்பித்தாள். என்னால் அந்த வலியை உடல் ரீதியாக உணரமுடியாவிட்டாலும், மன ரீதியாக முழுவதுமாக உணர்ந்தேன். டாக்டர் வெளியே வந்தார். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்று விளக்கினார். நான் என் மனைவியின் அருகில் சென்றேன்.

”ரொம்ப வலிக்குதா”. நான் என் வாழ்க்கையில் கேட்ட கேள்விகளில் மடத்தனமான கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

துடித்துக்கொண்டிருப்பவளை பார்த்து வலிக்குதா என்பதா?

மீண்டும் ஒரு முறை அவள் என்னை போய் குளித்துவிட்டு வரச் சொன்னாள். நான் திரும்ப கேட்டேன்:

“என்ன என்மேல அவ்வளவு ஸ்மெல்லா வருது. குளிச்சிட்டு வா, குளிச்சிட்டு வான்னு சொல்லறியே”.

நான் புரிந்துகொண்டதை நினைத்து சிரித்தாளா அல்லது ஜோக் அடித்ததாக நினைத்து சிரித்தாளா என்று தெரியவில்லை. ஆனால் அவள் சிரித்தாள் அந்த வலியிலும், நான் அழுதேன் கண்ணில் நீர் மல்க அவள் வலியை பார்த்து தாங்கமாட்டாமல்.

உங்கள் வாழ்வில் நீங்களும் இந்த அனுபவத்தை சந்தித்திருந்தாலோ அல்லது சந்திக்க விரும்புபவராக இருந்தாலோ எப்படிப்பட்டவராக இருந்தாலும்..சொல்ல வந்த பிரசவ வலியை இந்த இடுகையில் நீங்கள் உணர்ந்திருந்தால் இங்கே க்ளிக் செய்து ஒரு ஓட்டு போடுங்கள்.

17 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.