Articles Archive for November 2009
Featured, சிறுகதை »
இன்றைக்கு என்றுமில்லாமல் மகிழ்ச்சியாக இருந்தேன். கூடவே ஒரு சின்ன பதட்டம். மதியம் வரச் சொல்லியிருக்கிறார்கள். யார் வரச்சொன்னார்கள்? உங்களுக்கு தெரியவேண்டியது அவசியம். கல்யாணத்திற்கு பெண் பார்க்க போகிறேன். இது முதல் அனுபவம் அல்ல. இதற்கு முன் இரண்டு பெண்களை பார்த்தேன். எனக்கு பிடிக்காதது எதுவுமே அவர்களிடத்தில் இல்லை. இருந்தும் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை போலும். ஒருவர் தனியாக பேசவேண்டும் என்றார். தேவையொன்றுமில்லை என்று நிராகரித்துவிட்டேன். அதனாலேயே நிராகரிக்கப்பட்டிருக்கலாம். அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சார், இதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள். அவர்களுக்கும் ரசனை ஆசை எல்லாம் இருக்குமல்லவா. அதை மதிக்கிறேன். அதை விடுங்கள். இன்று ஒரு பெண் பார்க்கப் போகிறோம். நிச்சயம் நான் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். இந்த விஷயத்தில் எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், இது …
