Home » சிறுகதை

(ந)(ப)டிக்கலாம் வாங்க

29 October 2009 4 Comments

இது ஒரு வித்தியாசமான கதை. அப்படி என்ன வித்தியாசங்கறீங்களா? இந்தக் கதையின் ஹீரோ நீங்கள் தான். அதாவது இதை படிப்பவரே ஹீரோ. நீங்களும் எத்தனை காலமாகத்தான் ரசிகனாகவே இருப்பீர்கள். கதை என்னவென்று யோசிக்க வேண்டாம். அப்பேற்பட்ட விஜய் அஜித்களுமே கதையை பற்றி யோசிக்காத போது, உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, அதுவும் முதல் படத்தில். இது ஒரு குறும்படம். ஆடை ஆபரணங்கள் எல்லாம் உங்களுடையதே(ஆமாம் டிவி சீரியல் அப்ரோச்தான்). எதற்கு இங்கேயே சொல்கிறேன் என்றால், இதை படித்தவுடன் ஒரு வார பேண்டையும் இரண்டு நாள் சட்டையும் ஒரங்கட்டி விட்டு அடுத்த நாள் ”ஆக்ஸ்” எஃபெக்டுடன் வந்து தொடரலாம்.

கதை களம் உங்கள் அலுவலகம் மட்டுமே. மிஞ்சி மிஞ்சி போனால் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வரையிலான பிரயாண தூரம்.. எகிப்தில் சாங்கெல்லாம் கிடையாது. கதை இந்த பதிவை படிக்கும் ஒரு காரெக்டர், காரெக்டர் இண்ட்ரோ என்று ஆரம்பிக்கிறது…இதை படித்து முடிக்கும் போது கதை முடிகிறது. அதனால் கதையை முடிப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இதுவே பெரிய வித்தியாசம்தானே?

பின்குறிப்பு: எங்கெல்லாம் ஹீரோ(கதாநாயகன்) என்று வருகிறதோ..அங்கெல்லாம் உங்கள் பெயரை போட்டுக் கொள்ளவும் (தர்ப்பணம் செய்து வைக்கும் சாஸ்த்ரிகள் பித்ருக்கள் பெயர் வரும்போதெல்லாம் “மம-ன்னு சொல்லும்” என்பார் போலே).

காட்சி 1:

இடம்: அலுவலக நுழைவாயில். ஹீரோ அறிமுகம். பேக்ரவுன்ட் வாய்ஸ் தசாவதாரம் எம்.எஸ்.பாஸ்கர்(தொரை…ஒன் ஷாட்கட்….லிட்டில் கப்பு பிகாஸ் ஆஃப் யுரியா).

screw-4இவர்தான் இந்தக் கதையின் நாயகன். என்றைக்கும் இல்லாமல் இன்று சீக்கிரமாக 11 மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிட்டார். காரணம், இவரின் வாகனத்தின் டயர் வழியில் பஞ்சர் ஆகவில்லை. வானரம் மாதிரி இருந்து கொண்டு வாகனத்தில் வரும் இவர், ஆணி பிடுங்குவதில் திறமைசாலி. பல நேரங்களில் இவரின் மேலாளர் இவரிடம் கேட்டுத்தான் தன் வீட்டு ஆணியையே பிடுங்குவார் என்றால் பாருங்கள். சரி ஒரு நாள் அவருடன் நாம் பயணித்துப் பார்ப்போம். அதற்கு முன், அவர் தன் வேலையப் பற்றி என்ன சொல்கிறார் கேளுங்கள்:

”ஹம் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே…லகான்….குரு….ஹம் ஆப்(பு)க்கே ஹேன் (க்)கவுண்(டமணி)…”

அவர் சொல்கிறார்:

”நான் இந்த கம்பெனில மட்டுமே 100க்கும் மேற்ப்பட்ட ஆணிகளை பிடுங்கியிருக்கேன்…ஒவ்வொரு ஆணியும் ஒவ்வொரு ரகம்….ஆபீஸ் சீலிங் முதற்கொண்டு எல்லாமே ஃபால்ஸ் என்பதால், கவனக்குறைவா ஆணிய பிடுங்கினா சில நேரம் அந்த இடமே பெயர்ந்து கொண்டு வந்துவிடும்…அதனால ஜாக்கிரதையா….”

முன்பே சொன்னது போல இது ஒரு வித்தியாசமா கையாளப்படற ஆணி…ச்ச்சீ…கதை..மேலே படிக்கவும்….

அலுவலகத்திற்கு வந்தவுடனேயே கார்டு பஞ்ச் செய்துவிட்டு (கதையில் ஒரு பஞ்ச் வசனம் வேணும் இல்லியா?)…லிப்ட் பக்கம் செல்கிறார் கதாநாயகன். லிப்ட் வந்தும் அதில் ஏறாமல் காத்திருந்து 10வது மாடியில் இருக்கும் லிப்ட் வரும்வரை காத்திருக்கிறார். வருகிறது லிப்ட் சற்று தாமதமாகவே….

காத்துக்கொண்டிருந்த தருவாயில், அவரைப் போலவே சீக்கிரமாக(?) வந்த ஒரு (அவர் கண்ணுக்கு மட்டும்) அழகான அலுவலக பெண்ணியாளர் அங்கு வந்து லிப்ட்டிற்கு காத்திருக்க, உடனே ஒரு சின்ன டூயட் பாட முயல்கிறார்…நம் கதையும், தயாரிப்பு செலவும் அனுமத்திக்காததால், லிப்ட்டிற்குள்ளேயே பாடிவிட முடிவு செய்து, லிப்ட்டும் வந்து, “நெஞ்சுக்குள் பெய்திடும் வான் மழை” சாங் சைலைண்ட் மோடில் ஓட, கதாநாயகனின் முகத்தில் அஷ்டக்கோணல் செய்கைகள் ருத்ரதாண்டவம் ஆடுகிறது.

”ஏதோ ஒன்று” வரியின் பாதியிலேயே தான் இறங்க வேண்டிய தளம் வந்துவிட, அஷ்டக்கோணல் இப்போது ப்தினாறு கோணலாக மாறிகிறது.

காட்சி 2:

இடம்: கதாநாயகன் வேலை பார்க்கும் தளம் அதற்கு அருகில் இருக்கும் கழிவறை.

உள்ளே நுழையும் போதே எப்பொழுதோ அலுவலகத்திற்கு வந்துவிட்டு மூச்சு பிடித்து தாக்கு பிடித்த மூச்சாவை இனிமேலும் அடக்க இயலாமல், மூ.இருக்க வெளியே வரும் தன் சக ஊழியரரை பார்த்து “ஹாய்” சொல்லி…அவசரமாக போக இருந்தவர்களை இழுத்து பிடித்து மொக்கை போடுகிறார் கதாநாயகன். (மூச்சா)வந்தவரும் காலை அகட்டி, சுருக்கி..தூக்கி..அவசரத்தையும் தாண்டி சிரித்துக் கொண்டு பேசுகிறார்.

மூ.போ.வ: “சார், உள்ள போங்க நான் உங்க சீட்டுக்கு வரேன்”
கதாநாயகன்: “வாங்க சார். நானும் போகலை…வீட்லேர்ந்து கிளம்பும் போதே முட்டிச்சு எனக்கும்…..ஆபிஸுக்கு நேரமாகுமேன்னு அடக்கிக்கிட்டு வந்துட்டேன்….
மூ.போ.வ: (மனதுக்குள்) விடமாட்டான் போலிருக்கே…என்று நினைத்துக் கொண்டு: சரி சார் வாங்க…

ஏஆர் ரஹ்மான் ரீரெக்கார்டிங்கில்…..இருவரும் ஒன்றாக ஒன்னுக்கு இருக்க..பின்னனியில்…சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…….ஷ்ஹு……ஷ்ஷ்ஷ்ஷிஷிஷி…உண்மையிலேயே இங்குதான் ”ஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” சாங் பொருந்தும் என்றும் என் உதவியாளர் கார்த்திக் கூறினார்.

காட்சி 3:

இடம்: கதாநாயகன் வேலை பார்க்கும் காபின் அருகில் (கவனிக்கவும் இன்னும் கதைப்படி கதாநாயகன் தன் இருக்கைக்கு போகவில்லை).

கதாநாயகன்: ஹாய்..விஜய்…..என்ன சார் இன்னிக்கு சடன்னா..இங்க…வழக்கமா நீங்க க்ளையண்டு ஆபிஸ் ஆணியத்தானே பிடுங்குவீங்க…
விஜய்: ஏதோ இங்க ரெண்டு ஆணிய பிடுங்கணுமாம் அதுவும் இன்னிக்கே பிடுங்கினாத்தான் ஆச்சாம்…வர சொல்லிட்டாரு மானேஜர்..(சுத்தியால)தட்ட முடியுமா…

இருவருக்கும் குறுக்கே…ராகவன் காரெக்டர் உள்ளே நுழைகிறது….(எல்லா ஆபிஸிலும் இந்த காரெக்டர் ஒண்ணு இருக்கும், புரளியும் குத்தமும் சொல்றதுக்குன்னே)

அரசல் புரசலாக தன் காதுக்கு எட்டிய சில பல மேட்டர்களை அள்ளித் தெரிக்கிறது….அந்த காரெக்டர்….

சற்று தொலைவிலிருந்து…தன் மானேஜர் தான் வந்ததை கவனித்ததை பார்த்த நாயகன்/கி…சார், இப்பத்தான் வந்தேன் ஏற்கனவே லேட்டு..இருங்க போயி மெஷின ஆன் பண்ணி ஏதாவது பெயில் வந்திருக்கான்னு பார்த்துட்டு வரேன்…என்ற்ய் கூறிவிட்டு தன் இருக்கைக்கு நகர்கிறது கதாநாயகன் காரெக்டர்.

வழியில் இதர மாதுக்கள் கண்ணில பட, தேக்கி வைத்திருந்த ஜொள்ளையெல்லாம் வழிந்தோட விட்டுக்கொண்டே….அவரவருக்கு ஒரு “ஹாய்”, முக்கியமாக ஓரிரு மாதுக்களுடன் மானேஜர் கூப்பிட்டதையும் மீறி, ஜொள்ளை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக ஸ்ட்ரா போட்டு உள்ளிருந்து உறிந்தெடுத்து…ஊற்றுகிறார் கதையின் நாயகன்.

ஒரு சாம்பிள்:

கதாநாயகன்: ஹாய் அஞ்சலி….என்ன கண்டுக்கவே மாட்டேங்கறீங்க…ரொம்ப பிஸியா…

அஞ்சலி: இந்தத் தொந்தரவுகளையெல்லாம் ஏன் லே-ஆஃப்ல அனுப்ப மாட்டேங்கறாங்கன்னு தெரியலையே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, பாய்ஸ் பட ஸ்டைலில், தன் கால்களை ஜொள்ளில் நனையாமல் இருக்க தூக்கிக் கொண்டு, குட் மார்னிங்க் சார், அதெல்லாம் ஒண்ணுமில்ல…ஒரு இஷு…பார்த்துகிட்டு இருக்கேன்…

ஏஆர்ஆர் பின்னனியில், கதாநாயகனின் சக தோழர்கள் அந்த வழியாக நடக்கும் போது, தண்ணியில் நடப்பது போல ”சொதக்..சொதக்..” சவுண்டுகிறார்…..

அந்தப்பக்கம் போனவர்களில் சங்கர் பழனியிடம் “என்னோட பெட்ஷீட்ட இன்னிக்கு எடுத்துட்டு வரல..உங்களது கிடைக்குமா சார்” என்று கதாநாயகன் காதில் விழும்படி கேட்கிறார்…

கதாநாயகன்: (இஷுவ பார்க்கறியா, உன்னப் பத்திதான் ஊருக்கே தெரியுமே…போன விஷுவுக்கு கொடுத்த இஷுவையே இன்னும் முடிக்கக் காணும்…இதுல இஷுவாமில்ல…)..ஓஹ்…சரி சரி…நேத்தி என்ன க்ளோபஸ் போறதுக்கு வழி கேட்டீங்களே…? கரெக்டா போனீங்களா? (விடுவோமா நாம் யாரு)

அஞ்சலி: (வேலில போற ஓணான எடுத்து மடியில விட்டுட்டு..இப்ப ஊத்துதேன்னா)…ஆங்…போனேன் சார் என்று கூறிவிட்டு, கதாநாயகனை கட் செய்ய மானிட்டரில் பார்வையை செலுத்துகிறார்…

கதாநாயகன்: (மீன்குட்டிக்கே வாட்டரா..அண்ணனுக்கே மானிட்டரா) என்ன பர்சேஸ் மேடம் (எல்லாம் மேலுக்குத்தான்….இது அந்த மேல் இல்ல…சாரி சார்…அந்த மேலுக்கும் இல்ல. இது தமிழ் மேலுக்கு)? உங்க ரேஞ்சுக்கு நீங்களே ஒரு க்ளோபஸ்…உங்க கிட்ட கேட்கலாமா (நேத்து எவனோ ஒரு அப்பாவி செம்மையா மாட்டிருக்கான் போல)?

அஞ்சலி: அதெல்லாம் ஒண்ணுமில்ல சார், எங்க அக்காவுக்கு இன்னைக்கு பர்த்டே..அதுக்கு கிஃப்ட் வாங்கிட்டு வந்தேன்….

கதாநாயகன்: நீயே அட்டு…உனக்கு ஒரு பீத்த அட்டா…நீங்கள்ளாம் பொறந்ததே வேஸ்டு(இங்க ஏஆர்ஆர் ”கருத்தம்மா” கள்ளிப்பால் பீட்ட அப்படியே சொறுகறார்)…இதுல பர்த்டே வேற என்று மனதுக்குள் திட்டிக் கொண்டு..தன் கறைவிழுந்த பற்களை காட்டி ஒரு இளிப்பு இளித்துவிட்டு..”நான் விஷ் பண்ணதா சொல்லுங்க…”

அஞ்சலி: (சொல்லிட்டாலும்…விளங்கிரும்..) கண்டிப்பா….

கதாநாயகன் இப்போது ஒரு வழியாக வேறு யாரும் கிடைக்காததால் தன் இருக்கை வழியை நோக்கி நடக்கிறார்…

மணி ஆபீஸ் கடிகாரத்தில் 12ஐ தொட்டிருந்தது.

காட்சி 4:

இடம்: கதாநாயகன் இருக்கை.

கதாநாயகன் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு, நேற்று அடித்த மானிட்டரின் வீரியம் இன்னும் சொச்சம் பாக்கி இருக்க, கம்ப்யூட்டர் மானிட்டரை ஆன் செய்துவிட்டு பிறகு சீ.பி.யுவையும் ஆன் செய்கிறார்.

முதலில் தனக்கு இன்று வந்த மெயில்களை பார்த்து, அதிலிருந்து ஃபார்வார்டு மெயில்களை மட்டும் “ஹை ப்ரியாரிட்டி”யில் திறந்து, தான் பெற்ற இன்பம் பெருக இந்த வையகம் என்று மற்றவர்களுக்கு அனுப்பி அலுவலகத்தில் தன் முதல் வேலையை தொடங்குகிறார். அடுத்த வேலை…வேறென்ன..அனுமதிக்கப்பட்ட வலைதளங்களில் தேர்ந்தெடுத்து மணல்கயிறு ப்ளாக்கை திறக்கிறார். இன்ப அதிர்ச்சி…இங்கிருந்து இப்போது அப்படியே முதல் வரிக்கு தாவி படிக்க தொடருங்கள்…….

4 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.