Articles Archive for October 2009
சிந்தனைகள் »
ஒரு விஷயம் நம் ஆழ்மனதில் பதிந்ததற்கான சரியான சான்று அவ்வப்பொழுது அது நம் மனதில் வந்து போவதுதான். அது கெட்டதோ நல்லதோ. திடீரென்று அதன் தாக்கம் அதிகரித்து சில சமயங்களில் சங்கிலித் தொடர் போல எண்ண அலைகள் சுனாமியாகவும் உருவெடுக்கும். அப்படியொரு பேரலையின் சாரல் தான் இந்தப் பதிவு.
நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று ஒருமுறை இளையராஜா கொஞ்சம் உரிமைக் கோபத்தில் கேட்டார். அது இளையராஜாவின் “அன்றும் இன்றும் என்றும்” நிகழ்ச்சி என்று நினைவு. அல்லது ராஜ் டிவிக்காக நடத்திய நிகழ்ச்சியா? எங்கே எப்பொழுது நிகழ்ந்தது என்று சரியாக நினைவில் இல்லாவிட்டாலும், அவர் கேட்ட கேள்வி மனதில் ஆழமாக பதிந்துதான் போனது.
உண்மையில் அப்போது அந்த கேள்வி கேட்க நன்றாக இருந்தது. கேட்டது என் அபிமான இசைஞானியாயிற்றே. ஆனால் அதற்கான விடையென்ன என்பதை அவரும் சொல்லவில்லை. …
