Home » Archive

Articles Archive for October 2009

அனுபவம் »

[22 Oct 2009 | 10 Comments | 515 views]

இன்று என் மைத்துனனின் நண்பன் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். (கங்கிராசுலேஷன்ஸ் …….ரங்கராஜன் ரிலேஷன் இல்லைங்க (மணமகன் கௌதம் அண்ட் மணமகள் வசுதா) – சந்தோஷமான மணவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்)
வரவேற்பிற்கு வயிற்றுக்கு மட்டுமில்லாமல், செவிக்கும் உணவளிக்க நம் தமிழக குல வழக்கப்படி மெல்லிசை நிகழ்ச்சியும் இருந்தது.
என் திருமண வரவேற்பிலும், அதற்கு கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் என் இரண்டாம் அண்ணன் www.systemsurgery.com லட்சுமி நாராயணனின் திருமண வரவேற்பிலும் மெல்லிசைத்த, குரல் மெலிய, உடல் வலிய ஸ்ரீராம்தான் இங்கும் மெல்லிசைத்தார். ஜெயா டிவியில் சில இசை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” ஸ்ரீலேகாவை காதலித்து, ஓடிப்போகாமல் கல்யாணம் கட்டியவர். சில திரைப்படங்களிலும் தலை காட்டியிருக்கிறார் (சிவகாசியில் அசின் வீட்டுக்கு ஓட்டுக் கேட்க போகும் காட்சியில் அய்யர், சொல்லாமலேயில் அட்வர்டைசிங் ஏஜென்சி மானேஜர்). மனைவி …