Home » Archive

Articles Archive for October 2009

சிறுகதை »

[29 Oct 2009 | 4 Comments | 183 views]

இது ஒரு வித்தியாசமான கதை. அப்படி என்ன வித்தியாசங்கறீங்களா? இந்தக் கதையின் ஹீரோ நீங்கள் தான். அதாவது இதை படிப்பவரே ஹீரோ. நீங்களும் எத்தனை காலமாகத்தான் ரசிகனாகவே இருப்பீர்கள். கதை என்னவென்று யோசிக்க வேண்டாம். அப்பேற்பட்ட விஜய் அஜித்களுமே கதையை பற்றி யோசிக்காத போது, உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, அதுவும் முதல் படத்தில். இது ஒரு குறும்படம். ஆடை ஆபரணங்கள் எல்லாம் உங்களுடையதே(ஆமாம் டிவி சீரியல் அப்ரோச்தான்). எதற்கு இங்கேயே சொல்கிறேன் என்றால், இதை படித்தவுடன் ஒரு வார பேண்டையும் இரண்டு நாள் சட்டையும் ஒரங்கட்டி விட்டு அடுத்த நாள் ”ஆக்ஸ்” எஃபெக்டுடன் வந்து தொடரலாம்.
கதை களம் உங்கள் அலுவலகம் மட்டுமே. மிஞ்சி மிஞ்சி போனால் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் வரையிலான பிரயாண தூரம்.. எகிப்தில் சாங்கெல்லாம் கிடையாது. கதை இந்த பதிவை படிக்கும் …