Articles Archive for September 2009
நகைச்சுவை, பொது »
வழக்கமாக நான் இரவு தூங்குவதற்கு முன் கொஞ்ச நேரம் உபன்யாசம் கேட்பேன். அப்படி நேற்றிரவு கேட்டுக் கொன்டிருந்தது “ராமானுசர் வைபவம்””. அய்யங்கார் குடும்பத்தில் பிறந்திருந்தும், தமிழை பல காலமாக படித்துக் கொண்டிருந்தும் எனக்கு அவர் படித்த அந்த வடநாட்டு ஸமஸ்கிருதம் கலந்த தமிழை (வடமொழி) புரிந்து கொள்ள முயற்சிப்பதே சிரமமாக இருந்தது.
ராமாயணத்தை போன்ற இதிகாசங்கள் மனிதனுக்கு எவ்வளவோ கற்றுக் கொடுக்கிறது. ஆனால் அது அனவரையும் சென்றடைகிறதா என்றால் அது சந்தகமே. இதிகாசங்களும் புராணங்களும் சொல்லப்படும் விதம் மட்டுமே வேறுபடுகிறதே தவிர அதன் சாராம்சத்தை சிறுதும் குறைத்துவிடுவதில்லை. குப்பத்தில் வாழும் சுப்பனும் கூட ராமாயணம் பேசலாம். காலட்சேபம் என்றால் இவர்கள் தான் செய்யாலாம் என்றெல்லாம் எதுவுமில்லை. அக்ரஹாரத்தில் உள்ள அய்யங்காரும் காலட்சேபம் நடத்தலாம், கிருஷ்ணாம்பேட்டையில் உள்ள கபாலியும் சொற்பொழியலாம். இந்த காலட்சேபக் கருத்தில் உங்களுக்கும் ஆட்சேபக் கருத்து இருக்காது …
