Articles Archive for September 2009
சிந்தனைகள், நகைச்சுவை »
நானும் ரொம்ப நாளா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முக்கியமா இந்த போட்டி சம்பந்தமான நிகழ்ச்சிகளை பார்த்துக்கிட்டு வர்றேன். ஒண்ணு மட்டும் எனக்கு விளங்கவே மாட்டேங்குது. எதற்கெடுத்தாலும் நிகழ்ச்சியின் நீதிபதிகள் அதிலும் முக்கியமா பெண் நீதிபதிகள் “க்யூட்டா இருக்கு” அப்படீங்கறாங்க.
பொதுவா பெண் நீதிபதிகள் தமிழ்ல பேசறதே கிடையாது. சரி இப்ப எல்லாருமே அப்படித்தான் இருக்காங்க. இன்றைய இளய சமுதாயம் ஓரளவிற்கு தமிழில் பேசக்கூடத் தெரியாதவர்கள் என்று நினைக்கும் போது மனம் கலங்குகிறது. என்னைப் பொறுத்தவரையிலும் இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வளரும் போது பெற்றோர்கள் தமிழை ஊட்ட மறந்ததே. பெற்றோர்களை ஒரு பக்கம் குறை கூறினாலும், நமக்கு ஆர்வம் இருந்ததென்றால் கற்றுக்கொள்ள பிரயத்தனப்பட்டிருப்போம். சரி இந்த பதிவு அதை பற்றி பேசுவதற்கில்லை.
மேலே குறிப்பிட்ட அந்த நீதிபதிகள் எல்லோருமே குறிப்பிட்ட அந்த வார்த்தையை அனாயசமாக பிரயோகிக்கிறார்கள். அதற்கு அர்த்தம் தெரிந்து சொல்கிறார்களா …
