Home » சிந்தனைகள்

அனுமானால் எழுந்த அனுமானங்கள்

28 September 2009 4 Comments

மறுப்பு: இந்தப் பதிவினால் யார் மனதையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. அதையும் மீறி ஆங்காங்கே தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் லேசாகவோ அல்லது பலமாகவோ யாரேனும் புண்பட்டிருந்தால், அதற்கு எங்கள் கம்பெனி “வேலையில்லாததால் தேவையில்லாமல் சிந்திக்கும் சங்கம்” பொறுப்பல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

புராணத்தில் நடந்த சம்பவம்:
Hanuman Imgலக்‌ஷமணன் ராவணனின் சீர்கெட்ட புத்திரன் மேகனாதன் (இந்திரஜித்) எய்த அம்புகளால் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில், இலங்கையின் அரசவை மருத்துவர் சுஷேனாவின் அறிவுரைப்படி, அனுமான் த்ரோணகிரி (நடந்தது என்ன?வில் காண்பித்த) மலையிலிருந்து நான்கு மூலிகைகள் எடுத்துவரச் சென்று, அங்கு பல மூலிகைகளை பார்த்து டோட்டல் கன்ஃப்யூஷனில் மலையையே பெயர்த்துக் கொண்டு வந்துவிட்டார்.

சில கேள்விகள் நம் மனதில் திடீரென்று தோன்றும். இந்த கேள்விகள் ஏன் தோன்றுகிறது, அந்தக் கேள்வி சரியா தப்பா என்றெல்லாம் பார்க்க முடியாது. நானும் என் நண்பனும் ஒரு நாள் விஜய் டிவியின் கடந்தவார ”நடந்தது என்ன” நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

அதில் வந்த சஞ்ஜீவி மலையைப் பற்றி பேசும் போது என் நண்பன் ஒரு நல்ல கேள்வியை எழுப்பினான். அந்தக் கேள்வி:

அனுமான் லக்‌ஷமணனை காப்பாற்ற சஞ்ஜீவி மலையை பெயர்த்துக் கொண்டு வந்தாரே, அதை திரும்பி கொண்டு போய் வைத்தாரா?

உண்மையிலேயே இது ஒரு நல்ல சிந்திக்க வைக்கும் கேள்வியாகவே தோன்றியது எனக்கு. கொஞ்சம் நக்கலாக கேட்டதுபோல தோன்றினாலும், கேட்ட நண்பன் மிகுந்த தெய்வபக்தி கொண்டவன் என்பதால் அது நக்கலாக தோன்றவில்லை.

வேள்வி எழுப்பி வேள்வியின் நாயகனையே அழைத்து இந்த கேள்வியை கேட்டிருந்தாலும் அவர் “ஒரு நிமிஷம், அனுமானையே கேட்டு சொல்லிடறேன்”னு சொல்லியிருக்கலாம் அல்லது “சரியான கேள்வியை தப்பான (ஆ)சாமியிடம் கேட்ட்டுவிட்டீர்கள். லைனிலேயே காத்திருங்கள், உங்கள் கால் அனுமானுக்கு மாற்றப்படுகிறது என்று நாயகனின் உதவியாளர் சொல்லியிருக்கலாம்.

அல்லது வேள்வியில் ஏதும் குற்றமிருந்திருக்குமேயானால் “நீங்கள் தொடர்பு கொள்ளும் வேடிக்கையாளர் (கண்ணன் வேடிக்கைகளின் மன்னனாயிற்றே) எண் தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது…என்று பட்டென கட்டாகி போயிருக்கலாம்

முதலில் நான் சிரித்தது என்னவோ உண்மைதான். உனக்கு இது மாதிரியெல்லாம் கேட்கச் சொல்லி தருவது யார்? என்று கேட்டதும் உண்மைதான். அன்றைக்கு இரவு நான் தூங்க நெடுநேரமானது இந்தச் சிறிய கேள்வியால் என்பதும் உண்மை.

எனக்கு தோன்றிய சில பதில்கள். பதில்கள் என்று சொல்ல முடியாது. எனக்கு தோன்றிய சில அனுமானங்கள் என்று சொல்லலாம்

அந்த போர்களத்தில் அனுமான் அந்த மலையை எங்கே வைத்திருந்தார் என்ற கேள்வி இதை எழுதி முடிக்கும் தருவாயில் தோன்றிய ஒன்று.

1. அப்போது போர் சமயமாதலால் அனுமான் இதெற்கென்ன இப்போது அவசரம் என்று விட்டிருக்கலாம். அனுமான் ராமனின் படையில் மிக முக்கிய பங்கு வகிப்பவராயிற்றே. அடுத்த நாள் போரும் தொடரும். அதனால் அதற்கெல்லாம் அவகாசம் இருந்திருக்காது.

ஒரு வேளை மறுபடியும் இந்த மலை மற்றொரு சமயத்தில் யாருக்கேனும் உபயோகப்படும் என்று கூட தற்சமயத்திற்கு தக்க வைத்திருக்கலாம். அப்படி வைத்திருந்தால் இப்போது அந்த மலை இலங்கையில்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லையே.

படையில் அனுமான் ராமனைத் தவிர அந்த மலையை தூக்கும் பலசாலிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

2. புராணத்தில் சொன்னது போல ஹனுமான் மலையையே பெயர்க்காமல் அதில் ஒரு சிறிய பாகத்தை மட்டும் எடுத்து வந்திருக்கலாம். ஆனால் அப்படியானால் நாம் பார்க்கும் பல புகைப்படங்களில் அனுமான் ஒரு மலையை கையிலேந்தி பறப்பது போலதான் உள்ளது (உடனடி உதாரணம்: ஏபிடி பார்சல் சர்வீஸ்)

3. அதிருஷ்டக்காரன் நாடகத்தில் எஸ்வி சேகர் சொல்வதைப் போல பிற்காலத்தில் இந்தியர்கள் அந்த மலையை தம் சொத்தாக இடமாற்றம் செய்திருப்பார்களா? (அப்போ இப்போ அங்க என்ன இருக்கும்னு அடுத்த சிந்தனைய தட்டிவிட்டுடாதீங்க…)

உபரியாக தோன்றிய சிந்தனை:

அந்த மலை எடுத்து வந்தபோது ராமனின் படையில் பல வீரர்களும் மாய்ந்துப் போயிருப்பார்கள். அனுமான் எடுத்துக் கொண்டு வந்தது முழு மலை. அதில் பல மூலிகைகள் இருந்திருக்கும். அதை அநேகருக்கும் உபயோகித்து அவர்களையும் உயிர்பிக்கச் செய்திருக்கலாம்.

ஒரு வேளை அனுமான் மலையின் சிறு பகுதியை எடுத்து வந்திருந்து அதை அங்கேயே விட்டிருந்தாலும், அந்த மூலிகைச் செடிகள் நன்கு வளர்ந்து இருக்கும். அப்படி ஒரு வேளை அது இலங்கையில் வனப்பகுதியில் இருக்குமாயின், காட்டிலேயே சுற்றித் திரிந்த விடுதலைப்புலிகளுக்கு தென்பட்டிருந்தால் பல உயிர்ச்சேதங்களை தடுத்திருக்கும். இதில் ஒரு பின்விளைவு (நல்லதோ கெட்டதோ) இன்றுவரையில் போர் தொடர்ந்திருக்கும்.

இப்படியெல்லாம் அனுமானைப் பற்றிய அனுமானங்களை அள்ளிவிடடுவதால் நான் நாத்திகன் என்றோ நாத்திகம் பேசுவதாகவோ நினைத்துக் கொள்ளவேண்டாம். இப்படி எழுது என்று கண்ணன் சொல்ல..பாரதப் போர் அர்ஜுனன் போல எதிர்த்து பேசி கண்ணனை தொண்டை வற்ற பேசவிடாமல்,,இதோ எழுதிவிட்டேன் கண்ணா என்று விட்டேன்…

”சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனமஸ்து”

இந்த மலையையைப் பற்றி கொஞ்சம் ஆராயத்தான் வேண்டும். ஆராய்ந்து ஏதேனும் கிடைத்தால் ஒரு பதிவு போடுகிறேன். இப்போது நீங்கள் உங்கள் மேலான அனுமானங்களை கருத்துரையாக இடலாம்….

4 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.