க்யூட்டா இருக்கா?

நானும் ரொம்ப நாளா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முக்கியமா இந்த போட்டி சம்பந்தமான நிகழ்ச்சிகளை பார்த்துக்கிட்டு வர்றேன். ஒண்ணு மட்டும் எனக்கு விளங்கவே மாட்டேங்குது. எதற்கெடுத்தாலும் நிகழ்ச்சியின் நீதிபதிகள் அதிலும் முக்கியமா பெண் நீதிபதிகள் “க்யூட்டா இருக்கு” அப்படீங்கறாங்க.

பொதுவா பெண் நீதிபதிகள் தமிழ்ல பேசறதே கிடையாது. சரி இப்ப எல்லாருமே அப்படித்தான் இருக்காங்க. இன்றைய இளய சமுதாயம் ஓரளவிற்கு தமிழில் பேசக்கூடத் தெரியாதவர்கள் என்று நினைக்கும் போது மனம் கலங்குகிறது. என்னைப் பொறுத்தவரையிலும் இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வளரும் போது பெற்றோர்கள் தமிழை ஊட்ட மறந்ததே. பெற்றோர்களை ஒரு பக்கம் குறை கூறினாலும், நமக்கு ஆர்வம் இருந்ததென்றால் கற்றுக்கொள்ள பிரயத்தனப்பட்டிருப்போம். சரி இந்த பதிவு அதை பற்றி பேசுவதற்கில்லை.

மேலே குறிப்பிட்ட அந்த நீதிபதிகள் எல்லோருமே குறிப்பிட்ட அந்த வார்த்தையை அனாயசமாக பிரயோகிக்கிறார்கள். அதற்கு அர்த்தம் தெரிந்து சொல்கிறார்களா அல்லது வேறு வார்த்தையேதும் கிடைக்காமல் இந்த வார்த்தையே உளறிக் கொண்டிருக்கிறார்களா என்பது எனக்கு வெகுநாட்களாக கேள்விக்குரியாகவே இருக்கிறது. சரி இன்று அதைப் பற்றி ஒரு பதிவு போடுவதன் மூலம் அந்த வார்த்தையை பற்றியும் அதன் பிரயோகங்களைப் பற்றியும் கொஞ்சம் ஆய்வு செய்யலாம் என்று இறங்கிவிட்டேன்.

அதற்கு முன் நம் நீதிபதிகள் – அது என்னன்னே தெரியலைங்க. போட்டியாளர்கள் என்ன செஞ்சாலும் ஒரு வார்த்தையை சொல்லிடறாங்க. ”க்யூட் பெர்ஃபாமன்ஸ்” எனபதுதான் அது. நல்லா பாடினாலும் சரி, அரைகுறையா பாடினாலும் சரி, அட்டகாசமா பாடினாலும் சரி. இது பாட்டு போட்டிகளில். அடுத்து வரிசையை அலங்கரிப்பவர்கள் நடனப் போட்டி நீதிபதிகள். மானாட மயிலாட்டத்தில் கொஞ்சம் பரவாயில்லை. அங்கும் நம்ம ”மச்சான்”நமீதா ”அன்னியனை” ”ஆனியன்”னு சொல்ற கதையெல்லாம் தனி ட்ராக். அதை பத்தி நாம் ஒரு தனி பதிவே போடலாம்.

மற்றபடி மற்ற நிகழ்ச்சிகள்ள வரும் ”க்யூட்” நீதிபதிகள் அதிகமா பிரயோகிக்கிற வார்த்தை “க்யூட்”. தமிழ்ல வார்த்தைக்கு பஞ்சமா இல்ல ஆங்கிலத்துலதான் வார்த்தைக்கு தகறாரா? ஒருத்தர் நல்லா பாடினா நாம அவங்க சங்கீதத் திறமையா க்யூட்டுன்னு சொல்ல முடியுமா? அது சரியான வார்த்தையா? அல்லது அவங்க குரல க்யுட்டுன்னு சொல்லலாமா? அதற்கு குறைந்தபட்சம் ஸ்வீட்ன்னாவது சொல்லலாமே? உங்க ட்ரெஸ் ரொம்ப க்யூட்டா இருக்கு? இது ரொம்ப ஓவரா போயிக்கிட்டிருக்கு…இதோட நிறுத்திக்குவோம்னு வடிவேல் சொல்றாப்ல அங்க போயி அவங்க தலையில ஒரு குட்டு குட்டி சொல்லத்தோணுது.

சமய சந்தர்ப்பங்களில் நம்மைப் போல வெகுஜனர்கள் கூட இதை தப்பாகவே பல இடங்களில் பிரயோகிப்பதுண்டு. உதாரணத்திற்கு என் நண்பர்கள் சிலரை சாட்டில் அழைத்து “Cute” என்ற சொல்லுக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்னவென்றேன். மூவரில் ஒருவர் தெரியவே தெரியாதென்றார். இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. மற்றிருவர்கள் அழகு, லட்சணம், சௌந்தர்யம் என்றார்கள்.

”அவசர உதவி” விக்கியை தட்டினேன். விக்கியின் பக்கப்படி க்யூட் என்றால் புத்தசாலித்தனம் என்கிறான்.

சரி இவனும் கூட தவறு செய்ய வாய்ப்புண்டு. நாம் எதற்கும் வேறேதாவது வலைதளத்தில் வலைவீசிப் பார்ப்போம் என்று ”திங்க் எக்ஸிஸ்ட்”க்கு போனேன். அங்கேயும் க்யூட் என்றால் க்ளவர் மற்றும் ஷார்ப்பென்றது. சரி ஷார்ப்பென்றால்? அதுவாவது இவர்கள் உபயோகப்படுத்தும் அர்த்தத்தில் விழுகிறதா என்று பார்த்தால்..தொப்..தொப்.சொதொப்…ஏதேதோ சொல்கிறது. ஆனால் இது கொஞ்சம் சங்கீத பரிபாஷைகளுக்கு ஏதுவாக இருக்கிறது.

இப்போது மேலே பார்த்த அர்த்தத்தை சில இடங்களில் உபயோகித்துப் பார்ப்போம்:

1. பிறந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் பார்க்க வருகிறார்கள் – “ஹே! ரொம்ப க்யூட்டா இருக்குப்பா” என்கிறார்கள். அழகென்ற சொல்லையோ அல்லது மிருது என்ற வார்த்தையோ அல்லது மென்மையென்ற அர்த்தத்தையோ க்யூட் கொடுக்காத போது, பிறந்த குழந்தையை புத்திசாலி என்கிறார்களா?

2. எதிர்ச்சையாக சில பேரை நாம் சந்திக்கும் போது – “உன் வாட்ச் ரொம்ப க்யூட்டா இருக்குப்பா” என்கிறார்கள். இங்கே அந்த வாட்ச் அழகாய் இருப்பதை சொல்வதற்காக பயன்படுத்தினாலும் அது தவறான அர்த்தத்தை கொடுக்கிறது என்று உணராமல் தன கண்ணுக்கு எதெல்லாம் நன்றாக அல்லது அழகாக இருக்கிறதோ அதற்கெல்லாம் ஒரு க்யூட். இதில் இன்னொரு விசேஷம் பாராட்டை (வாட்ச்சின் சார்பாக) பெற்றுக்கொள்ளும் வாட்ச்சின் உரிமையாளருக்கும் இந்த அர்த்தம் கண்றாவி எல்லாம் தெரியாது.

3. நான் சில நாட்களுக்கு முன் என் இரண்டு வயதே ஆன மகனை அலுவலகத்தில் வேலை பார்க்கும் சில சக ஊழியர்களுக்கு என் மனைவி மூலம் கூட்டிச் சென்று காண்பித்தேன். அவர்கள் என் மகனை பார்த்து “க்யூட்” என்றார்கள். வேடிக்கை என்னவென்றால், சாதரணமாக தமிழில் உள்ள அத்தனை திட்டு வார்த்தைகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் என் மகன் அன்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை அப்போது. ஒரு வேளை அவன் என் மகன் ஆதலால் நிச்சயமாக புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம். விசாரித்ததில் செந்தில் மட்டுமே அப்படி நினைக்கிறார் என்று அறிந்து கொண்டேன். கார்திக் இல்லையென்றும் ஆமாமென்றும் நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதாவைப் போல தலையாட்டுவான்.

4. சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – ”ரொம்ப நல்லா பாடினே ப்ரேம். க்யூட்டா இருந்தது” எது? என்று ஒரு வெறித்தனமான முரட்டுப் பார்வையோடு கேட்க்கத் தோன்றுகிறது. குரல் புத்திசாலித்தனமாக இருந்தது என்று சொன்னால் பொருந்தாது. சரி சங்கீத பாஷையில் எடுத்துக் கொண்டாலும், நீதிபதிக்கு தமிழே வராது என்று மன்னித்துவிட்டாலும், ஷார்ப் இருக்கே. அதுதானே சரியான வார்த்தை?

5. அதே சூ.சி.ஜூ 2 – ”உன் வாய்ஸ் / ட்ரெஸ் க்யூட்டா இருக்கு” – எப்படிங்க? கொஞ்சம் கூட மண்டையில இருக்கறத உபயோகிக்கவே மாட்டீங்களா? ட்ரெஸ் நல்லா இருக்கும் இல்லைன்னா அழகா இருக்கும். அது எப்படி புத்திசாலித்தனமான ட்ரெஸ்ஸா இருக்கு, வேணும்னா க்யூட்டா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு இருக்கன்னு சொல்லலாம். அப்போ மாணிக்கவினாயகம் பாடினா இதையே சொல்லுவாங்களா? அவரு ”வாய்”ஸ் க்யூட்டா இருக்க ”வாய்”ப்பே இல்லியே. வேணும்னா ரெட்டா இருக்குன்னு சொல்லலாம்.

6. காதலன் காதலிக்கு பரிசு கொடுக்கிறான் – “ரொம்ப தாங்க்ஸ் டியர். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப க்யூட்டா இருக்கு”ன்றாங்க. காதலன் வாங்கிக் கொடுத்தது ஒரு சோப்பு டப்பியாயிருந்தாலும் கூட.

இன்னும் சில பேர் சின்னதா ஏதாவது ஒரு பொருளை கடைகளில் பார்த்தால் உடனே “குட்டியா க்யூட்டா இருக்குல்ல”ன்றாங்க. குட்டி வேணும்னா க்யூட்டா இருக்க அநேக வாய்ப்பிருக்கிறது (அது குட்டிங்கறதுனாலேயே, எந்த குட்டின்னு முழிக்கறவங்க…ஒரு குட்டு குட்டிக்கிட்டா எந்த குட்டின்னு புரிஞ்சுடும். அப்படியும் புரியாதவங்க இதுவரைக்கு இதை படிச்சதே நேரவிரயம்). இங்க நான் சொல்லும் ”க்யூட்” புத்திக்கூர்மையுள்ள என்ற அர்த்தததில்.

சரி க்யூட்டுக்கு இன்னொரு அர்த்தம் ”விலைமதிக்க முடியாத ஒன்று” என்று இருந்தாலும், மேலே சொன்ன இடங்கள் அனைத்திலுமே அது பொருந்தாது. காதலன், காதலி பரிசைத் தவிர. பிறந்த குழந்தை விலைமதிக்க முடியாத ஒன்றுன்னு சொல்லி தெரியவேண்டியது ஒண்ணுமில்லை. அதனால அங்கேயும் அர்த்தம் புரிந்து சொல்வதாக எடுத்துக் கொள்ளமுடியாது.

இப்படி பல இடங்களில் பலதரப்பட்ட மக்கள் அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல், மூச்சா போனால் கூட ரொம்ப க்யூட்டா இருக்குன்னு சொல்ற அளவுக்கு க்யூட்டோஃபோபியா பரவ ஆரம்பிச்சிருக்கு. இது வெளிநாட்டவர் சதி இல்ல. வடநாட்டவர் அருளிச்செய்தது. அவர்கள் மலேஷியாவிற்கு போய் அங்கே “ஹலோ மலேஷியான்னா” நம்ம ஆளுங்க எங்க போனாலும் அதே ”ஹலோ”. மக்கள் இருப்பதினால்தான் அது நாடு இல்லையேல் காடு. அப்போ நம்ம வணக்கம் யாருக்கு சொல்லணும். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாம, எவனோ ஒருத்தன் எங்கயோ ஆணியப் புடுங்கறான்னுட்டு நம்ம வீட்ல இருக்குற தேவையான ஆணியெல்லாம் புடுங்கிட்டு திரியறாங்க. ரொம்ப கொடுமையான விஷயம் “வணக்கம் சென்னாய்”னு கூவறதுதான். நம்மாளும் பதிலுக்கு கோரஸா “ஹே”னு சவுண்ட் விட்ருவான்.

ஆணிய புடுங்குங்க ஆனா அது தேவையான ஆணியான்னு பார்த்துட்டு அப்புறம் புடுங்குங்க. ஆணிய புடுங்கறத பத்தி அவரோட சத்தியமூர்த்தி.காம்ல “அடுத்த காலர் லைன்ல”ன்ற தலைப்புல ஒரு நல்ல பதிவ போட்டிருக்காரு…அது தவிர நம்ம வடிவேல் அண்ணனும் சொல்லியிருக்காரு..பார்த்து கையில சுத்தி பட்டுட போகுது.

இன்னொரு ஆச்சரியமான உண்மை, ஆங்கிலேயர்களும் கூட இத இப்ப இல்ல ரொம்ப வருஷமா தப்பாதான் உபயோகிச்சிட்டு இருக்காங்கப்போய்..அழகான இளம் பெண்களை குறிப்பிடும் வார்த்தையா 1838லேயே உபயோகப்படுத்தியிருக்காங்க….ஃப்ரெஞ்சு மொழியின் ”அக்யூட்டஸ்” தான் மருமருன்னு மருவி க்யூட்டாயிருக்கு. இந்த மருவல க்யூட்டுன்னு சொல்லலாமா?

இந்த பதிவு க்யூட்டா இருந்தா டமிலிஷ்ல ஒரு ஓட்டும் இங்க ஒரு மறுபதிவும் போடுங்க..இத வேற அப்பப்ப ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு உங்களுக்கு. ஒரு மனுஷன் எவ்ளோதான் பருப்பா..ச்ச்சீ…பொறுப்பா இருக்கிறது.

This entry was posted in சிந்தனைகள், நகைச்சுவை and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to க்யூட்டா இருக்கா?

 1. உண்மையா அர்த்தம் புரிஞ்சு சொல்றேன்.

  உங்க போஸ்ட் க்யூட்டா இருக்கு……

  :-)

  • உங்க கமெண்ட் க்யூட்டா இருக்கு :-)

   நன்றி அகல்விளக்கு…பதிவுக்கு முதல்ல விளக்கா வந்திருக்கீங்க…

 2. அரவிந்தன் says:

  உங்க பதிவு ரொம்ப “க்யூட்டா” இருக்கு :-)

 3. அடடே, ரொம்ப க்யூட்டா என்னோட பதிவ இங்க ரெஃபர் பண்ணியிருக்கீங்களே. நீங்க ரொம்ப க்யூட்டானா ஆளு சாரதி. இது ரொம்ப க்யூட்டா இருந்ததால, நானும் கமெண்ட்டா போடலாமா இல்ல ஓட்டாவே போட்டுரலாமான்னு யோசிச்சி ரெண்டுமே செஞ்சா “ஸோ க்யூட் யா”ன்னு இருக்குமேன்னு ரெண்டுமே பண்ணிட்டேன்.

 4. ஓட்டுக் குத்தறதலையும் க்யூட்டா….தாங்க முடியலடா சாமி…..என்ன விட்டுருங்க……சத்தியமூர்த்தி..நான் இந்த விளாட்டுக்கு வரல…

 5. Uma says:

  க்யூட்டானு தான் சொல்ல நினைச்சேன்,

  I will say it as Attractive Article…

  Excellent ! ! !

  எப்படி அதுவா தோணுமா?

 6. Kabali Karthikeyan (Senthil Thasan) says:

  Very Good One Vijay ….
  But the sad part of the Story is the real meaning of CUTE is still unresolved …

  May be, i shall not use that word anymore ,
  Except when i praise my Brother
  who really Looks Very “CUTE” like You

 7. kadhir says:

  nalla theliva irrukku. instead of CUTE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *