Home » Archive

Articles Archive for August 2009

சிறுகதை »

[17 Aug 2009 | 2 Comments | 248 views]

அன்று வழக்கம் போல அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் ஹம்ஸத்வனி. செல்லமாக ஹம்ஸா என்று அழைக்கப்படுகிறவள். ஹம்ஸத்வனி ராகத்தை போலவே மென்மையானவள், அழகனாவள். உள்ளிருந்து “இன்று மணியை நீ கூட்டிக்கிட்டு வந்துரு ஹம்ஸா” என்று பாலா குரல் கொடுத்தான்.
மணி ஸ்கூல் சென்று வர ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று ஆட்டோ வரவில்லை. காலை பாலா அவனை பள்ளியில் கொண்டுவிட்டு வந்துவிட்டான்.
இருவருமே வேலைக்கு செல்வதால் கிரிஜாவை வீட்டோடு வேலைக்காரியாக வைத்திருந்தார்கள். அவள் கிட்டத்தட்ட அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டாள். மணி ஸ்கூல் முடிந்து வீடு திரும்பியதிலிருந்து ஹம்ஸாவோ அல்லது பாலாவோ வரும் வரை, இவளின் பாதுகாப்பில்தான் மணி.
ஹம்ஸா இன்னும் கொஞ்ச நாள் வேலைக்கு போக வேண்டும் என்று பாலா கேட்டுக்கொண்டதால்தான் வேலையை தொடர்கிறாள். வீட்டுக் கடன் கட்டுவதற்கே பாலாவின் முக்கால்வாசி சம்பளம் போயிவிடுவதால், அடுத்த சம்பள …