Home » பொது

இதுவும் இப்ப வேணாம்

29 August 2009 7 Comments

இந்த இதுவும் இப்ப வேணாம் பதிவுக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்குங்கோவ்வ்வ்வ்வ்வ்…
நம்ம சிவாஜி அங்கிள் நடிச்ச பாரத விலாஸ் படத்தை அவ்வளவு சுலபமா நாம யாரும் மறந்திருக்க நியாயமில்லை. அரசு தொலைக்காட்சியிலேயே நிறைய தடவை போட்டிருக்காங்க. முன்னாடி ஓட்டு எண்ணும் நாட்களில், ஆகஸ்டு பதினைந்துக்கு, சுதந்திர தினத்துக்குன்னு போட்டத தவிர சாதரணாமாகவே தாளிச்சிருக்காங்க. போறாத குறைக்கு நம்ம சன் டிவியும் போட்டு தாக்கியிருக்காங்க. இத்தனை தடவைகள்ள ஒரு தடவை கூட பார்க்கலைன்னா, தயவு செய்து இந்த படத்தை பார்க்கறத பத்தியே இவ்வளவு பெரிசா எழுதியிருக்கிற எனக்காக பார்த்துட்டு வந்துடுங்கோ…விஷயம் என்னன்னா…அதுல நம்ம சிவாஜி அங்கிள் கூட அவர் மனசாட்சி அப்போ அப்போ வந்து பேசிக்கிட்டு இருக்கும். அதுபோல என் கூடேயும் என் மனசாட்சி பேசின போது நைஸா மொபைல்ல ரெக்கார்டிங் பட்டன அமுக்கிவிட்டுட்டேன்.

அத அப்படியே இங்கே உங்களுக்காக பிரத்யேகமாக…இத பாருங்க இதுவரைக்கும் உங்களுக்குதான் முதல்ல சொல்றேன். அதனால தயவு செய்து யாருகிட்டேயும் சொல்லிடாதிங்க…..

என்னத்த எழுதறது….எத பத்தி எழுதறது..ம்ஹூம்……..ச்சே…ஒண்ணும் மனசுல எழ மாட்டேங்குதே. சரி இன்னிக்கு வந்த பேப்பர பார்ப்போம். ஏதாவது மாட்டாமலா போகும். தொடர்ந்து எழுதலைன்னா சாமி குத்தம் ஆகிடும். அப்புறம் நம்ம ஜோசியர் சொன்னாப்போல ப்ளாகர் குலதெய்வம் இடுகைச்சாமிக்கு பரிகாரம் செய்யவேண்டியிருக்குமே. அந்த பரிகாரம் வேறே ரொம்ப ரிஸ்கான ஒண்ணு. அது என்ன? தொடர்ந்து எழுதலைன்னா பரிகாரமா விஜய ராஜேந்தர் படமோ அல்லது ஜேகே ரித்திஷ் படமோ கண்டிப்பா ரெண்டு தடவை பார்த்தே தீரணும் இல்லைன்னா ஒரு தடவை கந்த(ல்)சாமி படம் பார்க்கணுமே …எனக்கு எதுவும் சரியாபடலை. சொன்னா நாத்திகன்னு பட்டம் கட்டி ஊரவிட்டு ஒதுக்கி வெச்சிடுவாங்க. சரி நம்ம ப்ளாகர் குல வழக்கப்படி விஷயம் ஒண்ணும் இல்லாதப்ப எதையாவது கிறுக்கிட்டு ”எனக்கு தோன்றியவை”, ”துணுக்குகள்”, ”எண்ண அலைகள்”, ”என் மன வானில்”, ”என் கிறுக்கல்கள்”ன்னு ஒரு டைட்டில் கொடுத்துடலாம்.

பால் விலை அதிகரிச்சிருப்பதை கண்டிச்சு அம்மா கோஷம் எழுப்பறத பத்தி எழுதலாமா? எதுவுமே விஷயம் கிடைக்காததுனால ”வெளுத்ததெல்லாம் பாலுங்கற கணக்கா ஜெயிச்சதெல்லாம் கட்சியில்லைன்னு சொல்றத பத்தி என்ன நாம பெரிசா எழுதி சாதிக்கப்போறோம். இது இப்ப வேணாம்.

இலங்கை ராணுவம் அட்டூழியத்தின் எல்லைக்கு போய், தமிழர்களை நிர்வாணமாக்கி மனித உரிமைகளை மீறி சுட்டுத் தள்ளியிருந்தும் அத பத்தி கலைஞரோ, அம்மாவோ அல்லது பெ.அம்மாவோ எதுவுமே பேசாம இருக்கறத பத்தி எழுதலாம். ஆனா இதையெல்லாம் என்னைவிட சிறப்பா எழுதற பல பேர் இந்த ப்ளாகர் உலகத்துல இருக்கறதுனால….இதுவும் இப்ப வேணாம்.

கொஞ்ச நாள் முன்னாடி மன்மோகன் சிங் ஒரு பெரிய ஜோக் அடிச்சாரே…அதாங்க….பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்காவிட்டால் அவர்களுடன் நான் பேசமாட்டேன்னு. என்னவோ இவரு பேசமாட்டேன்னுட்டா அவங்க சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்கிறா மாதிரி. இந்த எல்கேஜி க்ளாஸ் டைப் விஷயத்தை பத்தியெல்லாம் எழுதினா நம்ம நேரத்தை வீணாக்கியதாக தோணும். இதுவும் இப்ப வேணாம்.

சரி வேற எந்த மண்ணும் தோணலை…இதுல ஏதாவது ஒண்ண பத்தி பதிவு போடலாம் ஆனா இப்ப இல்ல. இந்த பதிவுல வேணாம். இது சும்மா ஜாலியா ஒண்ண போடறதுக்கு ஒதுக்கிடலாம். இப்ப ஓரளவுக்கு தெளிவு கிடைச்சிருக்கு. அது என்ன?

1. கண்டிப்பா ஒரு பதிவு போட்டுரணும்.
2. அரசியல் சம்பந்தமா இதுல வேணாம்
3. ஜாலியா ஏதாவது போடலாம்.

சரி ஜாலியா ஏதாவதுன்னா..என்ன? நம்ம நடிகர்கள வெச்சு எழுதலாமா? வேணாம்! இவங்கள வெச்சு நிறைய எழுதியாச்சு. வேலண்டைன்ஸ் டேக்கு ஒண்ணு எழுதினேன். அதுல டைரக்டர்ஸ் வெச்சு பாகம் ரெண்டுன்னு போட்டேன். இனிமே இது அடுத்த வருஷம்தான். சினிமால செண்டிமெண்ட்ஸ்ங்கற பேர்ல வர்ற காமெடிகள எழுதலாமா? ரொம்ப யோசிக்கணுமே. அதுவுமில்லாம திரும்ப திரும்ப சினிமா சினிமான்னா..இவனுக்கு சினிமாத் தவிர வேறே ஒண்ணுமே தெரியலடா….இவன் ரொம்ப மொக்கைன்னு நம்ம குலக்கொழுந்துகள் பேச ஆரம்பிச்சுடுமே. அதனால சினிமா பத்தி வேணாம். வித்தியாசமா…நம்ம தமிழ் இயக்குனர்கள சொல்றாப்ல….(மனசாட்சி: ச்சே..திரும்ப அங்கயே போறியேடா..யோசி..யோசி…உன்னால முடியும்)..சரி இத எழுதல.

நாட்டு நடப்பு போற போக்குல நாம கண்ணால (மத்தவங்கெள்ளாம்) பார்த்தத வெச்சு எழுதிடலாம். என்ன திரும்பத் திரும்ப போக்குவரத்து, குப்பய சரியா கொட்டமா நடு ரோட்டுல கொட்டரதுன்னு எழுதலாம். அது ஜாலியா இருக்காதே..ஜோலிய வேணும்னா இருக்கும். சமுதாய அவலங்களை பத்தி? இதுவும் இப்ப வேணாம்.

ஜாலியாத்தான் ஒண்ணும் தோணல, பொழுதுபோக்கா ஏதாவது முயற்சி செய்யலாமே. பொழுதுபோக்குனா எத வேணும்னாலும் எழுதலாம்னு நம்ம ப்ளாக் சாஸ்த்திர சம்பிரதாயத்திலேயே சொல்லி இருக்கறதுனால இது கொஞ்சம் சுலபந்தான்.

சரி இப்ப இன்னும் இலகுவாயிடுச்சி…
1. ஜாலியா ஒரு பதிவு போட்டுரலாம்
2. அப்படி ஒண்ணும் தோணைலைன்னா பொழுதுபோக்கா ஏதாவது போட்டுரலாம்.

இன்னிக்கு என்ன ஆச்சு எனக்கு. என்னனமோ நெனச்சுகிட்டு லேப்டாப்புல உட்கார்ந்தா ஒண்ணும் வரமாட்டேங்குது. ம்ஹூம்…நமக்கு தான் நிறைய ஃபார்வேர்டு மெயில் வந்திருக்குமே. அதுல ஏதாவது ஒண்ண புடிச்சி போட்டுரலாம். (மனசாட்சி) நீ சொந்தமா எழுதறதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லதான். இருந்தாலும் ஒரிஜினாலிட்டி போயிடும்..பார்த்துக்க. அப்புறம் நீ என்ன எழுதினாலும் ஈயடிச்சான் காபின்னு தான் சொல்லும் இந்த ஊர்சனம். அஞ்சு பீர் (ச்சீ..சனிக்கிழமைன்னாலே இப்படித்தான்) பேர் அஞ்சு விதமா பேசினா மொத்தம் ஒரு 25 விதமா ஆயிடுமே. (நான்) கரெக்ட்டுதான். நீ சொல்றதுதான் சரி. டைம் ஆனாலும் சொந்த சிந்தனைகள போடலாம்.

ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு. சொல்லிட்டேன், அப்புறம் விஷயம் விபரீதமா ஆயிடும்ன்னு நீங்க எல்லாம் கையை மடிச்சிகிட்டு சில பேரும், அரிவாள தூக்கிட்டு சில பேரும் ஓடி வர்றது கண்ணுக்கெட்டின தூரத்துல ஒரு மாதிரி மங்கலா தெரியறதுனால இதோட நிறுத்திக்கறேன். நேரா நான் எழுத வந்த விஷயத்துக்கு போயிடலாம்.

ஆனா என் நிலைமையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கணும். ஒரு மனுசன் எவ்ளோதான் யோசிக்கறது. இந்த சின்ன வயசுல இப்படி யோசிக்கறானேன்னு பக்கத்து விட்டு பாட்டி கண்ணு வெச்சதாலயோ என்னவோ முதல்ல ஒண்ணும் தோணல. ஆனா இப்ப தோணிடிச்சு என் இனிய ப்ளாகர்களே. ச்சே..இதயே ஒரு சாதனை மாதிரி சொல்லிக்க வேண்டியிருக்கே. இதெல்லாம் ஒரு பொழைப்பா? வெட்கக்கேடு. எதுவும் தோணலைன்னா சும்மா உட்கார வேண்டியதுதானே. (மனசாட்சி) எனக்கு என்னவோ இதுல கொஞ்சம் கூட ஒப்புதல் இல்லடா…என்னவோ பன்னித்தலை..சாரி..பண்ணித்தொலை. (என் பதில்) அப்படியில்லடா இத நான் ஒரு சேவையா நினைக்கறேன் தெரியுமா? மத்தவங்க படிச்சு பொழுது போக்க நான் ஒரு காரணமா இருக்கேங்கறதுல கிடைக்கிற சந்தோஷத்தோட எதுவுமே பெரிசில்ல. உனக்கென்ன தெரியும் இத பத்தி. பேசாம இரு. இப்பத்தான் ஒண்ணு தோணியிருக்கு. தொந்தரவு பண்ணாத.
அப்பாடா! ஒரு வழியா சமாளிச்சாச்சு. என்னங்க இத சின்ன விஷயமா பார்க்காதிங்க. எந்த ஒரு காரியத்த செய்யனும்னாலும் முதல்ல நம்ம மனசுக்கு பிடிச்சிருக்கணும்தானே? அத நீங்க ஒத்துப்பீங்க.

அய்யய்யோ…என்ன எழுதனும்னு முடிவு பண்ணத எழுதினதே ரெண்டு பக்கத்துக்கு மேல வந்துடுச்சே. இதுக்குமேல நாம் சொல்லவந்த மேட்டர எழுதினா இடுகை ரொம்பப் பெரிசாயிடும். பாவம் ரீடர்ஸ் எவ்வளவு கஷ்டப்படுவாங்க. அவங்களும் எவ்வளவு நேரந்தான் பொறுமையா படிப்பாங்க. ஒண்ணு பண்ணலாம், அத தனியா ஒரு பதிவா அடுத்தது போட்டுரலாம்.

அடுத்த பதிப்புல சொல்லிடறேங்க…காரண்டி கொடுத்துட்டேன். நிச்சயமா வரணும். வந்து படிக்கணும். உங்களுக்காகத் தான் இவ்வளவு யோசிச்சு ஒண்ணு எழுதப் போறேன் (ஒண்ணும் எழுதாமப் போறேடா மண்ணாங்கட்டின்னு நீங்க செல்லமா திட்டறது கேட்குது).

இப்ப போறேன்..திரும்பி……..திரும்பி வருவேண்ணு சொல்லவந்தேன். வர்ட்டா……………

7 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.