Home » அனுபவம், சிந்தனைகள், செம்மொழி, நகைச்சுவை

Madras டமிலு

9 August 2009 6 Comments

”எந்த ஊர் பாஷன்னாலும் அது நம்மூரு பாஷையாகுமா?

அட அது சங்கத்தமிழானாலும், அது மெட்ராஸ் டமில் போலாகுமா?
பல தேசம் முழுதும் வாழும் தமிழன்
விரும்பும் தமிழல்லவா…”

எவ்ளோ பாச வந்தாலுமே நம்ம மெட்ராஸ்ல பேசற டமில் போல வரவே வராது மாமே. ஊடால இங்கிலீசெல்லாம் வுட்டுக்கினு அப்போ அப்போ அதர் லாங்குவேஜெல்லாம் சேர்த்துக்கினு பேசற ஸ்டைல்குதே..சான்ஸே இல்லபா.

ஏதோ நாம தில்லிக்கேணி தொகுதில ரொம்ப வர்சமா வாய்ந்துகினு இருகர்த்தொட்டு நம்ம காதுல வீய்ந்தத உங்க அல்லாத்துக்கும் சொல்லலாம் வந்துகிறேன்.

இவ்ளோ பேசறேன்னு நெனைக்காத நைனா….திருநல்வேலி அல்வா மாதிரி கண்ணு நம்ம தில்லிக்கேணி, சாரி வாத்தியாரே, மெட்ராஸ் டமிலு. தோ புட்சிக்க நம்ம டமில் டூ மெட்ராஸ் டமில் டிக்சனரி.

நாங்கள் கூட்டமாக நாட்டின் பல நடப்புகளை அலசி ஆராய்ந்து கொண்டு நேரத்தை பொன் போல செலவழிக்காமல், எங்களை தாண்டி போயிக்கொண்டிருக்கும் பெண்டிர்களை பார்த்து கொண்டிருப்போம். ஒரே ஒரு பெண் மட்டுமே கடந்து போகையில், எங்களின் சொல்லின் செல்வன், தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசியே கொல்லும், ஆருயிர் நண்பன், அன்பன் அன்புச்செல்வன் சொல்வான் “ஏய், லேடிஸ் வர்றாங்க வழிவிட்டு நில்லு”. டேய் நண்பா, அது லேடி. ஒருத்தர் தானே போறாங்கன்னு சொல்லப்போயி, அசிங்கம் அசிங்கமா கேட்டுட்டு போயிட்டான். என்னது?…..என்ன கேட்டானா? தோடா…ஒரு தடவைதான் அசிங்கப்பட முடியும். நான் என்ன பத்மபூஷன் விருது கிடைச்சுதுன்னா சொன்னேன்.

இல்ல என்டிடிவியில் வர்ற, சொன்னதையே வேறு வேறு விதமா கத்தும் பர்காவா.
பெப்ஸியை ஃபெப்ஸி என்றழைப்பதும், தர்ட்டி என்பதை த்தாட்டி என்று சொல்வதும் கூட எங்கள் தமிழ் சொத்தே.

சில வார்த்தைகளும் அதற்கான விளக்கங்களும்.

வாத்தியாரே – தன்னோடு வயதில் பெரியவரையோ, அல்லது மதிப்புமிக்கவரையோ அழைக்க உபயோகபடுத்தப்படும் சொல்.
நைனா – மகன் அப்பாவை அழைப்பதற்கும், அன்போடு பிறரை அழைப்பதற்கும். இது உருது மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
கினு – இது நிறைய வார்த்தைகளோடு சேர்த்து உபயோகிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு போயிக்கினு, வந்துக்கினு. ”கொண்டு” என்ற சொல்லை சுருங்கச் சொல்ல உதவுவது.
இஸ்துக்கினு – இழுத்துகொண்டு.
கஸ்டம் – கஷ்டம்
வவுறு – வயிறு, வவுத்தவலி – வயிற்று வலி
பழுப்பு – (கலர் இல்லீங்கோ) பைப்பு (Pipe)
நாஸ்டா – சிற்றுண்டி (Tiffin)
சர்ணா – சரவணா, சர்ளா – சரளா
ஊடால – நடுவில், இடையில்
இஸ்கூலு – பள்ளி
கரீட்டு – சரி
கலீஜு – அழுக்கு, குப்பை
கப்பு – நாத்தம்டா சாமி
கொடாசல் – தொந்தரவு
ரப்ஸர் – அதே சேம்..தொந்த்தரவு
வூட்டாண்டே – வீட்டுக்கிட்ட

இதபோல இன்னும் பல வார்த்தைகள் புழக்கத்துல இருக்கு. கடைசியா நான் ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கும் போது நடந்த ஒரு உரையாடல் இங்கே:-
இரு இளைஞர்கள் கடைக்கு சிகரெட் வாங்க வந்தார்கள்.
இரண்டில் ஒருவர்: வாத்தியாரே, ஒரு மோர்மெந்தால் குடேன்….

கடைக்காரர்: இந்தாப்பா.

இரண்டில் மற்றொருவர்: இன்னா வாத்தியாரே, நால்ருவா கொட்த்து வாய்ன்க்கிறேன், மெந்தால் இங்ககுது….மோரக் காணுமே? இன்னா தல…பத்தியா சின்னப்ப்சங்கன்னு சதாய்க்கிறியே?.

கடைக்காரர்: @#@)@#@)($@#)@(# ????????

இதை சற்றும் எதிர்பாராத அந்த கடைக்காரர் மேலே உள்ள எழுத்தக்கள் எல்லாம் தன் கண் முன்னே (மட்டும்) தெரிய ஸ்தம்பித்துப் போனார். இருந்தாலும் சில வினாடியில் சுதாரித்துக் கொண்டு சொன்னார்:

“பிரிச்சு பாரு நைனா, உள்ளார ஊத்தி வெச்சிருக்கேன்” என்றார்.

நம் தமிழனுக்கு இயல்பாகவே நையாண்டியும் நக்கலும் வரும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

இதமேரி பல மேட்டரு கீது வாத்தியாரே…ஒனக்கு இன்னா தெரியிதோ இங்க வந்து உன் பேனாவ குந்தவெச்சு ம்றுபதிப்பா குத்திட்டுபோ…

நம்ம சனம் இத்தப்பார்த்த ரொம்ப பெர்ம பட்டுக்கூன்…

6 Comments »

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.